வரப்பிரசாதத்திற்காக ஜெபம்

ஓ என் சர்வேசுரா, உமது பிள்ளைகளில் ஒருவனாகத் தேவரீர் என்னை ஏற்றுக் கொள்ளும்படியாக, ஜென்மப் பாவத்திலிருந்து என்னைக் கழுவி, முதல் தடவையாக என் இருதயத்திற்குள் உமது வரப்பிரசாதத்தைப் பொழிந்தருளிய அந்தக் கணத்தை நினைத்தருளும். ஓ என் சர்வேசுரா, என் பிதாவாயிருக்கிற தேவரீர், உமது எல்லையற்ற இரக்கப் பெருக்கத்தில், சேசு நாதருடைய பேறுபலன்கள், அவருடைய திரு இரத்தம் ஆகியவற்றின் வழியாகவும், தேவ தாய் கன்னி மாமரியின் வியாகுலங்களின் வழியாகவும், இந்த நாளில் உமது அதிமிக மகிமைக்காகவும், என் இரட்சணியத்திற்காகவும் நான் பெற்றுக் கொள்ள வேண்டுமென நீர் விரும்புகிற வரப்பிரசாதங்களை எனக்குத் தந்தருளும். ஆமென்.

ஓ நேச இருதயமே, என் நம்பிக்கையை எல்லாம் உமது பேரில் வைக்கிறேன்; என் பலவீனத்தைப் பற்றி நான் அச்சப் படுகிறேன். ஆயினும் உமது நன்மைத்தனத்தினின்று எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்.

ஓ மகா பரிசுத்த கன்னி மரியாயின் மாசற்ற திரு இருதயமே, சேசுநாதரிடமிருந்து ஒரு பரிசுத்தமும், தாழ்ச்சியுமுள்ள இருதயத்தை எனக்குப் பெற்றுத் தாரும். ஆமென்.