"ஆண்டவரே, நான் பார்வையடையச் செய்தருளும்'' (லூக். 18:41).
"நீ சர்வேசுரனுடைய வரத்தையும், எனக்குத் தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னாரென்பதையும் அறிந்திருந்தால், நீயே ஒருவேளை அவரிடத்தில் கேட்டிருப்பாய். அவரும் உனக்கு ஜீவ ஜலத்தைக் கொடுத்திருப்பார்'' (அரு.4:10). நீ அறிந்திருந் தால்! நன்றாய் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டியிருப்பதால், நீங்கள் அறிய வேண்டும், தெளிவாய்ப் பார்க்க வேண்டும் என்பது சேசுநாதருடைய விருப்பம். உங்கள் ஆத்துமத்தின் கண்களைத் திறந்து, ஞான வெளிச்சக் கதிர்களைப் பரப்பிக் கொள்ளுங்கள். பாருங்கள்.
சிநேகத்தால் வாழ்வதற்கு, முழு வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டும். வாழ்வு மேடும் பள்ளமுமானது; அது வருவதும் போவதுமாயிருக்கிறது. ஆதலால், அது ஆபத்தின்றித் தப்பும்படி ஒரு நிலையான மையம் அவசியம். நமது சமாதானத்திற்கு அஸ்திவாரம் பாறையாயிருக்க வேண்டும். இந்தப் பாறையும் இந்த மையமும் சேசுக்கிறீஸ்துநாதரன்றி வேறெதுவும் இருக்க முடியாது. அவரை அறிவதைவிட மேலான ஞானம் இல்லை. அவரோடு நெருங்கிப் பழகுவதைவிட உண்மையான பாக்கியம் இல்லை. நமக்கு வேண்டிய தெல்லாம் சேசுநாதரே. விசுவாச உறுதியால் வாழ்வது எவ்வளவு மகத்தானது, எவ்வளவு ஆறுதலுக்குரியது, எவ்வளவு பாதுகாப்பானது! சர்வேசுரன் நம்மிலும், நம் வழியாகவும், நமது விசுவாசத்தின் அளவுக்கேற்ப, தமது இரக்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவார்.
அன்பின் அற்புதம் செய்யுமுன், ""நீ விசுவசிக்கிறாயா?'' என்று சேசுநாதர் எப்போதும் வினவுகிறார். ""உங்களை நான் குணப்படுத்தக் கூடுமென்று நீங்கள் விசுவசிக்கிறீர்களா?'' என்று சேசுநாதர் குருடர் களைக் கேட்டார். அதற்கு அவர்கள் ""ஆம் ஆண்டவரே'' என்றார்கள் (மத்.9:27-30). அக்கணமே அற்புதமாய்க் குணமடைந்தார்கள்.
"மனிதர்கள் மனுமகனை யாரென்று சொல்கிறார்கள்? .... நீங்களோ என்னை யாரென்கிறீர்கள்?'' சீமோன் இராயப்பர் மறு மொழியாக: ""நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன்'' என்றார் (மத்.16:13,15,16).
நமது ஆண்டவருடைய சர்வ வல்லமையையும் அவரது இருதய இரக்கத்தையும் கூவி அழைத்தவர்களுக்கெல்லாம், ""நீ விசுவசிக்கக் கூடுமானால், விசுவசிக்கிறவனுக்கு சகலமும் கூடும்'' என்றே அவர் பதிலுரைக்கலானார். ""கிடைப்பது அரிதென்று எனக்குத் தோன்றின விஷயங்களைக் குறித்து எனது சிறிய விண்ணப் பங்களை அவர் முன்பாக சமர்ப்பித்த போதெல்லாம், ""நான் இவை களைச் செய்யக் கூடுமென்று விசுவசிக்கிறாயா? ... ஏனெனில் நீ விசுவசித்தால், எனது சிநேகத்தின் மகத்துவத்தில் எனது இருதயத்தின் வல்லமையைக் காண்பாய்'' என்ற வார்த்தைகளே என் காதில் சப்தித் ததாக எனக்குத் தோன்றிற்று'' என்று அர்ச். மார்கரீத் மரியம்மாள் சொல்கிறாள். ஆதலால், அர்ச்சியசிஷ்டதனத்துக்கு அடிப்படை யானது விசுவாசம் என்றபடியே, அப்போஸ்தலத்துவத்துக்கும் விசுவாசமே அடிப்படையானதென்று வெட்ட வெளிச்சமாகிறது.
அர்ச்சியசிஷ்டவர்களில் பெரும்பான்மையோர் நம்மைப் போலவே சாதாரண வாழ்வு வாழ்ந்தார்கள் என்பது நிச்சயம்; ஆனால், அவர்கள் தங்கள் உள்ளத்தில் சேசுநாதர் என்ற சூரியனைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூரியன் அவர்களை ஆச்சரியத் துக்குரிய விதமாய்ப் பிரகாசிப்பித்துக் கொண்டிருந்தது. இதன் நிமித்தம், அவர்கள் நம்மைப் போலவே மேடு பள்ளத்தில் நடந்து சென்றாலும், மாறுபாடில்லாத மனச் சமாதானத்தில் நிலைகொண் டிருந்ததாகத் தோன்றினார்கள். அவர்களுடைய நம்பிக்கையோ அந்தரங்கப் போராட்டங்களையெல்லாம் விட அதிக வலிமை பொருந்தியதாக இருந்தது.
என்னென்ன நேர்ந்தாலும், அவர்கள் அமைதியைக் கைவிடா திருந்தார்கள். அந்த உள்ளத்து அமைதியும், தளராத நம்பிக்கையும் அவர்களுக்கு எங்கிருந்து வந்தன?
இருளில் வாழ்ந்து, பிரகாசத்தைப் பகைக்கிற உலகமானது, அவர்கள் பைத்தியக்காரரென்று எண்ணிற்று; ஆனால் அவர்களது உள்ளத்தை இடைவிடாது ஊடுருவிக் கொண்டிருந்த மகத்தான ஒளியின் பரிசுத்த வெள்ளமே அந்தப் பைத்தியம் என்று சொல்ல வேண்டும். கத்தோலிக்கர்களில் கூட, சேசுநாதரின் சிநேகத்தைச் சரிவர உணர்ந்து விசுவசிப்பவர்களைக் காண்பது அரிது. அந்த சிநேகம் தெய்வீகமானது, அதன் அந்தரங்கத்தை அறிவதற்கு உயிருள்ள விசுவாசம் அத்தியாவசியம். அத்தகைய விசுவாசம் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு உரியது. ஆனால் யார் எவராயினும் விசேஷமாய் ஓர் அப்போஸ்தலன், சேசுநாதர் மட்டில் பற்றுதல் கொண்டு அவரது சிநேகத்தை விசுவசிக்கும் அளவுக்கு மட்டுமே, மெய்யான சர்வ வல்லமையை ஆதரவாகக் கொண்டு உலகத்தைச் சீர்படுத்தத் தக்க சக்தியைப் பெறலாம்.
சேசுநாதரே சுவாமி, அந்த அர்ச்சியசிஷ்டவர்களுக்குரிய சர்வ வல்லபத்தை எங்களுக்குத் தந்தருளும்; விசேஷமாய், உமது சிநேகப் பைத்தியத்தைக் கண்ணை மூடிக் கொண்டு விசுவசித்தவர் களின் வல்லமையை எங்களுக்குத் தந்தருளும். அப்போதுதான் அவர்களைப் போல் நாங்களும் உலகத்தை உமது இரத்தக் கறை பட்ட பாதங்களுக்கு அடிமையாகக் கொண்டுவந்து சேர்க்கக் கூடும்.
அர்ச்சியசிஷ்டவர்களின் விசுவாசத்தை உங்களுக்குக் கொடுக் கும்படி இந்நாட்களில் அவரை மன்றாடுங்கள். உங்களுக்கு விசுவாசம் உண்டு என்பது நிச்சயம்தான். ஆனால் அது ஆத்துமங்களை இரட் சிப்பதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளுக்கு ஆணி வேரும், ஆழ்ந்த நோக்கமுமாயிருக்கத் தகுந்த உயிருள்ள விசுவாசமா, நேச அக்கினி நிறைந்த விசுவாசமா? விசுவசிப்பதென்றால், ஏதோ தெளிவாயில் லாத, மங்கலான மறைபொருளின் மட்டிலுள்ள பொதுவான விசுவாச மல்ல, விசுவசிப்பதென்றால், பிதாவின் உத்தம வெளிப்படுத்தலான சேசுநாதருடைய கரங்களில் தாவி விழுந்து சகலத்தையும் அவருக்குக் கையளித்து, அவரிடம் இட்டுக்கொண்டு போகிற பாதையை நமக்குக் காட்டுவதற்காகப் பரலோகத்தினின்று இறங்கி வந்த வெளிச்சமான அவரிலேயே நாம் வாழ்வதாகும். அவர் இறங்கி வந்தார் என்று விசுவசிப்பது போதாது. அவர் நமது மத்தியில் தங்கினார், இன்னும் நமது மத்தியில் வாழ்கிறார் என்றும் விசுவசிக்க வேண்டும். அதற்கு உகந்தபடி நாமும் வாழ வேண்டும். சுருக்கமாய்ச் சொன்னால், சேசு நாதர்மீது நமக்குள்ள விசுவாசம், அவருக்கும் நமக்குமுள்ள நெருங் கின தெய்வீக சகோதர ஐக்கியத்தின் அந்தரங்கமாகும். நாம் அப்போஸ் தலர்கள் என்ற முறையில் உலகத்துக்கு ஒளியைத் தருவது நம் அலுவல் என்பதால், ""உலகத்தின் ஒளி நானே'' என்று சொன்ன அவரிடமே அந்த ஒளியைத் தேட வேண்டும். அபத்தத்தால் தவறிப் போயிருக் கிற அநேக நிர்ப்பாக்கிய ஆத்துமங்களில் இந்த ஒளி பிரகாசிப்பதாக! ""ஆண்டவரே, நான் பார்வையடையச் செய்தருளும்'' என்று குருடன் கூவினான். நாமும் அவ்வசனத்தைச் சிறிது மாற்றி, ""ஆண்டவரே, நான் உம்மைப் பார்க்கச் செய்தருளும்'' என்று இடைவிடாது மன்றாடுவோமாக! ""உம்மைப் பார்த்து, உமது திரு இருதயத்துக்குள் பிரவேசிப்பேனாக. உம்மைப் பார்த்து, உம் சிநேகத்தின் போதகத்தால் சந்தோஷமாய் வாழ்வேனாக. உம்மைப் பார்ப்பதால், பூக்கள், நட்சத்திரங்கள், இன்னும் பூமியிலுள்ள சகல சிருஷ்டிகளின் மீதும் எனக்குப் பார்வை இல்லாமல் போக உமக்கு சித்தமானாலும் கூட, நான் உம்மைப் பார்க்கக் கடவேனாக'' என்று மன்றாடுவோம்.
இத்தகைய ஜீவியம் மோட்சத்தின் ஆரம்பமும், வாசற்படியு மாகும். ஏனெனில் சகலத்தையும் சர்வேசுரனாகிய வெளிச்சத்தில் பார்த்தறிவதே தேவ தரிசனமாகும். ஆதலால் சொல்லரிய அந்த தரிசனத்தை மிகுந்த விசுவாச உணர்வால், திரையின் வழியாகவாவது இப்போதே சுகிப்போமானால், பரலோகத்தில் நமக்குக் கிடைக்க இருக்கிற பேரானந்தத்தையும், இப்போது சிறிதளவு சுவைக்கிறோம் என்று சொல்ல வேண்டும். நாசரேத்தின் இல்லம் இத்தகைய மோட்சத்தின் ஒரு மூலையிலிருந்தது. இராஜாதிராஜனுக்கருகில் குடியிருந்தவர்களுக்கு, குழந்தையான சேசுநாதர், இளம்பருவ, வாலிப சேசுநாதரான தொழிலாளி, மற்ற அநேகரைப் போலத் தோன்றி னாரேயொழிய, அவரிடம் எந்த ஒரு விசேஷத்தையும் அவர்கள் காணவில்லை. ஆனால் மாமரியும், சூசையப்பரும் மரணத்துக்குரிய அந்தத் திரையினுள் மாம்சமான தேவ வார்த்தையானவரைக் கண்டார்கள்; சுயஞ்ஜீவியரான சர்வேசுரனின் திருச்சுதனை ஆராதித் தார்கள்; உள்ளந்தரங்கத்தில் சொல்லரிய ஆனந்தமும், இன்பமும் அனுபவித்தார்கள்.
நாசரேத்திலிருந்த விசுவாசமும், சிநேகமும் பொருந்திய வாழ்வைத் தியானித்து, அதைப் புதுப்பிப்போமாக. நமது வாழ்வில் பங்குபெற்றுக் கொள்கிற அவரோடு, கன்னிமாமரி, சூசையப்பரைப் போல நாமும் வேலை செய்யவும், துன்பப்படவும், போராடவும் கற்றுக்கொள்வோமாக. அவரையும் நம்மையும் பிரித்து வைப்பது நமது விசுவாசக் குறைதான். சிறிய புஷ்பத்தின் வாழ்க்கை வரலாறு, இந்தப் படிப்பினையை நாம் கண்டுணர்வதற்கு உதவியாயிருக்கும். அது அதன் சம்பந்தமாய்ப் புதிதான வழிகளை நமக்கு எடுத்துக் காட்டும். நாசரேத்தின் வாழ்வை, அர்ச். சூசையப்பருக்குப் பிறகு, குழந்தை தெரேசம்மாளான சிறிய புஷ்பத்தை விட அதிக நன்றாய் அனுபவித்துணர்ந்த அர்ச்சியசிஷ்டவர் எவருமில்லை என்று சொல் வதற்கு நியாயம் உண்டு. இந்தக் குழந்தை வேதபாரகர் உன் அழைத் தலுக்கும், அவளது அழைத்தலுக்கும் உகந்த வழியில் உன்னை நடத்திக்கொண்டு போகும்படி, அவளிடம் ஆலோசனை கேள்...
ஆனால் சேசுநாதர் ஒருவரே, அவர் மாத்திரமே நமது வாழ்வின் ஏக நோக்கமாயிருக்கும்படி, சகலத்திலும் அவரைக் கண்டு, அவரை நம்மருகில் வரவழைத்து, நம் ஆத்துமங்களில் அவரது முத்திரை பதிந்திருப்பதற்காக நாம் செய்ய வேண்டியதென்ன? அவரை மங்கலாய் மறைபொருளாய்ப் பார்ப்பது போதாது. அவ்வப் போது நமது ஆத்தும இருளைப் பிரகாசிப்பிக்கிற சூரியக் கதிரைப் போல் அவரை அவ்வப்போது நினைத்துக்கொள்வது போதாது. பரலோகத்திலும், நற்கருணைப் பேழையிலும் அவர் இருப்பதைப் பார்ப்பது போதாது. உனக்குள் அவர் இருப்பதைப் பார். உனது வாழ்வின் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், அநுதின அலுவலிலும், அவர் தமது ஞானத்தில் உனக்கு வருவிக்கிற இன்ப துன்பங்கள் ஒவ்வொன்றிலும் அவரைக் கண்டுகொள். அவர் உனக்குத் தரும் கணக்கற்ற வரங்களில் அவரைக் கண்டுகொள். அவர் கடந்து போகும்போதே, உன்னை ஆசீர்வதிக்கிறார் என்று உணர்வாயாகில், உடனே அவருக்கு நன்றி செலுத்து. ஏனெனில் நன்றியறிதல் ஏராள மான உபகாரங்களைப் பொழியச் செய்யும்.
உனது ஜெபங்களில், கோவிலில் செய்யும் ஜெபங்களிலும், வீட்டில் சொல்பவற்றிலும் அவரைப் பார். நீ ஜெபம் செய்ய உன்னை அவர் தூண்டுவதையும், எவ்விதம் ஜெபிக்க வேண்டுமென்று கற்பிப் பதையும், உனது ஆராதனை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள் வதையும், தமது தெய்வீக தாராள இரக்கத்துடன் உனது மன்றாட்டு களுக்கு மறுமொழி சொல்வதையும் பார்.
உனது அநுதின தொழில் அலுவலில் அவரைப் பார். உனக்குக் களைப்பு உண்டாகும்போது, அவர் உன் அருகில் இருப்பதைப் பார். அவரே களைப்புக்கு ஆளானார். உன் கரங்கள் வேலை செய்யும் போது, அவரது திரு இருதயம் நீ அவருடைய வரப்பிரசாதத்தோடு ஒத்துழைக்கும் அளவுக்கு, உன்னைத் திருப்திப்படுத்திக் கொண்டிருக் கிறது. அவர் உன்னோடு உன் வீட்டில் பந்தியில் அமர்ந்து புசிப் பதைப் பார்; ஆனால் விசேஷமாய், உனது இருதயத்தின் மட்டில் பசியும் தாகமும் கொண்டிருக்கிறார் என்றும், அதற்குக் கைம் மாறாகத் தம்மையே உனக்குத் தருவார் என்றும் கண்டுகொள்.
இரவில் நீ இளைப்பாறப் போகும்போது, அவரைப் பார். அருளப்பரைப் போல் அவரது இருதயத்தின்மேல் சாய்ந்து, உனது நித்திரையில் உனது மூச்சானது, ""சேசுவே, உம்மை நேசிக்கிறேன்'' என்று சொல்வதாக. இவ்வாறு, உன் கண்கள் நித்திரை கொள்ள, உன் இருதயம் விழித்திருக்கும்.
நீ எங்கெங்கே திரும்பினாலும் உனக்கு நேரிடும் பலி வேளையில் அவரைப் பார். சிலுவையில் அறையுண்ட சேசுவின் தரிசனம் உனக்குத் தைரியமும் சம்பாவனையுமாக இருக்கும். உனது அநுதின சிலுவையில் ஒரு துண்டை முதலாய் இழந்து போகாதே. சேசுநாதருடைய பாடுகளோடு உன் துன்பங்களை ஒன்றித்து வைக்க ஒருக்காலும் தவறாதே.
ஒருவருக்கும் தெரியாத அந்தரங்கத் துன்பங்களில், உனது ஜெத்சமெனி வேளையில் அவரைப் பார். சிரேனியன் எவனையும் தேடாதே. உன் காவல் சம்மனசானவரையும் கூப்பிடாதே. சேசுநாதர் உனக்குப் போதும், அவரைக் கூவி அழைத்து, அவர் உன் அருகில் இருப்பதை உணர்வாயாக. உனது தோழர்கள் உன்னை மறந்து கைநெகிழும்போது, அவர்கள் உனது விருப்பத்துக்கு உகந்தவாறு நடவாதிருக்கும்போது, உனக்கு உண்டாகும் மன வேதனைகளில் அவரைப் பார். அந்த வேளையில் உனது வியாகுலத்தை சேசுநாதர் சாந்தப்படுத்துவதைப் பார். அவர் சொல்வதைக் கேள்; ஏனெனில் பயனுள்ள அந்தப் பரிசோதனையால் சிருஷ்டிகளில் உன் நம்பிக் கையை வைக்கலாகாதென்று உனக்குப் படிப்பித்து, அவர் ஒருவரே நன்மையும், உண்மையுமானவர் என்று உனக்கு அழுத்தமாய்ச் சொல்கிறார்.
இருளும், சலிப்பும் நிறைந்த சமயங்களில், உன் சுபாவம் முழுவதும் உடைந்து தகர்ந்ததுபோல் இருக்கும்போது, உனது வறுமையும், நிர்ப்பாக்கியமும் அளவுகடந்து உன்னை அமிழ்த்திக் கொண்டிருப்பதாகத் தோன்றும்போது அவரைப் பார். அப்போது உன்னருகில் அவர் இருப்பதைப் பார். இருதயப் பற்றுதலோடு, ""சேசுவே, உமது சிநேகத்தை நம்புகிறேன், நம்புகிறேன்'' என்று கூப்பிட்டுச் சொல்.
சோதனைக்கான காற்றும், புயலும் உன்னைக் கவிழ்த்துப் போட்டுக் காயப்படுத்தக்கூடிய ஆபத்து சமீபித்திருக்கையில், அலைகளின் கொந்தளிப்பினூடே சேசுநாதர் தமது இருதயப் படகினுள் உன்னை வரவழைக்கிற குரலைக் கேள்; சிலவேளை, எஜமானர் தூங்குகிறாரென்று, இராயப்பரைப் போல் நீயும் நினைப் பாயாகில், அதிகமாய்ப் பயப்படாதே. ஏனெனில் சேசுநாதரோடு கூட அமிழ்ந்தினால், ஆழத்திலும் மோட்சத்தைக் கண்டடைவாய். தகுந்த வேளையில் அவர் புயலை அமர்த்தி, அலைக்கழிக்கப்பட்ட உன் ஆத்துமத்துக்கு சமாதானத்தை அளிப்பார். இருள் வேளையில் அவரது இருதயத்தை நம்பு.
நீ அமிழ்ந்திப் போய்க் குற்றவாளியானாய் என்று உணர்கிற ஒவ்வொரு தடவையும் அவரைப் பார். தமது சொந்த பலவீனம் உனக்கு தைரியத்தை அளிக்கும்படி, அவரே கல்வாரி மலைக்குப் போகும் பாதையில் கீழே விழச் சித்தமானார்; யார் எவர் இடறல்பட்டாலும், அவர் ஒருக்காலும் இடறல்பட மாட்டார். அவர் உண்மையாகவே நமது சகோதரனாகும்படி நமது மனுஷீகத் தைப் போர்த்திக் கொண்டார். ஆதலால் அதன் பலவீனத்தை மற்ற எவரையும் விட அவர் நன்றாய் அறிந்திருக்கிறார். உன் தவறுதல்கள் எத்தனையாகிலும், எவ்வளவு பெரிதாயினும், பயப்படாதே. அவர் பிதாவின் தயாளமானவர், தெய்வீக இரக்கமானவர், உனக்காகப் பாதாளமட்டும் இறங்குவார். அவர் நமக்காகச் செலுத்தின விலை மிகவும் உயர்ந்த விலை. ஆதலால் பிதாவினால் தமக்குக் கொடுக்கப் பட்ட ஆத்துமங்களில் ஒன்றை முதலாய் இழந்து போக அவர் எளிதில் விட்டுவிட மாட்டார். கள்ளர் கையில் அகப்பட்டுக் காய மடைந்து வழியோரமாய்க் கிடந்த நிர்ப்பாக்கியனைத் தனது கரங் களில் வாரி எடுத்த சமாரியனைப் பற்றி எவ்வளவு நேர்த்தியாய் அவர் வர்ணித்திருக்கிறார் என்று நினைத்துக்கொள். ஆராதனைக்குரிய இந்த சமாரியனின் சாந்தத்தையும் அன்பையும் அநுபவ வாயிலாய் அறியாதவர் உண்டா? குற்றத்தில் மூழ்கி, பாவக் குஷ்டம் உன்னை முழுவதும் மூடிக் கொண்டிருந்தாலும், அவர் கறைப்பட்ட உன் வஸ்திரத்தை மகிமைக்குரிய இராஜ உடையாக மாற்ற எப்போதும் தயாராயிருக்கிறார். இராயப்பர் அவரை மறுதலித்த பின் சேசுநாதர் தமது நன்றிகெட்ட அப்போஸ்தலனைத் தம் அன்பால் வெற்றி கொண்டு, அவரை உற்றுநோக்கின பார்வையை என்னென்று சொல்வோம்?
இருள் சூழ்ந்த வேளையிலும், தன்னந்தனியே தவிக்கிற வேளையிலும், ""உனக்கு சமாதானம் உண்டாவதாக, கலங்காதே, சமாதானமாயிரு, என்னோடு உனக்கு வெற்றி கிடைக்கும்'' என்று நமது இரட்சகர் கூப்பிட்டுச் சொல்கிறார்.
இறுதியாய், உனது அப்போஸ்தலத்துவத்தில் நேரிடக்கூடிய ஆயிரக்கணக்கான இடையூறுகளின் மத்தியில் அவரைப் பார், அவரை மட்டும் பார். புண்ணியவான்கள் என்றவர்கள் உன்னை ஆதரித்து உற்சாகப்படுத்துவார்கள் என்று எண்ணினாய். அவர்களோ எதிர் பாராத முட்டுக்கட்டைகளாய் நின்று உன்னை எதிர்க்கிறார்கள். நல்லவர்கள் உன்னை இவ்வாறு எதிர்த்து இடையூறு செய்ய சர்வேசுரன் அநுமதித்தது என்ன காரணத்துக்காக என்று அவருக்கு நன்றாய்த் தெரியும். இத்தகைய இடையூறு பெரிய வெற்றிக்குப் பெரும்பாலும் அறிகுறியாகும். நாம் அவரது மகிமையைத் தேடுவோ மாகில், மற்ற சமயங்களை விட அப்பேர்ப்பட்ட சமயங்களில்தான் தெய்வீக அன்பையும், ஞானத்தையும் அதிகமாய் நம்புவோம். சகலத் திலும் சேசுநாதரையே, அவரை மட்டுமே பார்த்து, அவரது அன்பில் மூழ்கிக் கிடப்போமாக! நமது ஆண்டவரின் இவ்வுலக வாழ்வு, மனுக்குலத்துக்காகச் செய்த பரித்தியாக முயற்சியேயன்றி வேறென்ன? இன்றைக்கும் அவ்வாறே இருக்கிறது. அவர் நம்மைத் தொடர்ந்து வந்து, நமது புண்ணியங்களோ, தப்பறைகளோ, நற்குணமோ, துர்க் குணமோ, சகலத்திலும் தமது மகிமையும், நமது நன்மையும் உண்டா கும்படி உறுதியான தீர்மானம் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்.
மற்றவர்களின் சத்துவங்களைக் கவர்ந்திழுத்து, அவர்களை வசப்படுத்துவது எவ்வாறு சாத்தியப்படும் என்று சொன்னது ஒருநாள் குழந்தை தெரேசம்மாளின் காதில் விழுந்தது. உடனே அவள், ""ஆ, சேசுநாதர் என்னை வசப்படுத்த எவ்வளவோ ஆசிக்கிறேன்! அவரது பிரியத்துக்கு என்னை முழுவதும் கையளிப்பது எனக்குப் பேரானந்த மாயிருக்கும்'' என்று கூவினாள். குழந்தை தெரேசம்மாள் உண்மை யிலும் சேசுநாதரால் வசப்படுத்தப்பட்டிருந்ததால்தான் அவளது வாழ்வு மகத்தான விசுவாச அற்புதமாயிருந்தது. கணவன், நண்பன், நேசன், மகன், இத்தகைய மானிடரை விட, சேசுநாதரின் மட்டில் ஓர் ஆத்துமத்துக்கு ஏன் அதிக உருக்கப் பற்றுதல் ஏற்படக் கூடாது?
சாஸ்திரிகளும், சித்திரத்தில் தேர்ந்த நிபுணரும், தங்கள் வேலையில் சித்தப் பிரமை கொண்டு, மனிதருடைய புகழ்ச்சியைப் பெறுவதற்காகச் சகலத்தையும் பரித்தியாகம் பண்ணத் தயாராயிருக் கிறார்களே. மகிமை துலங்கும் நமது அரசரின் அப்போஸ்தலர், சேசுக்கிறீஸ்துநாதரின் மட்டில் சிருஷ்டிக்கப்படாத அழகின் மட்டில், சம்மனசுக்களைச் சந்தோஷத்தில் மூழ்கச் செய்து, பரலோகத்தை மகிழ்விக்கிறவர் மீதுள்ள அன்பால் சித்தப் பிரமை கொண்டு கிடக்க லாம் என்பது நிச்சயம். நமது இருதயங்களை முழுவதும் அவர் சுதந் தரித்து, அவற்றை அன்பால் நிரப்பும்படி விட்டுவிடுவோமாக. அப்போது, அர்ச். பிரான்சிஸ் அசிசியாரைப் போல், ""என் தேவனே, என் சர்வமே!'' என நாமும் மெய்யாகவே கூவிச் சொல்லலாம்.
சேசுநாதரே, நீதியின் சூரியனே, உமது அப்போஸ்தலரைப் பிரகாசிப்பித்தருளும். உம்மையன்றி வேறெதிலும் அவர்களுக்கு இன்பமில்லாமல், நீரே அவர்களது ஏக ஏக்கமும் இன்பமுமா யிரும்.