அந்திய பெந்தகோஸ்து கும்பல் நமது பாரம்பரிய வழிபாடுகளை குறிப்பாக நமது ஆராதனைகளிலும் மற்ற வழிபாடு முறைகளிலும் நமது ஆலய நேர்ச்சைகளையும் பிறமத வழிபாடுகளை செய்கிறீர்கள் என்று தப்பறையான போதனைகளை நம்மீது வீசுகிறார்கள்!

அன்பு நண்பர்களே பிரிவினைவாதிகள் குறிப்பாக அந்திய பெந்தகோஸ்து கும்பல் நமது பாரம்பரிய வழிபாடுகளை குறிப்பாக நமது ஆராதனைகளிலும் மற்ற வழிபாடு முறைகளிலும் நமது ஆலய நேர்ச்சைகளையும் பிறமத வழிபாடுகளை செய்கிறீர்கள் என்று தப்பறையான போதனைகளை நம்மீது வீசுகிறார்கள்

பெந்தகோஸ்து கும்பல் சொல்வது இவைகளைத்தான்


1, மெழுகுத்திரி , விளக்க ஏற்றுதல்

2, சாம்பிராணி  , தூபம் காட்டுதல்

3, ஆலயங்களில் மொட்டையடித்தல்

4, கொடியேற்றறுதல்  , திருவிழா

5, பாதயாத்திரை

6, தேர் , சப்பரபவனி

7,  செபமாலை

8, உப்பு


மேல் உள்ள வழிபாடு மற்றும் திருதிகழ்வுகள் பிறமத்த்தை சார்ந்தவைகளா  இல்லை அதற்கான விவிலிய சான்றுகளும் பாரம்பரிய நிகழ்வுகளும் 

1,மெழுகுவர்த்திகள்


விடுதலைப் பயணம் - விப  25 31 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.

விடுதலைப் பயணம் - விப  25 37 அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்; முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.

லூக்கா - லூக்  11 33 “எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை; மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

ஆலயங்களில் ஏற்றப்படும் விளக்கு அந்நிய கலாச்சாரமா ????


2, சாம்பிராணி தூபம் காட்டுதல்

மலாக்கி - மலா  1 11 கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே” என்கிறார், படைகளின் ஆண்டவர்.

மத்தேயு : 2 : 11 - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

கடவுளை ஆராதனை செய்ய பயன்படுத்த தூபமும் சாம்பிராணியும் பயன்படுத்துவது மரபு


3, ஆலயங்களில் மொட்டையடிப்பது

எண்ணிக்கை - எண்  6 18 நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.

திருத்தூதர் பணிகள் - திப  18 18 பவுல் அந்தியோக்கியா திரும்புதல்

பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுத் தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்

பவுல் நேர்ச்சை மொட்டை அடித்தது அந்நிய கலாச்சாரமா ????


4, கொடியேற்றுதல் திருவிழா
 

திருப்பாடல்கள் - திபா  20 5 உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!

இணைச் சட்டம் - இச  16 15 உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய


5, பாதயாத்திரை

லூக்கா - லூக்  2 41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;

அதாவது நாசரேத்துக்கும் ஜெருசலேம் இடைப்பட்ட தூரம் 90 மைல்கள்  147 கிலோமீட்டர் தூரம்
பெரும்பாலும் கால்நடையாகத்தான் பயணம் இருக்கும்

காரில் ஆலயம் சென்றால் ரத யாத்திரை


6, தேர் அல்லது சப்பரம்

யோசுவா - யோசு  3 15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.

2 சாமுவேல் - 2 சாமு  6 15 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.

உடன்படிக்கை பேழையின் மாதிரிகள்தான் சப்பரம்


7. செபமாலை
 

எண்ணிக்கை - எண்  15 38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்;

எண்ணிக்கை - எண்  15 39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவு கூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.

ஆடைகளின் ஓரங்களில் இஸ்ராயல் மக்கள் ஏற்படுத்திய முடிச்சுகள் மறு உருபம் அடைந்து செபமாலைகளாக மாறியது

அன்னையோடிணைந்து ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இறப்பு விண்ணேற்பு வாழ்க்கைமுறைகளை தியானிப்பது செபமாலை

செபமாலை வாக்கியங்கள் அனைத்தும் விவிலிய வார்த்தைகள்

8, உப்பு


எண்ணிக்கை - எண்  18 19 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள “உப்பு உடன்படிக்கை” ஆகும்.


மத்தேயு - மத்  5 17 “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

2 தெசலோனிக்கர் - 2 தெச  2 15 ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.

💥கத்தோலிக்க திருச்சபை பாரம்பரிய புனித நிகழ்வுகள் அனைத்தும் விவிலிய உண்மைகளே 💥

💥❤️ஆண்டவர் இயேசுவுக்கு புகழ் 💥❤️💥❤️💥அன்பு தாய் மரியே வாழ்க💥❤️