கிறிஸ்தவ குடும்பத்தின் புனிதப்படுத்தும் பணி

''கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் நிலமையிலிருந்து எழும் கடமைகளுக்கும் மதிப்பிற்கும் ஏற்றவாறு வாழ தனிப்பட்டதொரு அருட்சாதனத்தின் வழியாக வலுப்பெறுகின்றனர்; ஒரு வகையில் திரு நிலைப்படுத்தப்படுகின்றனர். இந்தத் திருவருட்சாதனத்தின் ஆற்றலால் தங்களின் திருமண, குடும்பக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்களின் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் மனநிலையில் ஊறித் திளைத்தவர்களாய் அவர்கள் அதிகமதிகமாக, தங்களை நிறைவுடையவர் ஆக்குவதோடு ஒருவரொரு வரையும் புனிதப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர்கள் சேர்ந்து கடவுளை மாட்சிப்படுத்துகிறார்கள்.

இப்படியாக குடும்பச் செபத்தாலும் முன்மாதிரி யாலும் பெற்றோர்கள் வழிகாட்டிச் செல்ல, பிள்ளைக ளும் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து வாழும் எல்லோ ருமே மனிதத்தன்மை , மீ ட் பு, புனிதத்தன்மையின் வழியை மிக எளிதாகக் கண்டு பிடிப்பார்கள். மணமக் கள் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் மேன்மை யையும் பணியையும் கொண்டிருப்பதால், முதன் முதல் அவர்களைச் சார்ந்த கல்வி ஊட்டும் கடமையை, முக் கியமாக மறைக்கல்வி புகட்டும் கடமையை கருத்துடன் நிறைவேற்றுவார்களாக.

குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர்கள் என்ற என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனி தமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். நன்றி உள்ளத்துடனும் அன்புடனும் நம்பிக்கையுடனும் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு  ைக ம ா று புரி வர்.'' (இன்றைய உலகில் திருச்சசை இல. 48) (சங்க ஏடு: திருச்சபை இல. 41 ஐயும் 25 ஐயும் Casti Connubii n. 38-42 ஐயும் பார்க்க வும்)

''திருமணத்தின் வழியாக, வாக்களிக்கப்பட்ட ஆவியின் அருள் குடும்பத்தில் இருக்குமிடத்து கணவன் மளைவியர், பெற்றோர், பிள்ளைகள், சகோதரர் மத்தி யில் அருளால் ஊக்குவிக்கப்பட்ட பல துறைகளிலும், இறை அன்பைப் புலப்படுத்தும், திருச்சபையின் செப். வாழ்வுக்கு இட்டுச் செல்லப்படுவர்'' (Role of the Christian Family P. 31).