பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரும், சேசுநாதரால் விசேஷமாய்ச் சிநேகிக்கப்பட்டவரும், நாலு சுவிசேஷங்களில் ஒன்றையும், காட்சி ஆகமத்தையும் எழுதினவருமாகிய அர்ச். அருளப்பர் கர்த்தர் அவதாரமான ஏறக்குறைய 99-ம் வருஷத்தில் திருச்சபைக்குப் பொதுவாக இந்த நிருபத்தையும், பின்பு இரண்டு சிறு நிருபங்களையும் எழுதினார்.
அவர் எழுதின சுவிசேஷத்தில் எங்கும் விளங்குகிற தேவசிநேகமும் பிறர்சிநேகமும் இதிலேயும் முக்கியமாய் விளங்குகிறது.