மாசற்ற இருதயத்திற்கெதிரான ஐந்து நிந்தைகளின் விளக்கம்

ஐந்து முதல் சனிகள் ஏன் என்ற கேள்விக்குப் பதில் அளித்த நமதாண்டவர், மாதாவுக்கெதிராக ஐந்து பெரிய நிந்தைகள் இழைக்கப்படுவதால் ஐந்து முதல் சனிகள் என்று கூறினார்.  அவரே குறிப்பிட்ட அந்த ஐந்து நிந்தைகளையும் சற்று விரிவாக   இனி காண்போம்.

உலகமெங்குமுள்ள பதிதர்களும் பிரிவினைக்காரரும் எப்போதுமே தங்கள் பதிதங்களாலும் பிரிவினைக் கொள்கைகளாலும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தையும் துரோகமும் தேவதூ­ணமும் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  

1517-ல் தொடங்கி புராட்டஸ்டான்ட் பதிதம் மாதாவை அதற்கு முன் என்றுமில்லாத அளவு புறக்கணித்தும் தூற்றியும் நிந்தித்தும் வந்திருக்கிறது. 

1962ல் கூடிய சங்கம், பதிதருடனும் பிரிவினைக்காரருடனும் உறவாடி, அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் “எக்குமெனிசம்” என்ற தப்பறையில் விழுந்தது. அதிலிருந்து கத்தோலிக்கர்களும் கூட அநேகர் மாதாவைப் புறக்கணிக்கவும் சிலர் பழிக்கவும் வந்து விட்டார்கள்.  

எவ்வளவு வேதனைக்குரியது இது!  பகைவர்கள் செய்யும் நிந்தையை சொந்தப் பிள்ளைகளே செய்வது எவ்வளவு வேதனை தரும் காரியம்! இதனால் அவர்கள் தங்கள் ஆன்மாவை இழந்து நித்திய நரகத்தில் தள்ளப்படுவதை ஒரு தாயின் இருதயம் எப்படித் தாங்கும்?

முதல் நிந்தை: மாதாவின் அமலோற்பவம் மறுக்கப்படல்.

பதித சபைகளும்தான். 9-ம் பத்திநாதர் பாப்பரசர் விசுவாச சத்தியமாக அறிவித்த அமலோற்பவ சத்தியத்தை அவர்கள் யாரும் ஏற்கவில்லை. அவர்கள், மாதாவும் மற்ற எல்லாரையும் போலவே ஜென்மப் பாவத்தில்தான் உற்பவித்தார்கள் என்று தப்பறையாகப் பேசுகிறார்கள்.  அதுமட்டுமல்ல, மாதா கர்மப் பாவங்களையும் கட்டிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இதையே கீழ்த்திசை பிரிவினைக் கிறீஸ்தவர்களும் பின்பற்றுகிறார்கள்.  அவர்கள் மாதா மேல் கணிசமான பக்தி வைத்திருந்தாலும் மாதா அமல உற்பவமாயிருக்கிறார்கள் என்பதை ஏற்கவில்லை.  இவர்கள் அனைவரும் மாதாவை பாவ உலகத்திற்கே தீர்ப்பிடுகிறார்கள். இவர்களுடைய கருத்தை வேறு வார்த்தைகளில் சொன்னால் மாதாவும் நம்மைப் போல் பாவிதான்.  அவர்கள் மற்றப் பெண்களை விட எவ்வகையிலும் சிறந்திருக்கவில்லை என்கிறார்கள். ஆனால் மாதாவின் அமல உற்பவ மகிமையை அறியாத இவர்களுக்காக நாம் “அமலோற்பவ மரியாயே வாழ்க!  வாழ்க!” என்று வாழ்த்துவோம்.

இரண்டாம் நிந்தை: மாதா சர்வேசுரனின் தாய் என்ற உண்மையை மறுப்பது

மாதா சகல மனிதருக்கும் தாயாயிருக்கிறார்கள் என்ற உண்மையையும் மறுப்பது. பதிதரும் பிரிவினைக் கிறீஸ்தவர்களும் மாதா சர்வேசுரனின் தாய் என்று ஒரு சொல் அளவிற்கே ஏற்கிறார்கள்.  நடைமுறையில் அதற்கு நேர்மாறாக நடக்கிறார்கள்.  அவர்கள் உண்மையிலே சேசுவைக் கடவுள் என்று அங்கீகரித்து, அவருடைய மெய்யான தாயாக மாதாவை ஏற்றால், மாதாவை கடமைப்படியே கனப்படுத்துவார்கள். ஆகவே பதிதர்கள் மாதாவைப் புறக்கணித்து அவர்கள் ஜென்மப்பாவமும் கர்மப்பாவமும் உடையவர்கள் என்று சொல்லும்போது சேசுவையும் அவர்கள் கடவுளாக ஏற்பதில்லை.  ஏனென்றால், சேசு அவர்களுடைய கடவுளாயிருந்தால் அவருடைய தகுதி பெற்ற தாயை அவர்களால் புறக்கணிக்க முடியாது.

இப்போது புரொட்டஸ்டான்ட், பெந்தேக்கோஸ்துகளாய் மாறிக் கொண்டு வருகிற கோடிக்கணக்கான கத்தோலிக்க மக்களும், தப்பறையாளர்களுடன் தொடர்பு கொண்டு இதே தப்பறைகளைத் தாங்களும் பேசுகிறார்கள்.

மேலும் மாதாவை “இணைமீட்பர்,” “சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தி” என்ற உண்மைகளை மறுக்கிற சங்கச் சபையும் இதே நிலையில்தான் இருக்கிறது. மாதா “இணை மீட்பராய்” ஏற்றுக் கொள்ளப்பட அது சம்மதிக்கவில்லை. அதனால் மாதா சர்வேசுரனுடைய தாய், மனிதர்களின் தாய் என்ற உண்மைகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என சந்தேகமாயிருக்கிறது.    

ஆகவே நாமாவது “வாழ்க மனுக்குல இணைமீட்பர்” “வாழ்க சர்வேசுரனின் அன்னை” என முழு மனதோடு அங்கீகரித்து மாதாவை வாழ்த்துவோமாக!

மூன்றாம் நிந்தை: மாதா நித்திய கன்னிகை என்னும் உண்மையை மறுப்பது

ஒரு சில புரோட்டஸ்டான்ட் பிரிவுகளைத் தவிர மற்ற எல்லாப் பதிதர்களும், பெந்தேக்கோஸ்தர்களும் மாதாவின் மகிமையான அவர்களின் பழுதற்ற நித்திய கன்னிமையை மறுக்கிறார்கள். மாதா கன்னியாயிருந்து சேசு கிறீஸ்துவைப் பெற்றார்கள். ஆனால் அவர்களுக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்று பேசி மாதாவை இழிவுபடுத்துகிறார்கள். சுவிசேஷத்தின் சில வசனங்களைக் கண்டுபிடியாமலும் அவற்றைத் தப்பர்த்தம் செய்தும் தேவதாயைப் பழிக்கிறார்கள்.

இதிலே மிகவும் பரிதாபத்திற்குரியது என்னவெனில், நேற்றுவரை கத்தோலிக்கராயிருந்து, “மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே... பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே” என்று மாதா பிரார்த்தனையைச் சொல்லி வாழ்த்தியவர்கள், இன்று பெந்தெக்கோஸ்தருடன் சேர்ந்து மாதாவின் கன்னிமையைப் பழிக்கிறார்களே அதுதான். அது நம் தேவ அன்னைக்கு எப்படிப்பட்ட வேதனையளிக்கும்! 

மாதா உத்தம நித்திய கன்னிகையாயிருப்பதாலேயே உலகத்தில் இன்னும் கன்னிமையும் கற்பும் முற்றிலும் அழியாமல் கொஞ்சமாவது காப்பாற்றப்படுகிறது. அந்தப் பரிசுத்த கன்னிகை பழிக்கப்படுவதே உலகில் கற்புக் கெதிரான பாவங்கள் பெருகுவதற்கும் கன்னிமை இல்லாதபடி அழிவதற்கும் காரணமாகும்.  மாதாவின் பிள்ளைகளாகிய நாம் மாதாவின் களங்கமற்ற, தூய, மகா பரிசுத்த, நித்திய சத்திய கன்னிமையை பரிசுத்தரான சர்வேசுரனின் மகத்துவத்திற்கு ஜொலிக்கும் காணிக்கையாக சமர்ப்பித்து மாதாவின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகார ஆறுதலளிப்போமாக.

நான்காம் நிந்தை: குழந்தைகளின் உள்ளங்களிலிருந்து மாதாவின் அன்பை அகற்றி, அலட்சியத்தையும், பகையையும் ஊட்டும் துரோகம்.

இது ஒரு கொடிய விஷமுள்ள துரோகச் செயல்.  ஏனென்றால் எந்தக் குழந்தைக்கும் தாய் என்றால் இயல்பாகவே ஒரு பாசம் உண்டு. அதிலும் ஆண்டவரின் தாயை அறிகிற குழந்தை தன்னையும் மீறிய ஒரு அன்பினால் மாதாவுடன் பிணைக்கப்படுகிறது.  இந்த மாசற்ற இளம் உள்ளங்களின் பாசத்தை, அதையும் இதையும் சொல்லி அழித்து மாதாமேல் பற்று எதுவுமில்லாமல் செய்கிற துரோகச் செயல் நடைபெற்று வருகிறது.  

கத்தோலிக்க சமூகங்களிலேயே பள்ளிக்கூடங்களில் கூட இந்த வஞ்சகச் செயல் காணப்படுகிறது. “மாதா இல்லை, மாதா வேண்டாம், மாதாவைக் கும்பிடக் கூடாது” என்பன போன்ற விஷமான வார்த்தைகளால் குழந்தைகளின் மாதா அன்பு அழிக்கப்படுகின்றது. சில பசாசுக் குணமுடையவர்கள் குழந்தைகள் மாதாவைப் பகைக்கும் அளவிற்கு தங்கள் பேச்சாலும் மாதிரிகையாலும் மரியாயின் அமலோற்பவத்தை யார் மறுப்பார்கள்?  எல்லாப் புராட்டஸ்டான்ட் காரணமாயிருக்கிறார்கள்.  இது கூடுதலாக நாஸ்தீகம் பரவும் இடங்களிலும் தற்சமயம் சங்கச் சபையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.  

குழந்தை தன் தாயை நேசிப்பதைத் தடுத்து, அவ்வன்னையைப் பழிக்கும்படியும் பகைக்கும்படியும் செய்யும் துரோகம் எப்படிப்பட்டது!  எப்பேர்ப்பட்ட பாவம் அது! மாதாவின் மாசற்ற இருதயம் இதனால் எவ்வளவு துயரப்படும்!  இக்கொடிய நிந்தைக்காக நாமும் மாதாவுக்கு நம் உண்மையான அனுதாபத்தையும் அன்பையும் தெரிவிக்க வேண்டும்.  அதோடு எத்தனை குழந்தைகளிடம் மாதாவின் அன்பை ஊட்ட முடியுமோ அதைச் செய்து குழந்தைகள் நம் தேவதாயை அதிகமதிகமாக நேசிக்கச் செய்ய நம்மால் இயன்றதையயல்லாம் செய்வோமாக.

ஐந்தாம் நிந்தை: மாதாவின் பக்திப் பொருள்களைப் பழித்தல்.

சர்வேசுரனுக்கு நேரடியாக எந்தத் தீமையையும் சாத்தானால் செய்ய முடியாததுபோல் மாதாவையும் அவன் தீண்ட முடியாது.  “நீ அவள் குதிங்காலைத் தீண்ட முயற்சிப்பாய்” என்பதே சர்வேசுரனுடைய தீர்ப்பு.  முயற்சிக்க மட்டுமே அவனால் கூடும்.  ஆனால் வெற்றி பெற மாட்டான்.  ஆகவே சாத்தான் சர்வேசுரனை அவருடைய சிருஷ்டிகளைத் தாக்குவதால் அவருக்கெதிரான தன் ஆத்திரத்தை கொட்டித் தீர்ப்பது போல், மாதாவை அவர்களது திரு உருவங்களிலும் பக்திப் பொருள்களிலும் தாக்கி அவர்களுக்கெதிரான தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறான்.  தனக்கு இசைந்த மனிதர்களின் வழியாக இதைச் செய்கிறான்.

மாதாவின் சுரூபங்கள், படங்கள், ஜெபமாலை, உத்தரியம் ஆகிய பக்திப் பொருள்களை அழிக்கவும் அகற்றவும் அவமரியாதை செய்யவும் சாத்தான் தன்னால் ஆனதையயல்லாம் செய்து வருகிறான்.  விசே­மாக கடந்த மூன்றரை நூற்றாண்டு களாக இப்படி மாதாவை அவர்களின் பக்திப் பொருட்களில் அவமதித்தல் தீவிரமாக நடந்து வருகிறது.  புராட்டஸ்டான்ட் மதம் அதைத் தன் அடிப்படைக் கோட்பாடாகவே கொண்டிருக்கிறது.  நாஸ்தீக ரஷ்யாவில் பக்திப் பொருள்களை வைத்திருப்பதே ஒருவனைக் குற்றஞ்சாட்டப் போதுமானது. அங்குள்ள மக்கள் தங்கள் அன்புக்குரிய மாதாவின் படங்களைக் காப்பாற்ற என்ன பாடுபட்டார்கள்!  ரஷ்யா மனந்திரும்பும் வரையிலும் அது நீடிக்கும்.

பக்திப் பொருள்களை வைத்திருக்கவும் வணக்கம் செலுத்தவும் சுதந்திரம் கொண்டிருக்கிற நாம், அந்த உரிமை பறிக்கப்பட்ட மக்களுக்காக மன்றாடி, மாதாவின் பக்திப்பொருள்களில் அவர்களுக்குச் செய்யப்படும் நிந்தை அவசங்கைகளுக்குப் பரிகாரம் செய்வோமாக!

மரியாயே வாழ்க!