பலன்களின் பொக்கிஷம்.

கீழ்க்கண்ட மனவல்லய செபங்கள் 1938-ம் வருடம் ரோமாபுரியில் பிரசுரமான “Preces et Pia Opera” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு அதில் குறிப்பிட்ட எண்களுடன் அச்சிடப்பட்டிருக்கின்றன.

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே. ஆமென்.

சிலுவை அடையாளம் வரைந்து கொண்டால் 100 நாள் பலன்; தீர்த்தம் தொட்டு சிலுவை வரைந்தால் 300 நாள் பலன். (P.P.O. No. 631).

தளத்துக்கு கர்த்தராகிய தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், அவருடைய மகிமைப் பிரதாபம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. (300 நாள் பலன் எண் - 12)

என் தேவனே! என் சர்வமே! (300 நாள் பலன் எண் - 5)

என் தேவனே, என் சத்துருக்களிடத்திலிருந்து என்னை விடுவியும். - 58ம் சங்கீதம். 1. (500 நாள் பலன் எண் - 22)

ஆண்டவரே, எங்களுக்கு விசுவாசம் அதிகரிக்கச் செய்தருளும். - லூக் 17:5. (500 நாள் பலன் - எண் - 28)

என் ஆண்டவரே, நான் உம்மைச் சிநேகிக்கிறேன். (500 நாள் பலன் - எண் - 29)

சர்வேசுரா! பாவியாகிய என் பேரில் இரக்கமாயிரும். - லூ க் 1 8 : 1 3 . (500 நாள் பலன் - எண் - 14).

ஆண்டவரே! உம்முடைய கையில் என் ஆத்துமத்தை ஒப்புக் கொடுக்கிறேன். - சங். 30:6 (500 நாள் பலன் - எண் - 14)

சர்வேசுரா, எனக்கு உதவியாக நோக்கியருளும்; கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும். - ச ங் . 6 9 : 2. (500 நாள் பலன் - எண் - 19)

நித்திய பிதாவே! சேசுக்கிறிஸ்துநாதருடைய விலைமதியாத திரு இரத்தத்தை என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், உத்தரிக்கி றஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும், திருச்சபையின் அவசரங்களுக்காகவும், தேவரீருக்கு ஒப்புக் கொடுக் கிறேன். (500 நாள் பலன் - எண் - 188)

ஓ நல்ல சேசுவே! உம்முடைய திருக்காயங்களுக்குள்ளே என்னை மறைத்துக் கொள்ளும். (500 நாள் பலன் - எண் - 14)

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றிறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சிஷ்ட சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர். (10 வரு ப் பலன் - எண் - 169)

என் சேசுவே ! இரக்கமாயிரும். (300 நாள் பலன்.)

என் சேசுவின் மகா மதுரமான இருதயமே! நான் எப்போதும் மென் மேலும் உம்மை நேசிக்கச் செய்தருளும்.  (300 நாள் பலன் - எண் - 193)

சேசுவின் திரு இருதயமே! என் நம்பிக்கையை உமது  பேரில்  வைக்கிறேன். (300 நாள் பலன் - எண்- 195) |

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள சேசுவே, என் இருதயத்தை தேவரீருடைய திரு இருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும். (500 நாள் பலன் - எண் - 169)

சேசுவின் மதுரமான இருதயமே! என் சிநேக மாயிரும். (300 நாள் பலன் - எண் - 206)

சேசுவின் திரு இருதயமே, உம்முடைய இராச்சியம் வருக. (300 நாள் பலன் - எண் - 197)

தேவ நற்கருணையில் இருக்கும் சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும். (300 நாள் பலன்)

சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும். (300 நாள் பலன் - எண் - 211)

சேசுவின் திரு இருதயமே, என் மட்டில் உமக்குள்ள சிநேகத்தை விசுவசிக்கிறேன். (300 நாள் பலன் - எண் - 190)

எல்லாம் உமக்கே. சேசுவின் திரு இருதயமே! (300 நாள் பலன்)

சேசுவின் மகா பரிசுத்த இருதயம் எங்கும்  நேசிக்கப்படுவதாக! (300 நாள் பலன் - எண்- 192)

இஸ்பிரீத்து சாந்துவே, தேவரீர் எழுந்தருளி வாரும்; உமது விசுவாசிகளின் இருதயங்களை நிரப்பி உமது நேசத்தின் அக்கினியை அவர்களிடத்தில் பற்றியெரியச் செய்தருளும். (300 நாள் பலன்.)

சேசு, மரி, சூசை! (7 வரு பலன் - எண் - 255)

சேசு, மரி, சூசை! என் இருதயத்தையும் என் ஆத்துமத்தையும் உங்களுக்குக் கையளிக்கிறேன். (7 வரு பலன் - எண் - 589)

சேசு, மரி, சூசை, என்னுடைய கடைசி அவஸ்தையில் எனக்கு உதவி செய்தருளுங்கள். (7 வரு பலன் - எண் - 589)

சேசு மரி, சூசை, உங்களுடைய அர்ச்சிஷ்ட கூட்டத்தில் சமாதானமாய் மரிக்க உதவி செய்தருளுங்கள். (7 வரு பலன் - எண் - 589)

சேசுவே, மரியே, ஓ! நல்ல சூசையப்பரே! எங்களை எப்போதும் எங்கள் மரண அவஸ்தை யிலும் ஆசீர்வதித்தருளுங்கள். (300 நாள் பலன் - எண் - 255)

மரியாயே! (300 நாள் பலன் - எண் - 268)

எங்கள் லூர்து ஆண் வளே! எங்களுக்காக வேண்டிக்கொ ள்ளும் (300 நாள் பலன் - எண் - 272)

திருச்செபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொ ள்ளும். (300 நாள் பலன் - எண் - 359)

இரக்கமுள்ள தாயே, எங்களுக்காக வேண்டிக்கொ ள்ளும். (300 நாள் பலன் - எண் - 280)

வியாகுலமும், நேசமும், இரக்கமும் உள்ள மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (300 நாள் பலன் - எண் - 276)

மரியாயின் மதுரமான இருதய மே! என் இரட்சணியமாயிரும். (300 நாள் பலன் - எண் - 352)

ஓ! மாசில்லாமல் உற்பவித்த மரியாயே! உம்மைத் தேடி வருகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (300 நாள் பலன் - எண் - 280)

எங்கள் நம்பிக்கையான மரியாயே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். (300 நாள் பலன் - எண் - 275)

மரியாயின் மாசற்ற இருதயமே! இந்தியா வுக்காக  வேண்டிக்கொ ள்ளும் (300 நாள் பலன் - 15-ம் ஆசீர்வாதப்பர், எண் - 280)

ஓசிலுவையே, எங்கள் ஏக நம்பிக்கையே, வாழ்க. (500 நாள் பலன் - எண் - 157)

மின் நாடுகளுக்குப் பாதுகாவலான அர்ச். குழந்தை சேசு தெரசம்மாளே, எங்களுக்காக  வேண்டிக் கொள்ளும் . (100 நாள் பலன் - எண் - 531)