இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவசங்கீர்த்தனம் செய்யவில்லையென்றால் நரகம்தான் கிடைக்கும்!

" எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.
அருளப்பர் 20:23

உண்மைகளை உரக்க கூறினால், தவறுகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் எப்போதுமே பலவித நெருக்கடிகளையும், துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணம் நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து அடுத்த உதாரணம் நேற்றைய விழா நாயகர் புனித ஸ்நாபக அருளப்பர். ஏரோதின் முறையற்ற வாழ்க்கையை சுட்டிக்காட்டினார். அதற்காக சிறைத்தண்டனையை அனுபவித்தார். ஒரு கட்டத்தில் பணத்திற்காகவும், பகட்டிற்காகவும், ஆன்மாக்களை அடகு வைத்து அசிங்கமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள், எங்கே தங்களுடைய சுக போக வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி நயவஞ்சகமாக சூழ்ச்சி செய்து அவரைத்தீர்த்துகட்டினார்கள்.

அதே உண்மைக்காகவும், வாய்மைக்காகவும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் தலையை கொடுத்து மோட்சத்தில் தனக்கு நிலையான வாழ்வை தேடிக்கொண்டார்...

தலையே போனாலும் உண்மையையும், நேர்மையையும், தூய்மையையும், எளிமையையும் கடைசிவரை கடைபிடித்து “ பெண்களில் பிறந்தவர்களில் ஸ்ஞானபக அருளப்பரை விட சிறந்த மனிதர் யாரும் இல்லை” என்று ஆண்டவர் இயேசுவால் சான்றிதழ் வாங்கியவர், புனித ஸ்நாபக அருளப்பர் “

புனித ஸ்நாபக அருளப்பரே உம்மைப்போலவே உண்மையின் பக்கம் எதற்கும் அஞ்சாமல் நிற்கும் துணிவைத்தாரும்.

புனித ஸ்நாபக அருளப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !

இயேசுவுக்கே புகழ்!  மரியாயே வாழ்க!