மனுக்குலத்திற்கு வரப்போகிற சுத்திகரிக்கும் தண்டனையை எண்ணும்போது உள்ளம் பதறுகிறது. எழுத நினைக்கும் போது கை நடுங்குகிறது.

நீங்காத நித்திய இரக்கமுள்ள கடவுள் தம் அன்பின் சிருஷ்டிகளாகிய மனிதர்களைத் தண்டித்துத் திருத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 

முதலில் ஒரு தடவை வெள்ளப் பெருக்கால் உலகத்தை அதன் மிஞ்சிய பாவங்களுக்காக அழித்துத் தண்டித்தார். அது நோவேயின் காலம் (ஆதி. 7-ம் அதிகாரம்). 

அதன்பின் ஆபிரகாமின் காலத்தில் சோதோம் கொமோறாப் பட்டணங்களை அவற்றின் ஒருபாற் சேர்க்கையென்னும் இயல்புக்கெதிரான பாவ மிகுதிக்காக நெருப்பால் சுட்டெரித்தார் (ஆதி. 19-ம் அதிகாரம்).

அக்காலங்களில் மனிதன் விஞ்ஞானம் எனும் அஞ்ஞானத்தால் மமதை கொண்டு ஆண்டவரை நேருக்கு நேர் இப்படி எதிர்த்து நிற்கவில்லை. இந்த அளவிற்குப் பாவங்களின் வகையும் தொகையும் அளவைத் தாண்டவில்லை. 

ஜூலியா வெளிப்படுத்தலில் ஆண்டவரே கூறுகிறபடி: "வெள்ளப் பெருக்கின் நாட்களிலும், சோதோம் கொமோறா நாட்களிலும் நான் அழித்த ஜனங்கள் இன்று இருக்கிற ஜனங்களைப் போல் அவ்வளவு பாவம் நிரம்பியவர்களா யிருக்கவில்லை '' - (Jesus Calls us-1 - p.255).