எச்சரிப்பு, பூச்சாண்டி அல்ல, இரட்சிப்பு

தண்டனை பற்றி அறிவிக்கிற யாருக்குமே உலகத்தில் மதிப்பு கிடையாது. அவர்களை "அழிவின் தீர்க்கதரிசிகள் " (Prophets of doom) என்று உலகம் ஒதுக்கி விடும். 

சில சமயம் ஜெபத்திற்கும் தவத்திற்கும் மனந்திரும்புதலுக்கும் அழைக்கிறவர்கள் அழிக்கப்படுகிறார்கள். 

ஏனென்றால் உலகத்தில் உள்ள வரையிலும் உண்டு களித்திருக்கவே மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு இடையூறாக இருப்பதாகத் தாங்கள் கருதுகிறவர்களை அகற்றுகிறார்கள். 

தண்டனை அழிவு வந்து தாங்கள் நாசமானாலும் பரவாயில்லை, அதுவரையிலும் சுகபோகமாயிருக்கவே தேடுகிறார்கள். 

ஆனால் மனிதன் மிருகமல்லவே! அவன் இவ்வுலகில் நாசமாகி அத்துடன் முடிந்து விட மாட்டானே! 

அவனிடம் இருக்கிற அழியாத ஆன்மா நித்தியத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே! 

நித்தியத்தில் அவன் மகிழ்வாயிருப்பதல்லவா முக்கியம்! 

நித்தியத்தில் மனிதனை மகிழ்வாக வைத்திருப்பதற்காகவே இரட்சிக்கும் எச்சரிப்புகள் கொடுக்கப் படுகின்றன. 

சொற்பக்கால சுகபோகத்திற்காக நித்திய மகிழ்வை வேண்டாமென்பவனைப் போல் மதியீனன் வேறு இருக்க முடியுமா? 

ஆகவே இத்தகைய எச்சரிப்புகளை நாம் வரவேற்க வேண்டும். அவற்றிற்குக் காது கொடுக்க வேண்டும். 

மனந்திரும்பி வாழ்க்கையை நல்லதாக ஆக்க வேண்டும். 

எச்சரிக்கிற சர்வேசுரனுடைய இரக்கமுள்ள திட்டம் அதுவே.