கிறிஸ்தவ திருமணமும், குடும்ப வாழ்வும் முறை கேடான ஒன்றிப்பு, விபசாரம், மலடாக்குதல், கர்ப்பத் தடை முறைகள், கருச்சிதைவு, விவாகரத்து, பதிவு மணம், கைவிடுதல் போன்ற தீய சக்திகளால் தீவிர தாக்குதலுக்கு இலக்காய் இருக்கும் இக்காலத்தில், குடும்ப வாழ்வைப் புதிதாக அமைப்பதற்குக் காரசார மான பிரசாரந் தொடங்க வேண்டியது அவசியமாகி றது. இறையியல், தத்துவவியல் போன்ற துறைகளில் உள்ள ஒரு முதுமொழியின் படி ' 'ஒரு பொருள் சீர ழிந்து விடும் போது அதை ஆரம்ப அசல் நிலைக்குத் திருப்ப வேண்டுமாயின் அதைப் பற்றிய இறைத் திட் - டத்தை உணர்ந்தே திருப்ப வேண்டும் என்பதாம்.
அப்படியானால் திருமணத்தை அதன் பழைய அசல் நிலைக்குக் கொண்டு வர வேண்டுமாயின் அதைப் பற் றிய இறைத் திட்டத்தைக் குறித்து, நாம் சிந்தித்து அத்திட்டத்தின் பாதையில் நமது ஒழுக்க நெறிகளை அமைக்கப் பிரயத்தனம் எடுக்க வேண்டும். (Casti Connubii n. 100 - 101)
இத்தகைய புதுப்பித்தலுக்கு இடையூறாக உள்ளது கட்டுக்கடங்காத இச்சைகளின் வீறாகும். ''மு த லி ல் தன்னை படைத்த இறைவனுக்கு அவருக்குரிய தாழ்மை யான வணக்கமும் வழிபாடும் செலுத்தினாலன்றி, மனி தன் தனது இச்சைகளின் கெடுபிடியை மடக்க முடி யாது. எனவே, திருமணம் என்னும் புனித பந்தனத் தால் இணைக்கப்படும் தம்பதிகள் இடையே அத்தியா வசியமாகக் காணப்பட வேண்டிய முதற் பண்பு உள் ளார்ந்த இறையன் பாம். இவ்வன்பு அவர்களின் முழு வாழ்விற் சுவறுவதுமன்றி மனதிலும் இதயத்திலும் இறைவனின் மகத்துவத்தைப் பற்றிய ஆழ்ந்த வணக் கத்தையும் நிறைத்து விடும். (Casti Connubii n - 101)
திருமணத்தையும் குடும்பத்தையும் பற்றிய இறை வனின் பிரமாணங்களைக் கடைப்பிடிப்பதாயின் அவை யாவை என்று சந்தேகமின்றித் தவறுதலுக்கு இடம் இல்லாத வகையில் இலகுவிற் கண்டடைய வேண்டும். ஆகவே, இறையன்பும் அவருக்குப் பணி செய்ய ஆவ லும் இருக்கிற அதே வேளையில், திருச்சபைக்கும் உண்மையான பணிவான அமைச்சல் காட்டும் மனப்பான் மையும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒழுக்க நெறித் துறையில் அநேக விடயங்கள் பிறர் உதவியின் றி மனி தன் தானாக அறியக் கூடியதாயினும், இவற்றிலுங் கூட, அதாவது நல்லொழுக்கப் பாதையில் மாந்தரை நெறிப்படுத்தும் விடயங்களிற் கூட, உண்மையை எடுத் துரைக்கும் ஆசிரியையாகக் கிறிஸ்துவே திருச்சபையை ஏற்படுத்தியுள்ளார். ஆகவே, கிறிஸ்தவ விசுவாசிகள் தவறுகளிலும் ஒழுக்கக் கேடுகளிலும் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமாயின் தாய்த் திருச்சபைக் குப் பணிந்து நடப்பார்களாக ....... (Casti Connu bii n. 108 - 109)
உண்மைக் கிறிஸ்தவன், படிப்பறிவுள்ளவனும் சரி அற்றவனும் சரி விசுவாச, ஒழுக்க நெறி போன்ற விட யங்களில் திருச்சபையினாலே அதன் தலைமை ஆயர் ஆகிய பாப்பிறை மூலமாக வழி நடத்தப்படுவான். ஆயினும் திருமணத்தை இறைப் பிரமாணத்தோடு முற் றும் சரி ஒத்ததாக்கிப் புனரமைப்பதற்குத் திருச்சபைப் போதகம் எத்துணை உன்னதமாயினும், அது மாத்திரம் போதுமானதன்று. மணமாணவர்களுக்குத் திருமணத் தைப் பற்றிய அறிவுரைகள் போதியளவு போதிக்கப் பட்ட பின் அவர்கள் மேற்படி அறிவுரைகளையும் புனித ஒழுங்குகளையும் அனுசரிக்கத் திடசங்கற்பம் பூண்டவர் களாய் இருத்தல் அவசியம் .... கணவன் மனைவியர் பின்வருந் காத்திரமான புனித தீர்மானங்களை நிறை வேற்றுவார்களாக ;
திருமணத்தைப் பற்றிய எல்லாக் காரியங்களிலுந் தங்கு தடையின்றி இறைச் சட்டத்தையே கைக்கொள் ளுவார்கள்;
பரஸ்பர அன்பால் எப்பொழுதும் ஒருவருக்கொ ருவர் உதவி புரிவார்கள்;
திருமணக் கற்பைப் பேணிக் காப்பார்கள்;
திருமண பந்தனத்தைச் சீர் குலையார்கள்.
தாம்பத்திய உரிமைகளை எப்போதும் மிதமாகவும் கிறிஸ்தவ மனப்பான்மையோடும், சிறப்பாக விவாக அந்தஸ்தின் தொடக்கக் காலத்தில் அனுபவிப்பார்கள்
மேற்கூறிய தீர்மானங்களைக் எடுத்து நிறைவேற் றும் போது, தாங்கள் பெற்றுக் கொண்ட திருவருட் சாதனம் அதன் அந்தஸ்துப் போன்றவைகளைப் பற்றி யும் தியானிக்கும் போது, கிறிஸ்தவ கணவன் மனைவி யர் வலிமை மிக்க இறை உதவியும் பெறுகிறார்கள். தங்கள் குடும்பக் கடமைகளைச் செய்வதற்கும் பதவி களை வகிப்பதற்கும் தாங்கள் உறுதியளிக்கப்பட்டு அர்ப் பணிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் எக்காலமும் மனதில் வைத்திருக்கட்டும்; மெய்விவாகம் என்னும் திருவருட் சாதனத்தால் அழியாத முத்திரை பதிக்கப் படாவிடினும், அதன் பலாபலனாகிய அர்ப்பண வாழ்வு காலகாலமாக நிலைத்திருக்கும்.
ஆயினும் இவ்வருட் சாதனத்தால் வழங்கப்படும் அருளின் முழுப்பலாபலனை அநுபவிக்க வேண்டுமாயின் கணவன் மனைவியர் அதனோடு ஒத்துழைக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பு தங்கள் பொறுப்புக்களை மிக்க பிரமா ணிக்கத்தோடு நிறைவேற்றுவதில் அடங்கும் இயற்கை வரிசையில் இறைவன் நமக்கு வழங்குந் திடம் நமது முயற்சியாலும் சுறுசுறுப்பாலும் வளர்ச்சி அடைகிறது. உழைப்பும் சுறுசுறுப்பும் இல்லாதொழியின் அதுவுந் தேய்ந்து விடும். அவ்வாறே திருவருட் சாதனத்தால் அளிக்கப்படும் வரப்பிரசாத ஆற்றலை அதைப் பெறும் வரின் சொந்த உற்சாகத்தாலும் பயிற்சியாலும் வளம் பெறச் செய்தல் வேண்டும். தங்களிடத்திலுள்ள அந்த வரப்பிரசாத ஆற்றலை அவர்கள் அவசியம் செய்யா திருக்கட்டும். தங்கள் கடமைகள் எவ்வளவு கடினமா னவையாயிருப்பினும் உற்சாகத்துடன் அவற்றைச் செய் வதிற் கண்ணுங் கருத்துமாய் இருப்பார்களாக. இவ்வாறு இறை அருளின் ஆற்றல் நாளிலும் பொழுதிலும் வளர்வதை அவர்கள் அறிவார்கள்'' (Casti Connubii n. 115-117).
ஆறாம் சின்னப்பர் பாப்பிறையின் அருளுரையின் படி மணமாகுந் தம்பதிகள் தங்கள் கஷ்டங்களைத் துணி வுடன் எதிர்நோக்குவார்களாக. அவர்களின் இந்தப் பிரயாசையில் விசுவாசம், நம்பிக்கை துணை நிற்கும். நம்பிக்கையோ பொய்க்காது. ஏனெனில் நமக்கு அரு ளப்பட்ட பரிசுத்த ஆவியின் வழியாக கடவுளின் அன்பு நமது உள்ளங்களிற் பொழியப்பட்டுள்ளது (உரோ. 5 - 5). விடாப்பிடியான செபத்தால் இறை உதவியை இறைஞ்சுவார்களாக. எல்லாவற்றிற்கும் மேலாக இறை வனுக்கும் அன்பிற்கும் ஊற்றாகிய தேவநற்கருணையில் இருந்து அள்ளிப் பருகுவார்களாக. பாவத்தின் கோரப் பிடியில் அவர்கள் அகப்பட்டிருப்பினுங் கூடத் தைரியம் இழக்காதிருப்பார்களாக. இரக்கத்தின் ஆசனம் ஆகிய பச்சாத்தாபம் என்னும் திருவருட்சாதனத்தில் விடா முயற்சியுடன் தஞ்சம் புகுவார்களாக. அதனூடாகவே இறையிரக்கம் பொழியப்படுகிறது. இத்தன்மையாகவே மணவாழ்வின் முழு வாழ்வைப் பெற ஆற்றல் அடை QUITIT 501. (Humanae Vitae n. 25) (Refer also : Casti Connubii n. 105).