அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 05

மூப்பர்களாகிய குருக்கள் தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஞான மந்தையைத் தங்கள் வார்த்தையினாலும் மாதிரிகையினாலும் மேய்க்கவேண்டுமென்றும், சிறியோர் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்றும் கற்பிக்கிறார்.

1. ஆகையால், உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறீஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக் குப் பங்காளியுமாகிய நான் மூப்பர் களைக் கேட்டுக்கொள்ளுகிறதாவது:

* 1. மூப்பர்:- இவ்விடத்தில் மூப்பர் என்னுஞ் சொல், திருச்சபையின்மேல் அதிகாரம்பெற்ற குருக்களையும், மேற்றிராணிமார்களையுங் குறிக்கிறது.

2. உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல, கடவுளுக்கேற்க வலியமனதோடும், இழிவான ஆதா யத்தை நாடியல்ல, மனப்பிரீதியோ டும், (அப். 20:28; 1 தீமோ. 3:2-7.)

3. (கர்த்தருடைய) சுதந்தரவாளிகளின்மேல் அதிகாரம் செலுத்துகிற வர்கள்போலல்ல; நல்ல மனதோடும் மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணித்து வாருங்கள். (லூக். 22:25, 26; தீத்து. 2:7.)

4. இவ்விதமாய் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். ( 2 தீமோ. 4:8.)

5. வாலிபர்களே, மூப்பருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மை விளங்க நடந்துகொள்ளுங்கள். ஏனெ னில், சர்வேசுரன் ஆங்காரிகளை எதிர்த் துத் தாழ்ச்சியுள்ளவர்களுக்குத் தமது வரப்பிரசாதத்தை அளிக்கிறார். (உரோ. 12:10; இயா. 4:6.)

6. ஆகையால், சர்வேசுரன் உங்ளைச் சந்திக்கும் காலத்தில் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய வல்லமையுள்ள கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். (இயா. 4:10.)

7. அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர்மேல் உங்கள் சகல கவலைகளையும் வைத்துவிடுங்கள். (சங். 54:24; மத். 6:25; லூக். 12:22.)

8. மன அடக்கமும், விழிப்பும் உள்ள வர்களாயிருங்கள். ஏனெனில் உங்கள் சத்துருவாகிய பசாசு கர்ச்சிக்கிற சிங் கத்தைப்போல் யாரை விழுங்கலா மோவென்று தேடி, சுற்றித்திரிகிறது.

9. ஆகையால் நீங்கள் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதற்கு எதிர்த்து நில்லுங்கள். உலகத்திலுள்ள உங்கள் சகோதரருக்கும் இவ்வித துன்பங்கள் உண்டென்று அறிந்து கொள்ளுங்கள்.

10. கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார்.

11. அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

12. உங்களை மன்றாடவும், நீங்கள் நிலைபெற்று நிற்கிற இஷ்டப்பிரசாதம் சர்வேசுரனுடைய மெய்யான இஷ்டப்பிரசாதமென்று சாட்சி கொடுக்கவும், இதைச் சுருக்கமாய் எனக்குத் தோன்றுகிறபடி எழுதி உங்களுக்கு உண்மையுள்ள சகோதரனாகிய சில் வான் வழியாய் அனுப்பினேன்.

* 12. சில்வான் அல்லது சீலா என்பவர் இந்த நிருபத்தைக் கொண்டுபோனவர். இவர் அர்ச். இராயப்பருக்குத் தோழனாயிருந்தவர். (அப். 15-ம் அதி. 27-ம் வசனம் காண்க.)

13. உங்களோடு தெரிந்துகொள்ளப் பட்ட பபிலோனிலுள்ள திருச்சபை யும், என் குமாரனாகிய மாற்கும், உங்க ளுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள்.

*** 13. அர்ச். இராயப்பர் இவ்விடத்தில் தாமிருந்த உரோமாபுரியைப் பபிலோனென்று சொல்லுகிறார். ஏனெனில் அது பழைய பபிலோனைப்போல் அஞ்ஞானத்திலும் பாவாக்கிரமத்திலும், சுகசெல்வ வாழ்விலும் மிகுந்த பட்டணமாயிருந்தது.

14. பரிசுத்த முத்தத்தோடு ஒருவரொருவருக்கு மங்களஞ் சொல்லிக்கொள்ளுங்கள். கிறீஸ்துவுக்குள்ளிருக் கிற உங்கள் அனைவருக்கும் இஷ்டப் பிரசாதம் உண்டாவதாக. ஆமென்.


இராயப்பர் முதல் நிருபம் முற்றிற்று.