அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 03

சேசுக்கிறீஸ்துநாதருடைய கடைசி வரு கையைக் குறித்துப் பரியாசம் பண்ணுகிற வர்களை மறுக்கக் கிறீஸ்துநாதர் சீக்கிரத் தில் திடீரென வருவாரென்று ஒப்புவித்து, அவர் வரவுக்கு ஆயத்தமாயிருக்கச் சொல்லி, அர்ச். சின்னப்பர் எழுதின நிருபங்களை யும், மற்றும் வேத வசனங்களையும், சிலர் தங்களுக்குக் கேடாகப் புரட்டுகிறார்களென்றும் எச்சரித்து நிருபத்தை முடிக்கிறார்.

1. மிகவும் பிரியமானவர்களே, இதோ, இந்த இரண்டாம் நிருபத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இவ்விருநிருபங்களிலும்,

2. நான் உங்களுக்கு எடுத்துக்காட்டின பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களையும், உங்கள் அப்போஸ்தலர்களின் வாக்கியங்களையும், கர்த்தராகிய இரட்சகருடைய கற்பனைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி உங்கள் நேர்மையான மனதை எச்சரித்துத் தூண்டுகிறேன். (யூதா. 17.)

3. முந்தமுந்த நீங்கள் அறியவேண்டியதாவது: கடைசிநாட்களில் தங்கள் இச்சைகளின்படியே நடக்கிற பரியாசக் காரர் வந்து, பழிப்பு வார்த்தை நிறைந்த வர்களாய், (1 தீமோ. 4:1; யூதா. 18.)

4. அவருடைய வாக்குத்தத்தம் எங்கே? அவருடைய வருகை எங்கே? பிதாக்கள் மரணமானது முதல் சகல மும் சிருஷ்டிப்பின் ஆரம்பத்தில் எப்படியிருந்ததோ, அப்படியே நிலைத் திருக்கிறதே என்பார்கள். (எசே. 12:27.)

5. சர்வேசுரனுடைய வார்த்தையினாலே முந்தி வானம் உண்டாயிருந்த தென்பதையும், பூமியோ ஜலத்தினின்று தோன்றி, ஜலத்தால் நிலைபெற்ற தென்பதையும், (ஆதி. 1:2; 6:8; சங். 23:2.)

6. அவைகளாலேயே அப்போதிருந்த உலகம் ஜலப்பிரளயத்தில் அழிந்த தென்பதையும், அவர்கள் மனம் பொருந்தி அறியாதிருக்கிறார்கள். (ஆதி. 7:21.)

* 6. அவைகள் என்பது வானத்தையும் பூமியையும் குறிக்கின்றது. ஏனெனில் வானத்தினின்றும் பூமியினின்றும் ஜலப்பிரளயமுண்டாகிப் பூமியை அழித்தது.

7. இப்போதிருக்கிற வானமும் பூமியும் நடுத்தீர்வைக்கும் அக்கிரமிகளின் நாசத்துக்கும் குறிக்கப்பட்ட நாளிலே அக்கினிக்கு இரையாய்ப் போவதற்கு அந்த வார்த்தையினாலேயே காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. (2 தெச. 1:8.)

8. மிகவும் பிரியமானவர்களே, நீங்கள் இந்த ஒரு காரியத்தை அறியாதிருக்கப்படாது; அதாவது: கர்த்தர் சமுகத்தில் ஒருநாள் ஆயிரம் வருஷம்போலும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலுமாம். (சங். 89:4.)

9. சிலர் எண்ணுகிறபடி ஆண்டவர் தமது வாக்குத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தாமதிப்பதில்லை. ஆனாலும் அவர் ஒருவராவது கெட்டுப்போக விரும்பாமல், எல்லாரும் தவத்துக்குத் திரும்பவேண்டுமென்று விரும்பி, உங்களைப்பற்றிப் பொறுமையோடு சகித்து வருகிறார். (எசே. 18:23; 1 தீமோ. 2:4.)

10. கர்த்தருடைய நாள் திருடனைப்போல் வரும் அப்போது வானங் கள் சண்டப்பிரசண்டமாய் ஒழிந்து போம். பூதியங்கள் உஷ்ணத்தால் வெந்து உருகிப்போம். பூமியும் அதிலுள்ள சகல வேலைப்பாடுகளும் வெந்து அழியும். (மத். 24:42; 1 தெச. 5:2; காட்சி. 3:3; 16:15.) 

11. இப்படி இவைகளெல்லாம். அழிந்துபோகவேண்டியதால், நீங்கள் எவ்வளவோ பரிசுத்ததனத்தோடும், பயபக்தியோடும் நடந்துவரவேண்டும்.

12. ஆண்டவருடைய நாளின் வருகைக்கு எதிர்பார்த்துத் தீவிரித்துப் போங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து பூதியங்கள் அக்கினியின் உக்கிரத்தால் உருகிப்போம்.

13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாழும் புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். (இசை. 65:17; 66:22.)

14. ஆதலால், மிகவும் பிரியமானவர்களே, இவைகளை எதிர்பார்த்திருக்கிற நீங்கள் மாசும், கறையுமற்றவர்க ளாய் சமாதானத்தோடு அவர் சந்நிதி யில் காணப்படும்படி பிரயாசப்படுங்கள்.

15. மேலும், நமது ஆண்டவருடைய நீடிய பொறுமையை உங்களுக்கு இரட்சிப்பென்று எண்ணுங்கள். இப்படியே நமக்குப் பிரிய சகோதர னாகிய சின்னப்பர் தமக்கு அருளப் பட்ட ஞானத்தின்படிக்கு உங்களுக்கு எழுதியிருக்கிறார். (உரோ. 2:4.)

* 15. இவ்விடத்தில் சொல்லப்பட்ட நிருபம் அர்ச். சின்னப்பர் ஒருக்கால் அவர்களுக்குத் தனித்து எழுதியிருக்கக்கூடிய நிருபத்தையாவது, எபேசியருக்கு எழுதிய நிருபத்தையாவது குறிக்கிறது என்கிறார்கள்.

16. தம்முடைய சகல நிருபங்களிலும், இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அவர் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிவதற்கு அரிதாயிருக்கின்றது. கல்லாதவர்களும், நிலையற்றவர்களும் மற்ற வேதவாக்கி யங்களைத் தங்களுக்குக் கேடாகப் புரட்டுகிறதுபோல், இவைகளையும் புரட்டுகிறார்கள்.

* 16. இந்நிருபம் முதல் அதிகாரத்தின் கடைசியில் கண்டிருக்கிறபடி ஒருவனும் தன் சுய அபிப்பிராயத்தின்படி வேத வாக்கியங்களுக்கு வியாக்கியானமும் கருத்தும் சொல்லக்கூடாதென்று அர்ச். இராயப்பர் விலக்கியபின், இவ்விடத்தில்: கல்லாதவர்களும் நிலையற்றவர்களுமாகிய சிலர் அவ்விதஞ் செய்யத்துணிந்து, அறிவதற்கரிய வேதவாக்கியங்களைத் தங்களுக்கே கெடுதியாகப் புரட்டிக்கொள்ளுகிறார்களென்று எச்சரிக்கிறார். இப்படியிருக்க, அவனவன் தனக்குத் தோன்றியபடி வேதவாக்கியங்களுக்கு அர்த்தம் பண்ணிக்கொள்ளட்டுமென்று யாவர் கையிலும் வேதாகமங்களைக் கொடுக்கிறவர்கள், குழந்தை கையில் கூரான கத்தியைக் கொடுக்கிறவர்களுக்கு ஒப்பாய் கல்லாதவர்களும் நிலையற்றவர்களும் கெட்டுப்போக வழி பண்ணுகிறார்கள்.

17. நீங்களோ சகோதரரே, இவைகளை ஏற்கனவே அறிந்திருக்கிற படியால், மதியீனருடைய அறியா மையில் இழுபட்டு, உங்கள் சுய நிலைமையினின்று தவறிவிழாத படிக்கு எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். (மாற். 13:5, 33.)

18. இஷ்டப்பிரசாதத்திலும் நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்துவை அறியும் அறிவிலும் வளர்ந்து வருவீர்களாக. அவருக்கே இப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாகக்கடவது. ஆமென்.


இராயப்பர் 2-ம் நிருபம் முற்றிற்று.