எபேசியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 01

கிறீஸ்துநாதர் வழியாகச் சர்வேசுரன் நமக்களித்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரஞ்செய்து, சேசுநாதரைத் தேவ பிதா மரித்தோரினின்று எழுப்பி, திருச்சபைக்குத் தலைவராகச் சதாகாலமும் தமது வலது பாரிசத்தில் உட்காரச் செய்திருக்கிறாரென்று படிப்பிக்கிறார்.

1. தேவ சித்தத்தினாலே சேசுக்கிறீஸ்துநாதருடைய அப்போஸ்தலனாகிய சின்னப்பன் எபேசிலுள்ள அர்ச்சிக்கப்பட்ட சகலருக்கும், சேசுக் கிறீஸ்துநாதரிடத்தில் விசுவாசமுள்ளவர் களுக்கும் (எழுதுகிறதாவது):

* 1. எபேசு நகரம் சின்ன ஆசியாவின் மகா பேர்போன துறைமுகப்பட்டணமாம். இதில் உலகத்திலுள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றாகிய தியானா என்னும் பொய்த் தேவதையின் கோவில் இருந்தது.

2. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனாலும், கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவினாலும் உங்களுக்கு இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் உண்டாவதாக.

3. நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவர் கிறீஸ்துநாதரில் நம்மைப் பரலோகத் துக்காக எல்லா ஞான ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார். (2 கொரி. 1:3; 1 இரா. 1:3.) 

4. அவருடைய சமுகத்திலே நாம் பரிசுத்தரும் மாசற்றவர்களுமாய் இருக் கும்படிக்கு நம்மை அவர் அன்போடு கிறீஸ்துநாதரிடத்தில் உலக சிருஷ்டிப் புக்குமுன்னே தெரிந்துகொண்டபடி யே, (பரலோகத்துக்காக எல்லா ஞான ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வ திக்கிறார்).

5. அன்றியும் அவர் தமது திருவுள நோக்கத்தின்படி தம்முடைய வரப்பிரசாதத்தின் மகிமைக்குப் புகழ்ச்சியாக சேசுக்கிறீஸ்துமூலமாய் நம்மைத் தமக்கு சுவீகாரப் புத்திரராக முன்நியமகம் பண்ணி,

6. அந்த வரப்பிரசாதத்தைக் கொண் டே தம்முடைய பிரிய குமாரனிடத்தில் நம்மைத் தமக்கு உகந்தவர்களாக்கினார்.

7. அவருடைய வரப்பிரசாத பெருக்கத்தின்படியே இவருடைய இரத்தத்தால் நமக்கு இவரிடத்தில் பாவப் பொறுத்தலாகிய இரட்சணியம் உண்டாயிருக்கிறது.

8. அந்த வரப்பிரசாதத்தை அவர் சகல ஞானத்திலும், விவேகத்திலும் எங்களிடத்தில் ஏராளமாய்ப் பொழிந்து, 

9-10. தாம் நியமித்த காலங்கள் நிறைவேறும்போது பரலோகத்திலுள்ள வைகளும், பூலோகத்திலுள்ளவைகளு மாகிய சகலத்தையும் கிறீஸ்துவுக்குள் புதுப்பிக்கவேண்டுமென்று தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி தமக்குள் தீர் மானித்திருந்த தமது திருவுள இரகசியத் தை எங்களுக்கு அறிவித்தார். (கலாத். 4:4; கொலோ. 1:16, 18.)

11. கிறீஸ்துநாதர்மேல் முன்னே நம்பிக்கை வைத்தவர்களாகிய நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படியாய்,

12. தமது திருவுளத்தின் ஆலோசனைக்கேற்கச் சகலத்தையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானப்படி நாங்கள் முன் நியமிக்கப்பட்டு, அவருடைய சுதந்திரமாக அவருக்குள் அழைக்கப் பட்டிருக்கிறோம்.

13. நீங்களும் உங்கள் இரட்சணியத்தின் சுவிசேஷமாகிய சத்திய வாக்கியத்தைக்கேட்டு, விசுவசித்தபோது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ் பிரீத்துசாந்துவினால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள்.

14. சர்வேசுரன் தமது மகிமைக்குப் புகழ்ச்சியாகத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டவர்களை பூரணமாய் இரட்சிக்குமளவும் இஸ்பிரீத்துவானவர் நம்முடைய சுதந்திரத்துக்கு அச்சாரமாயிருக்கிறார்.

15. ஆகையால் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின்மேல் உங்களுக்குள்ள விசுவாசத்தையும், சகல அர்ச்சிக்கப் பட்டவர்கள்மேலும் உங்களுக்குள்ள அன்பையும் நான் கேள்விப்பட்டு,

16. இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என்னுடைய ஜெபங்களில் உங்களை நினைவுகூர்ந்து,

17. நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமாயிருக்கிறவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்குரிய ஞானமும் தெளிவுமாகிய இஸ்பிரீத்துவின் வரங்களை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

18. அவர் நம்மை அழைத்ததில் நமக்குண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு அவர் நியமித்திருக்கிற சுதந்திரமாகிய மகிமையின் ஐசுவரியம் ஏதென்றும்,

19. அவருடைய பராக்கிரம வல்லமையின் செய்கையின்படி விசுவசித்தவர்களாகிய நம்மிடத்தில் அவர் காண்பிக்கும் தமது வல்லமையின் மேலான மகத்துவம் ஏதென்றும் அறிந்துகொள்ளும்படி பிரகாசமுள்ள மனக் கண்களை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும் (மன்றாடுகிறேன்).

20. அவர் கிறீஸ்துவை மரித்தோரினின்று உயிர்ப்பித்ததினாலே இந்த வல்லமையை அவரிடத்தில் விளங்கப் பண்ணி, அவரை உன்னதத்திலே,

21. சகல பிராதமிகர், பலவத்தர், சத்துவகர், நாதகிருத்தியருக்கும் மேலா கவும் இவ்வுலகத்திலுமன்றி, மறு உல கத்திலும் சொல்லப்படுகிற சகல நாமத் திற்கும் மேலாகவும் தமது வலது பாரிசத்திலே ஸ்தாபித்து,

22. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினதுமன்றி, அவரைச் சர்வ திருச்சபைக்கும் தலை மையாகக் கொடுத்தார். (சங். 8:6; மத். 28:18.)

23. அந்தத் திருச்சபை அவருடைய சரீரமாகவும், எல்லாவற்றிலும் எல்லா முமாக நிறைந்து நிரப்புகிற அவருடைய பூரணமாகவும் இருக்கின்றது.