திருச்சபை வழுவாமை.

62. கதிர்களைத் தெளித்துத் திருந்தின நூற்படி வடிவோடு எழுதப்பட்ட சித்திரம் பிழையென்று, அதனைத் தீர்த்து ஒப்புரவாக்க இரு கண் குருடன் துணிந்தாற்போல, லுத்தேரும், கல்வீனும், அவர்கள் சீஷர்களுந் திருச்சபை வழுவிக்கொண்ட வழுக்களைத் துடைத்துச் செப்பனிடவந் தோமென்று வெட்கமில்லாமல் சொல்லி, வழுவாத திருச்சபைக் கற்பனைகளைக் கேட்பது நல்லதாயினும், திருச்சபை வழுவின பின்னர் இட்ட கட்டளை கேட்பது பாவம் என்பார்கள். அது எப்படியென்றால், கர்த்தர் திரு அவதாரம் பண்ணின 500 வருஷமட்டுந் திருச்சபை வழுவாமல் நடந்தபின்பு, முழுதுங் கெட்டு அழிந்து 1000 வரு ஷங் கிடந்ததன்மேல் , லுத்தேர் வந்து விழுந்த திருச்சபை யைப் பழைய நிலையில் நிறுத்தி விளங்கச் செய்தேனென் றும், சொன்ன 500 வருஷத்திற்குப் பிறகு உரோமாபுரிச் சபையுங் கெட்டு, அர்ச். பாப்புங்கள்ளனாக நின்று வழுவின தினால், இட்ட கற்பனை கேட்பது ஆகாதென்றும், கன்னி யாஸ்திரீகளைக் கற்பழித்தவனாய், ஆண்டவருக்குத் தந்த வார்த்தைப்பாடுகளை மிதித்தவனாய், பசாசைக் குருவாகக் கொண்டவனாய்ச் சகல பாவங்களை ஊன்றின உணர்வின னாய், மதிகெட்ட லுத்தேரும், இவனோடொத்த அக்கிர மித்தழிந்த கல்வீனுஞ் சற்றுங் கூசாமல் பிதற்றிச் சொல் லத் துணிந்தார்களென்று நாம் முன் சொன்ன தல்லோ இந்த அக்கிரமமான தப்பறை, இங்கே உலையில் போட்டு ஊதிப் பொன்னாகக் கீழ்த்திசைப் பதிதர் காட்டினதைக் கெட்ட செம்பாக நாமே காட்டி, அதனை மிதித்தெறிந்து திருச்சபை வழுவாமை ஒப்பிக்கத் துணிந்தோம்.

63.-- ஆகையால் பதிதர் சொன்னது மெய்யென்றால், 1,000 வருஷந் திருச்சபை இல்லாமல் உலகம் இருந்ததென்று சொல்லக்கடவோம். இப்படிச் சொன்னோமாகில் திருச்சபைக்குள்ளே அல்லாத ஈடேற்றம் இல்லாமையால், 1,000 வருஷம் உலகெங்கும் ஒருவரும் மோக்ஷக்கரை ஏறவில்லையென்று சொல்லவுங் கடவோம். ஆகிலும் இந்த அக்கிரமத்தை மதி கெட்டவனாயினும் அநுசரிக்கமாட் டான். அதனாலே திருச்சபை வழுவிக்கெட்டு அழிந்து இல்லாதே போயிற்றென்றும் சொல்லவுமாட்டான். மீள வும் அர்ச். மத்தேயுஸ் எழுதின சுவிசேஷம் 16-ம் அதிகா ரம் 18-ம் வசனத்தில் சேசுநாதர் திருவுளம் பற்றின தா வது: என் திருச்சபையைக் கல்லின் மேலே ஸ்தாபித்து உண்டாக்குவேன்; அதனை நரகங் கெடுத்துச் செயங்கொள் ளமாட்டாதென்றார்.

ஆகையால் ஒரு காலத்தில் திருச்சபை கெட்டுப்போய் இல்லா தாயின், அதனை நரகங் கெடுத்துச் செயங் கொண் டதாகச் சொல்லவேண்டியிருக்கும். ஆராகிலும் இதனைச் சொல்லிச் சேசுநாதர் திருவுளம் பற்றின வார்த்தை தப்ப றையாயிற்றென்று சொல்வானோ? இதற்குப் பதிதர் சொன் னபடி வழுவாத திருச்சபை இருக்கும் போது, 400-ம் வரு ஷத்திருந்த அர்ச். அகுஸ்தீன், உபதேசங் கேட்பவருக்கு விசுவாச மந்திரத்தை விரித்த முதற் புஸ்தகம் 6-ம் அதிகா ரத்தில் எழுதின தாவது: திருச்சபை மெய்ச்சபை, பொதுச் சபை இதுவே. இது எல்லாப் பதிதரோடு யுத்தஞ் செய்து கொண்டுவரும், யுத்தஞ் செய்தாலுந் தோற்கமாட்டாது. முந்திரிகைக் கொடியில் பலன் இல்லாத்துகள் வெட்டுண்டு பிரிந்தாற்போல பதிதர் எல்லாரும் இதிலே நின்று பிரிந்தார்கள். திருச்சபையோவெனில் தன் வேரிலே நின்று நிலைகொண்டது, அதனை நரகஞ் செயங் கொள்ளாதென் றார். ஆகையால் 500 வருஷத்திற்குப் பிறகு, திருச்சபை தன் வேரிலே நின்று பிரிந்து கெட்டதென்று பதிதர் பேசித் துணிவோடு எப்படிப் பிதற்றத் துணிந்தார்கள்.

64. - மீளவும் அர்ச். மத்தேயுஸ் எழுதின சுவிசேஷத்தின் 28. ம் அதிகாரம் 19-ம் வசனத்தில் சீஷர்களை நோக்கிச் சேசுநாதர் திருவுளம் பற்றின தாவது : உலகில் எங்கும் போய் எல்லோருக்கும் போதிப்பீர்களாக என்ற பின்பு, நாம் எந்நாளும் உலகம் முடியுந் தனையும் உங்களோடு இருப்போமென்றார். இதற்கு அர்த்தம் ஏதெனில், சத்திய வேதத்தைப் போதிக்க உலகெங்கும் உங்களை அனுப்பி னோம். எங்கும் வணங்கப்பட்ட பசாசு கொடிதாய் உங்க ளைப் பகைத்துக், கலகங்களைக் கிளப்பிக் கெடுக்கப் பிரயா சப்படுமாயினும், நீங்கள் பயப்படாமல் உறுதியாக இருங் கள். நாமே உங்களுக்கும், உங்களைப் பின் சென்றவர்க ளுக்கும் உதவியாக இடைவிடாமல் உலகம் முடியுமட்டுங் கூட நிற்போம் என்ற தாயிற்றல்லோ . ஆயினும் 1,000 வருஷமாக உலகில் எங்குந் திருச்சபை இல்லாதாயின், இந் தத் தேவ வாக்கியந் தப்பறையாகாமல் நிற்கும் வகை என்ன? எந்நாளும் இடைவிடாமல், திருச்சபை கெடாத படிக்குக் கூடநிற்போமென்ற சேசுநாதர் ஆயிரத்தெழுநூறு வருஷத்திலே ஆயிரம் வருஷமாகத் திருச்சபை கெடும்படி அதனைக் கைவிட்டதென்ன?

65.-- அதற்கு முன் சொன்ன அர்ச். அகுஸ்தீன் தாவீது இராசன் பாடின 101-ம் சங்கீதத்தின் மேல் 2-ம் பிரசங்கத்தில், தோனத்திஸ்தரென்னும் பதிதர் சொன்ன அபத்தங்களை மறுத்துக்கொண்டு வருகையில், அலங்கார வகையால் திருச்சபை சேசுநாதரோடு பேசினாற்போல தாம் எழுதினதாவது : என்னை விட்டுப் பிரிந்தவர்கள் என் மேல் தூறினதென்ன? கெட்டவர்கள் நானே கெட்டே னென்று சலஞ் சாதித்துச் சொல்வதென்ன? நான் முன் னிருந்த தொழிய இப்போது இல்லாமற் போனேன் என் பார்களோ? நான் வாழும் நாள் எத்தனையென்று எனக்கு அறிவிப்பீராக. திருச்சபை முன்னிருந்தது இப்போது இல்லையென்றும், திருச்சபை கெட்டு அழிந்ததென்றுஞ் சொல்லும் சிலருக்கு வேண்டி, எந்நாள் மட்டும் நான் இப் பூவுலகில் வழங்கி இருப்பேனென்று காட்டுவீராகவென்று திருச்சபை கேட்டதற்குச் சேசுநாதர் அறிவித்ததாவது: எந்நாளும், உலகம் முடியுந் தனையும் நாமே உங்களோடு கூட நிற்போமென்றாரென்று, இதெல்லாம் அர்ச். அகுஸ்தீன் எழுதிவைத்தார்.

66.- இப்படியல்லோ அர்ச். அகுஸ்தீன் காலத்துக் தோனத்திஸ்தரைப் போல இக்காலத்து லுத்தேரானிகளும், கல்வீனியானிகளுந் தாம் கெட்டழிந்தவர்களாகி, மாறாத சேசுநாதர் துணையும், உதவியுங்கொண்டு எந்நாளுங் கெடப் படாத திருச்சபை கெட்டழிந்ததென்று வெட்கமில்லாமற் சொல்லுகிறார்கள். சொன்னாலும் பூரண சந்திரனைப் பகைத்து நோக்கி, நாய்கள் குலைத்தாலும் அதற்குச் சந்தி ரன் அஞ்சாமலும் ஒளி குறையாமலும் இருளில் விளங்கி நடப்பது போல, ஆயிரம் பதிதர்கள் கூடித் திருச்சபைக் கெட்டதென்று குலைத்தாலும், திருச்சபை அதனால் ஒருக் காலும் முன் கெட்டதும், வழுவினதுமில்லை; இனிமேல் கெடவும், மயங்கவும் செய்யாமல் நாடோறும், உலகம் முடி. யுந்தனையும் மென்மேலும் விளங்கி வளர்ந்து நிற்குமென் பது நிச்சயந்தானே.