மிதம் அல்லது மட்டாயிருத்தல்

60. மட்டாயிருத்தல் என்பது என்ன?

இன்பத்தை அனுபவிப்பதிலுள்ள சுகத்தை மிதமிஞ்சி பொருட்படுத்தாமல் நமது கடமையை நிறைவேற்றத்தக்க மன உறுதியே மட்டாயிருத்தல்' எனப்படும்.

61. எல்லாவிதமான இன்பமும் கெட்டதா?

இல்லை. இன்பம் இறைவனது நன்கொடைகளுள் ஒன்று. நாம் ஆர்வத்துடனும், எளிதாகவும் நமது அலு வல்களைச் செய்வதற்கு உதவியாக இருப்பது. இந்த நோக்கத்துடன், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வரை அது நன்மையானது தான்.

62. இன்பம் தீமையாகிறது எப்படி?

இன்பத்தை அடைவதற்காகத் தீய காரியங்களைச் செய் தால் அல்லது நமது கடமையை அலட்சியம் பண்ணினால், இன்பம் தீமையாகிறது.

63. இன்பத்துக்காகவே என்று செய்யும் சில தீய காரியங்களைக் குறிப்பிடுக?

நாவினால் அடையும் சுவை இன்பத்துக்காக அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல், அளவுக்கு மீறி மது வகைகளைக் குடித்தல், தனியே அது பிறரோடு சிற்றின்பத்துக்கடுத்த கிரிகைகளைச் செய்தல், கடமையைச் செய்யாமல், விளையாட்டு வேடிக்கைகளில் பொழுது போக்குதல் ; நமது சக்திக்கு மேற்பட்ட விதத்தில் பந்தயம் வைத்தல், சூது விளையாடுதல் ; முதலியன.

64. எதிலும் மட்டாயிருக்கப் பயிற்சிப்பது எவ்வாறு?

இன்ப சுகங்களில் மட்டுத்திட்டமாயிருத்தல் உடலின்ப உணர்ச்சி உக்கிரமாய் நம்மைத் தாக்கு முன் அதை விலக்க முயற்சித்தல், பிறருடைய நன்மையை முன்னிட்டு, நமது இன்ப சுகங்களைத் தியாகம் செய்தல் துன்பத்தை தைரிய மாய் ஏற்றுக்கொள்ளுதல் இவை போன்ற பயிற்சிகளால் மிதமுடைமையை பழக்கத்துக்குக் கொண்டுவரலாம்.

65. இறுதியில் கூறியது (துன்பத்தைத் தைரியமாய் ஏற்றுக்கொள்ளுதல்) திடம் என்னும் புண்ணியத்தைச் சார்ந்தல்லவா? 

ஆம்; திடமும், மட்டாயிருத்தலும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடைய புண்ணியங்கள்.

66. இவையிரண்டும் தொடர்புடையவையாய் இருப்பதேன்?

இன்ப சுகத்தை வேண்டாம் என்று நீக்குவது மிகவும் சிரமமான காரியம். மனவுறுதி இருந்தால்தான் இவ்விதம் செய்ய முடியும். மேலும் நாம் இன்பத்தையே தொடர்ந்து அனுபவித்தால் நமது மன உறுதி குன்றி திடமற்றவர்கள் ஆகிறோம் துபை வருத்தங்களைச் சுகிக்கும் பழக்கம் இருந் தால் அவசியமான போது, இன்பத்தைக் கைவிடப் போது மான மன வலிமையையும், உறுதியையும் அடைவோம்.