அதிகாரிகளுக்குரிய கடமைகள்

1. அரசாங்க ஊழியர்களுடைய கடமைகள் எவை?

பொது நன்மைக்காக உழைத்து, சட்டங்களைச் சரிவர நிறை வேற்றி, முகத்தாட்சணியம் முதலிய உலக எண்ணங்களை முன்னிட்டு கடமைகளில் தவறாது சகலர்மட்டிலும் நீதி நியாயம் செலுத்தி, பிரஜைகளை நீதியுடன் பரிபாலிக்க வேண்டும்.  ஒருபோதும் லஞ்சம் வாங்கவே கூடாது.


2. ஆசிரியர்களுடைய கடமைகள் எவை?

ஆசிரியர்கள் தங்கள் வேலையைச் சரியாய்ச் செய்யத் தங்களைத் தகுதியானவர்களாக்கி, மாணவர்களின் ஆத்தும நன்மையை ஜாக் கிரதையாய்க் கவனித்து, அவர்களை நன்றாய்ப் படிப்பித்து, அவர் களுக்கு நன்மாதிரிகை காட்டவேண்டும்.  பிள்ளைகள் குற்றம் செய் யும்போது பொறுமையோடு அவர்களைக் கண்டித்துத் திருத்த வேண்டும்.  பிள்ளைகளில் ஓரிருவருக்கு விசேஷ அன்பு காட்டுதல் அருவருப்புக்குரிய காரியமானதால், அதை விலக்க வேண்டும்.


139. நான்காம் கற்பனையின்படி முதலாளிகளுக்கும் வீட்டெஜமான் களுக்கும் தங்கள் தொழிலாளர், ஊழியர் மட்டில் கடமைகள் உண்டா?

உண்டு. 

1.--இவர்களுக்கு நியாயமாய்ப் போதுமான ஊதியத்தைத் தர வேண்டும்.

2.--கிறீஸ்தவக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில் தடையயான்றும் செய்யாமலிருப்பதோடுகூட, போதுமான நேரமும் வசதியும் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.  ஞாயிறு முதலிய  கடன் திருநாட்களில் இதைப்பற்றி விசேஷ கவனம் செலுத்த வேண்டும்.


1. ஊதியம் என்னும் பதத்துக்கு அர்த்தம் என்ன?

சம்பளம், கூலி என்று அர்த்தமாகும்.


2. வசதி என்றால் என்ன?

சமயம் என்று அர்த்தமாம்.


2. ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கு அர்த்தம் என்ன?

உற்சாகப்படுத்த வேண்டும் என்று அர்த்தமாம்.


3. மேற்கூறிய கடமைகளைத் தவிர வேறு சில இல்லையா?

உண்டு.  

(1) சேசுகிறீஸ்துநாதரை முன்னிட்டு, எஜமானர்கள் வேலைக்காரர்களைத் தங்கள் சகோதரராக பாவித்து முழுமனதோடு சிநேகிக்கவேண்டும். “அவன் உன் ஆத்துமத்தைப் போல் உனக்கு இருக்கக்கடவான்; சகோதரனைப்போல் அவனை நடத்து” (சர். பிர. 33:31).

(2) நீதியுடனும், தயவோடும் அவர்களை நடத்த வேண்டும்.  “எஜமான்களே, உங்களுக்கும் மோட்சத்தில் ஓர் எஜமான் இருக்கிறார் என்று அறிந்து, உங்கள் ஊழியருக்கு நீதியும், நியாயமுமானதைக் கொடுங்கள்” (கொலோ.4:1).  “உன் வீட்டில் உன் வேலைக்காரரை அலைக்கழித்து உனக்குக் கீழ்ப்பட்டவர்களை உபத்திரவப்படுத்திச்  சிங்கத்தைப் போல இராதே” (சர்.பிர.4:35).

(3) கஷ்டத்துக்குத் தகுந்த கூலியைத் தரவேண்டுவதோடு அதை குறைக்காமலும் அல்லது அநேக நாள் தாமதிக்காமலும் கொடுக்க வேண்டும்.  ஒரு சில அல்லது அநேக நாள் தாமதித்தும் கூலி கொடுப்போர் பெரும் அநியாயம் செய்கிறார்கள். “அவன் வேலை செய்த நாளிலேயே சூரியன் அஸ்தமிக்குமுன் அவன் கூலியை அவனுக்குச் செலுத்திவிடக்கடவாய்”  (உபா.24:15).

(4) செய்யமுடியாத வேலைகளை அவர்கள்மேல் சுமத் தாமல், அவர்கள் சரீர செளக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தும், அவர்களுடைய வயதுக்கு மேற்பட்டதுமான அலுவலை அவர்கள்மீது சுமத்தக்கூடாது.

(5) தங்கள் ஊழியத்தின் நிமித்தம் அவர்கள் வியாதியாய் விழும்போது, அவர்களைப் பராமரித்து, சகலத்திலும் தயை இரக்கத் தோடும் பிறர் சிநேகத்தோடும் விசாரிக்க வேண்டும்.

(6) ஊழியர் தவறு செய்யும்போது அன்போடு கண்டிக்க வேண்டும்;

(7) தங்கள் நன்மாதிரிகையால் அவர்களை நல்ல கிறீஸ்தவர் களாக்கப் பிரயாசப்பட வேண்டும்.

(8) பிரமாணிக்கமுள்ளவர்களும், வயது சென்றவர்களுமான ஊழியர்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க வேண்டும்.  “அவனை வறுமையில் விட்டுவிடாதே” (சர். பிர. 7:23).