17. குணபான்மை உள்ளவனாயிருப்பது மிக முக்கியமான விஷயமா?
ஆம். மேலும் நற்குணபான்மை உள்ளவனாயிருப்பது மிகமிக அவசியம். ஏனெனில் இந்தக் குணபான்மையுள்ள வன் தன் வாழ்க்கை முழுவதையும் நீதி கடமைகளுக்கு ஏற்ற வகையில் ஒழுங்குடன் அமைத்துக்கொள்ள முடியும். திடீ ரென்று ஏற்படும் உணர்ச்சி தாக்குதல்களாலும், வேறு பிற காரணங்களாகப் புறத்தே எழும் நிகழ்ச்சிகளாலும், அலைக் கழிக்கப்படமாட்டான. தனது உயர்ந்த குறிக்கோளாகி வீடுபேற்றை அடைவதற்கேற்ற வழியில் தனது வாழ்க் கையை அமைத்துக்கொள்வான். குணபான்மையற்ற மாளி தனின் வாழ்க்கையும் குறிக்கோளும் காற்றினால் அலைக்கழிக் கப்படும்; துரும்புக்கு சமமாய் உறுதியற்றதும், நிலையற் றதுமாக இருக்கும்.
18. குணபான்மையினால் வேறுவிதமான பயன் உண்டா?
உண்டு; மனிதன் தனது காரியங்களைச் சரிவர செய்து தன் வாழ்க்கையைச் சிறப்புற அமைத்துக்கொள்வதற்குக் குணபான்மை மிக்க உதவியாக இருக்கும். கொள்கைகளை நன்கு உணர்வதால் தன் குற்றங்குறைகளை நன்குணர் வான். அவற்றை வேருடன் களை நதெறிய முயற்சி செய் வான். கோழைத்தனத்தாலும், உறுதியற்ற மனப்பான்மை யாலும் ஏற்படும் பலவிதமான குற்றங்கள் இவனிடம் இருக் காது. குணபான்மை உடையவன் குறித்த நேரத்தல் யாவும் செய்வான். கொடுத்த வாக்கை மீறாமல் தன வேலை களைச் சரிவர செய்து முடிப்பான. தட்டவட்டமான தீர்மானங்களைச்செய்து, அவற்றைத் திறமையுடன் செயல்படுத்து வான். பிறருடைய கண்ணுக்கு முன் ஒருவிதமாகவும், மறைவில் வேறுவிதமாகவும் நடக்கமாட்டான். சுருங்கச் சொல்லவேண்டுமானால், எல்லா விஷயத்திலும் அனைவருக் கும் திருப்திகரமாக நடந்துகொள் வான்.
உறுதியற்ற குணபான்மை உடையவன் அல்லது குண பான்மை இல்லாதவன் இதற்கு முற்றும் மாறாக நடப்பான். சமயத்துக்கு ஏற்றாற்போல் நடந்து, தன் விஷயத்திலும் சரி மற்றவர்கள் விஷயத்திலும் சரி, ஒழுங்கின்றி, நிலையற்றவித மாக-நாணலைப் போல் வளைந்து கொடுத்துக்கொண்டிருப் பான். அவனை நம்பி ஒருவரும் ஒரு காரியமும் செய்ய முடி யாது. இத்தகைய மனிதனோடு பழகுவது அனைவருக்கும் வெறுப்பாக இருக்கும். அவன் தனக்கும் பிறருக்கும் பய னற்ற பூண்டு என்பதே சரி.
19. குணபான்மைக்கும் வாழ்க்கைச் சட்டத்தை அனுசரிப்பதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?
மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனெனில் வாழ்க்கைச் சட்டம் நற்குணபான்மைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. நற்குணபான்மைக்கு கொள்கைகளும், ஆதாரங்களும் அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் எவ்வகையான கொள்கைகளும், ஆதாரங்களும், வாழ்க்கைச் சட்டத்தின் விளக்கமே தவிர வேறல்ல. தக்கது எது, தகா தது எது என்னும் இந்த அடிப்படை உண்மையை நன் குணர்வதால் குணபான்மை உள்ளவன் அதன்படியே நடக்க எப்போதும் தயாராக இருப்பான். துர்க்குண பான்மை உள்ளவன் அல்லது குணபான்மையே இல்லாத வன் அந்த உண்மையை மறந்தவனாய் அல்லது சமயாசம யங்களில் மட்டுமே அதைப்பற்றி நினைப்பவனாக இருப்பான்.
20. சோதனையை ஜெயிக்கவும், பாவத்தை விலக்கவும் குணபான்மை உதவுமா?
உதவும், உள்ளத்தில் தோன்றும் தீய உணர்ச்சிகளையும் மற்ற தீமைக்கான புறக்காரணங்களையும் எதிர்த்து வெற்றிகொள்வதற்கு அவசியமான மன உறுதியைக் குணபான்மை மனிதனுக்கு அளிக்கிறது.
நல்ல கொள்கைகளையுடைய புத்தியும், அவற்றை அனுசரிக்க எப்போதும் தயாராயிருக்கும் மனதும் ஒருவனுக்கு இருக்குமானால், அத்தகைய மனிதன் ஆபாச உணர்ச்சிகள் துவக்கும்போது அதை உணர்ந்து கொள்வான். அதை அடக்க உடனடியாக முயற்சி எடுத்துக்கொள்வான். அவ் வண்ணமே துர்மாதிரிகையும், வேறு புறக்காரணங்களும் தன்னைத் தீண்டாமல் இருக்கும்படி காத்துக்கொள்வான். அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய திடமும், மன உறுதியும் அவனிடம் இருக்கும்.