சேசுநாதர் சுவாமி தேவ மனிதன்

53. (27) ஆகையால் சேசுகிறீஸ்துநாதர் யார்?

நம்மை இரட்சிப்பதற்காக மனுஷனாய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுரனே யாம்.


1. அப்படியானால் சர்வேசுரனாகிய மட்டும் சேசுநாதர் யார்?

அர்ச். திரித்துவத்தின் இரண்டாமாளாகிய சுதனாகிய சர்வேசுரன்.


2. மனிதனாகிய மட்டும் சேசுநாதர் யார்?

நம்மை இரட்சித்தவர்.