குருக்களுக்கு உதவுபவர்களுக்குக் கடவுள் வெகுமானம் அளிக்கிறார்!

அயர்லாந்தின் ஒரு சிற்றூரில் ஓர் எளிய கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் இருந்தார்கள். அவர் களிடம் உலகப் பொருட்கள் மிகக் குறைந்த அளவில் தான் இருந்தன. ஆனால் அவர்கள் பக்தியுள்ளவர்களாக இருந் தார்கள், தங்களால் முடிந்த போதெல்லாம் திவ்விய பலிபூசை கண்டு வந்தார்கள்.

அச்சமயம் ஓர் இளம் குரு, நோயாலும், அதிகப் படிப்பாலும் தமது மனநோய்க்கு உள்ளாகி, தமது குருத் துவக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவராக இருந்தார். அவர் இடம் விட்டு இடம் பயணம் செய்து கொண்டே யிருந்தார், மென்மையான, இனிய குணமுள்ளவர்; யாருக்கும் எந்தத் தொந்தரவும் தருவதில்லை.

இந்த நல்ல கடைக்காரர் தங்கள் எளிய வீட்டில் இந்த குருவுக்கு ஒரு சிறிய அறையும், உணவும் தருவது பற்றி தம் மனைவியிடம் பேசினார். மனைவியும் சம்மதித்தாள். அந்தக் குரு அவர்களுடைய அன்பான அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, சில வருடங்கள் அவர்களோடு தங்கியிருந்தார். நினைத்தபோது வெளியே போவார். கண்ட நேரத்தில் திரும்பி வருவார். அவரால் வந்த பிரச்சினைகளை இந்தக் குடும்பத்தார் மிகுந்த தாழ்ச்சி யோடும், பொறுமையோடும் தாங்கிக் கொண்டு அவரை நேசித்து வந்தனர்.

கடைசியாக அவர் மரிக்கும் நேரம் வந்தபோது, திடீரென தம்முடைய மன நோயிலிருந்து அவர் பூரண குணம் பெற்றார். அவர் தம் மரணப்படுக்கையில் எழுந்து உட்கார்ந்தபடி, கடவுளை மிகுந்த பக்தியார்வத்தோடு கூவியழைத்து, இந்த நல்ல மக்களை அபரிமிதமாக ஆசீர் வதிக்கும்படி அவரிடம் மன்றாடினார். ''அன்பான ஆண்டவரே, உமது குருவாகிய எனக்கு அவர்கள் செய்தவைகளையெல்லாம் ஆயிரம் மடங்காக அவர்களுக்குத் திருப்பித் தந்தருளும். ஞான ரீதியாகவும், உலக ரீதியாகவும் அவர் களை ஆசீர்வதித்தருளும்” என்று அவர் ஜெபித்தார். அதன்பின் அவர் அமைதியாக மரித்தார்.

என்ன ஆச்சரியம்! அந்த எளிய கடைக்காரர் செல்வத்திலும், வளத்திலும் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்தார் என்றால், அவருடைய மகன் ஒரு பெரிய கோடீஸ்வரன் ஆனான். அவனுடைய நான்கு சகோதரிகள் மட்டுமின்றி, அவனுடைய மனைவியின் நான்கு சகோதரிகளும் கூட துறவறக் கன்னியர்கள் ஆனார்கள். அந்த மனிதனும் முதிர்வயது வரை வாழ்ந்து, சமாதானத்தில் மரித்தான்.

குருமாணவர்களுக்கு மன தாராளத்தோடு உதவி செய்பவர்கள் மிகப் பெரும் வெகுமானங்களைக் கடவுளிடம் மிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் கடவுளுக்கு ஒரு நல்ல குருவானவரைத் தருவதை விட மேலான எதையும் அவர்களால் செய்யவே முடியாது.

ஒரு பக்தியுள்ள குருவைப் போல இந்த உலகிலுள்ள எந்த மனிதனும் கடவுளுக்கு மகிமை செலுத்த முடியாது.