தேவதிரவிய அநுமானங்கள். பொது விளக்கம்.

83. நமக்காக வேண்டி கர்த்தர் பாடுபட்டு அடைந்த பலன்களை நமக்குக் கொண்டுவிடும் எத்தனங்களாக சேசுநாதர் தாமே கட்டளையிட்ட தேவத்திரவிய அநுமானங்க ளுக்கடுத்த விஷயத்தில் பதிதர் எல்லாரும் பல தப்பிதங்களைச் சொல்லி, உரோமான் திருச்சபை படிப்பிக்கும் இராச வழியை விட்டு அகன்ற பின்பு, தாங்கள் இடறிக் கெட்டதென்று தோன்றாதபடிக்கு உரோமான் திருச்சபை வழுவினதென்று சொல்லக் கூசாமற் போனார்கள். அப்படியே பித்து மிஞ்சிக் கிடந்தவன் அமிர்தமுங் கசக்குமென்பான். அப்படியே நிறையக் கள்ளுண்டவன் வீடு அசையுமென்பான். ஆகையால் இதில் நாமும் பதிதருஞ் சொல்லுந் தன்மையைக் காட்டித் தீமுகத்தில் பொன்னும், செம்பும் வேறுபடத் தோன்றின துபோல, வேத உதாரண முகத்தில் நான் சொல்லுஞ் சத்தியமும், அவர்கள் பிதற்றும் அபத்தமுந்தானே கண்ணுடையவர்க்கெல்லாந் தோன்ற வெளியாக்கித் தருவோம்.

ஆகிலும் முந்தி தேவதிரவிய அநுமான மேதென்று காட்டக்கடவோம். பஞ்சேந்திரியங்களால் காணப்பட்ட பொருளாகி சர்வேசுரன் ஸ்தாபித்த கட்டளையினால் இஷ்டப்பிரசாதத்தைக் காட்டவும் பயக்கவும் வல்லமையுள்ளது தேவதிரவிய அநுமானந்தானே. இது இப்படியாகக் கொள்ள தேவதிரவிய அநுமானங்கள் எல்லாம் ஆண்டவர் ஸ்தாபித்த தன்மையால் இஷ்டப்பிரசாதத்தைப் புறத்தி அடையாளமாகக் காட்டவும், எத்தன காரணமாக உள்ளே பயக்கவும், அவைகளுக்குரிய சுபாவம் என்று சொல்லக்கடவோம். ஆதலால் அப்போஸ்தலர்மேல் காண்பித்த அக்கினி நாக்குகள் அவர்களிடத்தில் அன்று புதிதாய் வந்த இஷ்டப்பிரசாதத்தை அடையாளமாகக் காட்டினதொழிய, தானே அந்த இஷ்டப்பிரசாதத்தைப் பயத்ததல்ல என்ற தனால் அவைகள் தேவதிரவிய அநுமானம் என்று சொல் லக்கூடாது.

மீளவும் நல்ல கள்ளனுக்கு ஆண்டவர் சிலுவையின் பேரில் பாவங்களைப் பொறுத்துத் தமது இஷ்டப்பிரசாதத் தைத் தந்தது சரிதானே. ஆகிலும் ஞானஸ்நானத்திலும், பச்சாத்தாபத்திலும் ஆகிறாப்போல தந்த இஷ்டப்பிரசாதத் தைக் காட்ட அடையாளம் புறத்தில் இல்லாததினால் அது வுந் தேவதிரவிய அநுமானமல்ல. ஆகையால் தரங்கம் பாடியார் வேத சாஸ்திரம் என்னும் புஸ்தகத்தில் அநுமா னம் என்னுஞ் சொல்லை விட்டு, அவைகளை ஞானதிரவியம் என்றது அபத்தந்தானே. அவைகளால் பயக்கப்பட்ட இஷ் டப்பிரசாதமே ஞான திரவியம் என்னலாமொழிய, அதனை அடையாளமாகக் காட்டி, காரணமாகப் பயக்கும் ஞானச் சடங்குகளை தேவதிரவிய அநுமானங்கள் என்னக்கடவோம்.

34.- இதுவுந் தவிரப் புறத்தில் தோன்றின பொருள் உயிரிடத்தில் இஷ்டப்பிரசாதத்தை தானே உண்டாக்கத் தனக்கு வல்லமையில்லை; அந்த வல்லமை அதற்குப் படைப் புண்ட ஒருவராலும் வரக் கூடவுமில்லை. அப்படியே ஞான ஸ்நானத்தில் ஒருவன் தலைமேல்விட்ட தண்ணீர் அவன் பாவங்களைத் துடைத்து ஆத்துமத்தைக் கழுவ தானே சுபாவமாய் வல்லதுமல்ல; அதற்கு அந்த வல்லமை கொடுக்க மனிதருஞ் சம்மனசுகளும் வல்லவரல்ல. ஆதலால் சர்வே சுரன் ஸ்தாபித்த கட்டளையினால் தேவதிரவிய அநுமானங் கள் இஷ்டப்பிரசாதத்தை எங்களிடத்தில் பயக்க வல்ல தென்றோம். இந்த நியாயத்தைப் பற்றி அவைகள் எல்லாம் அப்போஸ்தலராலும், வேறொருவராலும் ஸ்தாபிக்கப்படா மல், சேசுநாதரால் தானே உண்டாக்கப்பட்டதென்பது சத்தியமாமே. இந்த சத்தியத்தை மறுத்தவன் திறிதேந் தென்னும் நகரிற் கூடின திருச்சபையால் சபிக்கப்பட்ட வன்றானே.

ஆகையால் மனிதர்தாமே நமக்கு தேவதிரவிய அநுமானங்களை கொடுப்பவராயினும் அவைகள் எல்லாம் ஆண்டவர் செய்கையாகவன்றி மனிதர் செய்கையாகத் தம் பலனைத் தரவுமில்லை. ஆகையால் அவைகளைக் கொடுக்கிற வன் பாவியானாலும் அதனால் தனக்குக் கேடாகுமல்லாதே அவைகளைப் பெற்றவனுக்கு அதனால் குறையொன்றும் இல்லை. மீளவும் அந்த நியாயத்தைப்பற்றி ஒவ்வொரு தேவ திரவிய அநுமானத்தைக் கொடுக்க சேசுநாதர் குறித்த வகை மனிதரொழிய, வேறொருவன் அந்த சடங்கெல் லாஞ் செய்தாலும், அந்த வார்த்தை எல்லாம் உச்சரித்தா லும், தான் பாவத்தைக் கட்டிக்கொள்வதல்லாமல் தேவ திரவிய அநுமானம் அதனால் ஆவதில்லை. அப்படி குருக்க ளன்றி யாராகிலும் அப்பத்தைக் கையில் ஏந்தி, ஆசை யோடு இது என் சரீரம் என்று ஆயிரம் முறை சொன்னா லும், அது நற்கருணையாகமாட்டாது.

குறிக்கப்பட்ட மனிதர் முதலாய் சேசுநாதர் ஸ்தாபித்த பொருளும், கட்டளையிட்ட வார்த்தையும், நினைத்த கருத் தும், இல்லாமற் செய்தால் தேவதிரவிய அநுமானமாகவுமாட்டாது. அப்படியே தண்ணீரினிடமாக கள்ளைக் கொ ண்டு ஒருவனைக் கழுவினாலும், தண்ணீரைக் கொண்டு கழு விக் கற்பித்த வார்த்தையில் ஒன்றிரண்டு விட்டாலும் தண் ணீரைக் கொண்டு கழுவிச்சொல்லவேண்டியதைச் சொல்லி சேசுநாதர் கட்டளையிட்ட தேவதிரவிய அநுமானத் தைத் திருச்சபை செய்யும் முறையோடு தானுஞ் செய்யக் கருத்தில்லாமல், விளையாட்டுக்காகிலும், சரீர அழுக்குப் போக்குவதற்காகிலும், ஒருவனைக் கழுவினால், அது ஞானஸ் நானமல்ல. இவை எல்லாவற்றிற்கும் நியாயமேதெனில், தேவதிரவிய அநுமானங்களுக்கெல்லாம் சேசுநாதர் ஸ்தாபித்த கட்டளையினால் மாத்திரம் பலனைக் கொடுக்க வல்லமை உண்டாகும். ஆகையால் அவர் கட்டளையிட்ட பொருளாகிலும், வார்த்தையாகிலும், கருத்தாகிலும், இல் லாதாயின் அவைகளுக்கு அந்த வல்லமையுமில்லை. அவைக ளும் வீண் சடங்குகளாகி தேவதிரவிய அநுமானம் என்னும் பெயரும் பலனும் அவைகளுக்கு இருக்கமாட்டாது.

85.- பின்னையுந் தேவதிரவிய அநுமானங்களைப் பெறப் போகிற யாவரும், அதன் பலனை அடைய அறிவுள் ளவராகில், அவர்களிடத்தில் விசுவாசமும், பச்சாத்தாப மும் வேண்டியது தானே ஆகிலும் அந்த விசுவாசமும், பச்சாத்தாபமும் அவர்களிடத்தில் இஷ்டப்பிரசாதத்துக்கு ஆயத்தஞ் செய்வதொழிய , அதனைப் பயக்குங் காரணமல்ல. அப்படியே ஒளிபடாத பொருளே, குறையில்லாத கண்ணா லுங் காணப்படாதல்லோ. ஆயினுங் கண்ணேயொழிய ஒளிதான் பார்வைக்குக் காரணமென்று சொல்வாரில்லை. இதனால் ஒளியானது பொருளைக் கண்டதென்று சொல்லா மல், கண்ணே ஒளிபட்ட பொருளைக் கண்டதென்பார். இதிலேயும் உரியமுறையோடு சொல்லும்படிக்குப் பார்வைக் குக் கண் எத்தன காரணமாகையால், பொருளைக் கண் கண்டது என்னாமல், மனிதன் கண்ணால் ஒளிபட்ட பொருளைக் கண்டான் என்பது நியாயமல்லோ?

அப்படியே ஞான ஒளியாகிய விசுவாச முதலிய ஆயத்தமில்லாதவனிடத்தில் தேவதிரவிய அநுமானங்கள் இஷ்டப்பிரசாதத்தைப் பயக்கமாட்டாதாயினும், அந்த இஷ்டப்பிரசாதத்திற்கு அவன் விசுவாசம் காரணமென்று சொல்லப்படாமல், ஒன்றில் விசுவாசத்தால் ஆயத்தப்பட் டவனுக்கு தேவதிரவிய அனுமானங்கள் இஷ்டப்பிரசா தத்தை பயத்த தென்போம். ஒன்றில் இதிலேயும் உரிய முறையோடு சர்வேசுரன் எத்தன காரணமாக தேவதிர விய அநுமானங்களைக் கொண்டு ஆயத்தப்பட்டவனுக்கு இஷ்டப்பிரசாதத்தை உண்டாக்கித் தந்தார் என்று சொல் லக்கடவோம்.

86 - இந்த சத்தியத்தோடு ஒவ்வாமல் பதிதர் பல அபத்தங்களைப் பிதற்றினார்கள். லுத்தேரும் அவன் பிரிய சீஷனாகிய மேலந்தோனும், கல்வீனும், பலருந் துவக்கத் தில் நினைத்த அபத்தத்தைத் தாங்களே மறைவில்லாமல் சொல்லி, தேவதிரவிய அநுமானங்கள் இஷ்டப்பிரசா தத்துக்குச் சற்றேனும் காரணமாகாமல் ஆண்டவர் நமக்குத் தந்த வார்த்தைப்பாடுகளுக்கு அடையாளமாக மாத்திரம் நிற்குமென்றும், விசுவாசம் ஒன்றே மனிதரிடத் தில் இஷ்டப்பிரசாதத்தைப் பயக்கிறதென்றும் எழுதி வைத்தார்கள். லுத்தேர் 1520-ம் ஆண்டில் பபிலோன் அடிமைத்தனம் என்னும் புஸ்தகத்தில் ஞானஸ்நான அதி காரத்தில் எழுதின தாவது:

விசுவாசமொழிய ஞானஸ்நானம் ஒருவருக்கும் இஷ் டப்பிரசாதத்தைக் கொடுக்கவுமில்லை, பிரயோசனமாகவும் இல்லை என்றான். மேலந்தோன் 1530-ம் ஆண்டில் தந்த அப்போலோகிய என்னும் புஸ்தகத்தின் 13-ம் பிரிவில் தேவதிரவிய அநுமானங்கள் ஆண்டவர் தந்த வார்த்தைப் பாடுகளைக் காட்டுஞ் சித்திரங்கள் என்றான். கல்வீன் கற் பனைகளின் 4-ம் காண்டத்து 14-ம் அதிகாரம் 17-ம் பிரி வில் எழுதினதாவது : தேவதிரவிய அநுமானங்கள் இஷ் டப்பிரசாதத்தைத் தந்து நம்மை ஆண்டவருக்கு உகந்தவர்களாக்குஞ் சடங்கல்ல. ஆண்டவர் நமதுமேல் வைத்த தயையை அடையாளமாகக் காட்டுதல் மாத்திரம் அவைக ளால் வரும் பலன் என்றான்.

இந்த அபத்தத்தை இப்படி வெளியாகச் சொன்ன பின்பு, உரோமான் திருச்சபையார் சொன்ன நியாயங்களை மறுக்கமாட்டாமையால், பதிதருக்குள்ள முறையோடு வேஷமாறி, அடிபட்ட கள்ளன் தன் திருட்டை மறைக்கும் படி போக்குத் தேடின துபோல, அவர்களும் முன் வெளி யாகச் சொன்ன அபத்தத்தை வெட்கத்தினால் உள்ளே அடக் கிப் புறத்தில் தோன்றும் முகத்தில் நாமே சொன்னபடி தாங்களுஞ் சொல்லத் துவக்கினார்கள். அப்படியே முன் காட்டின தன்மையால் ஞானஸ்நானம் ஒருவருக்கும் உத வாதென்ற லுத்தேர் 15 வருஷத்திற்குப் பிறகு 1535-ம் ஆண்டில் தந்த ஞானஸ்நான முதல் பிரசங்கத்தில் அவன் தானே சொன்னதாவது : நமக்கு உதவும்படிக்கு சரீரத்துக் கடுத்த நன்மைகளைக் கொடாமல், நமக்கு நித்திய இஷ்டப் பிரசாதத்தை, நித்திய தூய்மையை நித்திய சீவியத்தைத் தரும்படிக்கு ஞானஸ்நானம் ஸ்தாபிக்கப்பட்டதென்றான்.

கல்வீன் தானுந் திறிதேந்தென்னும் நகரில் கூடின திருச்சபை கற்பித்ததற்கு விரோதமாய் எழுதின புஸ்தகத் தில் ஏழாநாள் கூட்டத்தில் செய்த 5-ம் கற்பனை விஷயத் தில் அவன் சொன்னதாவது: தேவதிரவிய அநுமானங் கள் நமக்கு வரத்தகும் இஷ்டப்பிரசாதத்தின் எத்தன கார ணங்களென்று எப்போதும் நினைக்கக்கடவோமென்றான். மற்றப் பதிதரும் அப்படித்தானே பிறகு சொல்லிக்கொண்டு வந்தார்கள். இதில் நாம் சொல்லுஞ் சத்தியத்திற்கு ஒவ் வாதது ஒன்றும் இல்லையென்று தோன்ற மல்லோ? ஆகி லும் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயும் புறத்தில் ஆடென்று தோன்றுமே. ஆகையால் போர்த்தின வேஷத் தை நீக்கி உள்ளே பார்க்கில் ஓநாய் தானே தன் சுய உருவா கத் தோன்றக் காண்போம். இது தெளிவாகும்படிக்கு இந் நாட் பதிதர் சொல்லுந் தன்மையை அறியக் கடவீர்கள்.

விசுவாசமொழிய நமக்குப் பலனாக ஒன்றுமில்லாமல் அவனவன் செய்யுஞ் செபதப தான தரும் மற்றப் புண்ணி யங்களால் உத்தம வகையோடு செய்தாலும், இஷ்டப்பிர சாதம் வளரவும், மோக்ஷ பலனை அடையவுங் கூடாதென் றும், இஷ்டப்பிரசாதத்துக்கும் மோக்ஷ பலனுக்கும் விசுவா சமே மாத்திரங் காரணமாகுமென்றுஞ் சொல்லி, இதுவே தங்கள் சமயங்களுக்கு அஸ்திவார சத்தியமாக இந்நாட் பதிதர்கள் எல்லாரும் ஸ்தாபித்தார்கள். ஆகையால், தேவதி ரவிய அநுமானங்கள் இஷ்டப்பிரசாதத்தின் எத்தன கார ணங்களாகுமென்று அவர்களுஞ் சொன்னாலும், சொன்ன அஸ்திவாரத்தை விடாதபடிக்கு அதற்குச் சொல்லும் அர்த்தத்தைப் பார்க்குமிடத்தில், அவர்கள் துவக்கத்தில் வெளியாகச் சொல்லியிருந்த அபத்தத்தை மீளவுங் கக்கிக் கொண்டு வருகிறார்கள்.

அதாவது : தேவதிரவிய அநுமானங்கள் தாமே இஷ் டப்பிரசாதத்துக்குக் காரணமாகாமல், அதற்கு ஒன்றுந் தாமே செய்யாமல், விசுவாசத்தை மாத்திரம் மனதில் விளை விக்குஞ் சடங்குகளாகி, அவைகளால் விளைந்த விசுவாசம் ஒன்றே இஷ்டப்பிரசாதத்தைப் பயக்குமென்பார்கள். எப் படியோவெனில், ஞானப்பிரசங்கம் காதின் வழியால் விசு வாசத்தைக் கிளப்பி விளைவிப்பது போல தேவதிரவிய அநுமானங்கள் கண்ணின் வழியால் விசுவாசத்தை எழுப்பி விளக்கி, அந்த விசுவாசத்தால் மாத்திரம் இஷ்டப்பிரசா தத்தை அடைவோமென்பார்கள். ஆகையால் ஒருவன் திரும்பி இஷ்டப்பிரசாதத்தை அடைய ஞானப் பிரசங்கங் காரணமாயிற்றென்று ஒருவகையால் சொல்லப்படுமாப் போல் தேவதிரவிய அநுமானங்களும் அந்த வகையால் மாத்திரம் இஷ்டப்பிரசாதத்துக்குக் காரணமென்று சொல்லத்தகும்.

இது மெய்யானால் விசுவாசத்திற்கு முந்தி உபதேசஞ் சொல்ல சேசுநாதர் கட்டளை யிட்டாற்போல விசுவாசத் திற்கு முந்தி ஞானஸ்நானமுங் கொடுக்கக் கட்டளையிடாமலென்ன? அர்ச். மாற்கு சுவிசேஷத்தின் 16-ம் அதிகாரம் 15-ம் வசனத்தில் சேசுநாதர் அப்போஸ்தலர்மாருக்குத் திருவுளம் பற்றின தாவது: உலகமெங்கும் போய் எல்லா ருக்கும் உபதேசஞ் சொல்லி விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்றவன் கரை ஏறுவானென்றார். ஆகிலும் பதிதர் சொன் னது மெய்யானால் உபதேசத்தையும், ஞானஸ்நானத்தை யுங் கூட்டி நீங்கள் உபதேசஞ் சொல்ல, ஞானஸ்நானங் கொடுக்க விசுவசிக்கிறவன் கரை ஏறுவானென்பாரல்லோ. அப்படியே ஆரோக்கியத்திற்கு மருந்து காரணமாகையில் ஆரோக்கியத்தை அடைந்து மருந்து குடித்தானென்னாமல், மருந்து குடித்து ஆரோக்கியம் அடைந்தான் என்னக்கட வோம். தேவதிரவிய அநுமானங்களும் விசுவாசத்திற்குக் காரணமாக மாத்திரம் உதவுமானால், விசுவசித்து ஞானஸ் நானம் பெற்றவனென்னாமல், ஞானஸ்நானம் பெற்று விசு வசித்தவனென்பது நியாயமல்லோ.

மீளவுங் கண் வழியாக விசுவாசத்தை எழுப்பினதி னால் மாத்திரந் தேவதிரவிய அநுமானங்கள் உதவுமென் றால், சுரூப வணக்கம் ஆகாதென்று பதிதர் விலக்குவா னேன் ? கண் வழியாக விசுவாசம் உள்ளே எழும்பும்ப டிக்கு தேவத்திரவிய அநுமானங்களைப் பார்க்கக்கண்ட பாடுபட்ட கர்த்தர் சுரூபந் தாவிளையல்லோ . இதுவுந் தவி ரக் குழந்தைகளுக்குத் தந்த ஞானஸ்நானம் சென்மப் பாவத்தைத் துடைத்து, இஷ்டப்பிரசாதத்தைக் கொடுப் பது பதிதருக்கு நிச்சயந்தானே. ஆகிலும் அவர்களிடத் தில் விசுவாசம் இல்லையே. ஆகையால் இஷ்டப்பிரசாதத் திற்கு ஆண்டவர் ஸ்தாபித்த கட்டளையினால் ஞானஸ்நானச் சடங்கு காரணமாகுமொழிய, விசுவாசம் அதற்குக் கார ணம் அல்லவென்று சொல்லக்கடவோம்.

இதற்குப் போக்கிடமில்லாபல் லுத்தேர் முதற் கொண்டு பல லுத்தேரானிகள் சொல்லும் அபத்தமாவது: ஒருநாள் குழந்தை முதலாய் ஞானஸ்நானம் பெறும் க்ஷணத்தில் மாத்திரம் அறிவும், ஞானமும், விசுவாசமும் உடையதாகி, விசுவாசத்தால் இடப்பிரசாதத்தை அடைந் தவுடனே இரவலாக வந்த ஞானமும், விசுவாசமும் போய் ஒன்றும் அறியாமல் கிடக்குமென்றார்கள். மற்றப் பதித ருஞ் சிரித்து நகைக்க இந்தப் பரம இரகசியத்தை எந்த சுவிசேஷத்தில் லுத்தேர் கண்டெடுத்தானோ தானே சொல் லக்கடவான்.

87. - ஆகையால் இதில் வேத சத்தியமாக அநுசரிக் கத்தகுந் தன்மையாவது: அறிவுள்ளவர்களுக்குள்ளே விசு வாசம் இல்லா தவனுக்கு தேவதிரவிய அநுமானங்களால் நன்மை ஒன்றில்லை. ஆகிலும் விசுவாசம் உள்ளவனுக்கு சேசுநாதர் ஸ்தாபித்த முறையால் கொடுத்த தேவதிரவிய அநுமானங்களே மாத்திரம் இஷ்டப்பிரசாதத்தைப் பயக் கும் எத்தன காரணமாமே. அந்த விசுவாசம் ஆயத்த முறையால் வேண்டிய தொழியக் காரண வகையால் இதில் ஒன்றுஞ் செய்கிறதில்லையென்று வேதசாத்தியமாக அநுச ரிக்கக்கடவோம். இந்த சத்தியத்தை ஒப்பிக்கச் சொன்ன தல்லாதே இன்னம் பல வேத உதாரணங்களைச் சொல்லிக் காட்டுவோம்.

முதலாவது: அர்ச், அருளப்பர் சுவிசேஷத்தின் 3-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் சேசுநாதர் திருவுளம்பற்றின தாவது:- தண்ணீராலும், இஸ்பிரீத்து சாந்துவினாலுந் திரும்பப் பிறவாதவன் சர்வேசுரன் இராச்சியத்துக்கு உள் ளாக மாட்டானென்றார். இதில் அவர் விசுவாசமென்னும் பெயரும் நினையாமல் கரை ஏறுதற்குப் பேறுபெற ஞானஸ் நானம் வேண்டியதென்றார். கரை ஏற வேண்டின இஷ்டப் பிரசாதம் விசுவாசத்தினால் மாத்திரம் பதிதர் சொன்னாற் போல் வருவது மெய்யானால் எந்த வகையாலும் விசுவாசம் உண்டானால் போது மென்று ஞானஸ்நானம் பெறாமலும், கேட்ட உபதேசத்தினால் எழும்பின விசுவாசத்தோடு மாத் திரங் கரை ஏறுவோம் என்னக்கடவோம். சேசுநாதரோ வெனில், ஞானஸ்நானம் இல்லாமல் கரை ஏற்றம் இல்லை யென்றார். அப்படியே அர்ச். சின்னப்பர் தீத்தென்பவருக்கு எழுதின நிருபத்தின் 3-ம் அதிகாரம் 5-ம் வசனத் தில் கர்த்தர் திருவுளம் பற்றின தற்கு அர்த்தஞ் சொன்னாற் போல ஞானஸ்நானமே மறு பிறப்பென்றும், அதுவே இஸ்பிரீத்து சாந்துவினால் வரும் புது இயல்பென்றுஞ் சொல்லி அதைக்கொண்டு ஆண்டவர் நம்மை ஈடேற்றினார் என்றார்.

இரண்டாவது : அப்போஸ்தலர் நடபடி ஆகமத்தின் 2-ம் அதிகாரம் 38-ம் வசனத்தில் அப்போஸ்தலர் சொன்ன உபதேசத்தை விசுவாசத்தால் உட்கொண்டு, கரை ஏற ஆசையால் அதற்குச் செய்யவேண்டியது ஏதென்று கேட் டவருக்கு அர்ச். இராயப்பர் சொன்னதாவது: பச்சாத்தா பமுடையவராகி சேசுகிறீஸ்து கட்டளையிட்ட முறையால் உங்கள் பாவங்கள் பொறுக்கப்படும்படிக்கு ஒவ்வொருவன் ஞானஸ்நானம் பெறக்கடவானென்றார். இதோ அர்ச். இராயப்பர் அவர்களிடத்தில் கண்ட விசுவாசத்தோடு வேண்டின பச்சாத்தாபத்தையுங் கூட்டி, இவைகளால் ஆயத் தப்பட்ட பின்பு பாவப் பொறுத்தலாகவும், இஷ்டப்பிரசா தத்தை அடையவும், மீளவும் விசுவாசந் தேடாமல், ஞான ஸ்நானச் சடங்கு மாத்திரம் வேண்டியதென்றார்.

மூன்றாவது : அப்போஸ்தலர் நடபடியாகமத்தில் 19-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் அர்ச். ஸ்நாபக அருளப் பர் கொடுத்த ஞானஸ்நான மாத்திரம் பெற்ற சில பேர்களை எபெசி யென்னும் நகரில் அர்ச். சின்னப்பர் கண்டு சேசு நாதர் கட்டளையிட்ட ஞானஸ்நானம் பெறச் செய்தார். ஆகையால், அர்ச். அருளப்பர் ஞானஸ்நான வகை கரை ஏற்றத்துக்குப் போதாதென்று சொல்லக்கடவோம், ஆகி லும் அதில் சொன்னபடி அர்ச். அருளப்பர் தண்ணீரைக் கொண்டு கழுவுவார். ஆண்டவர் தந்த வார்த்தைப்பாடு களைக் காட்டுவார். தனக்குப் பிறகு இரட்சிக்க வருஞ் சேசுநாதரை விசுவசிக்கும்படிக்கு ஞானஸ்நானங் கொடுத் துக்கொண்டு வருவார். இப்படி யாகையிலும் அவர் ஞான ஸ்நானம் ஈடேற்றத்திற்குப் போதாதே. ஆகையால் அவர் ஞானஸ்நான வகையால் ஆண்டவர் தந்த வார்த்தைப்பாடு களுக்கு விசுவாசம் உண்டாயினும் அந்த விசுவாசம் நம் மைக் கரை ஏற்றுவதற்குப் போதாமற் போயிற்றல்லோ. ஆகையால் சேசுநாதர் கட்டளையிட்ட ஞானஸ்நானத்துக்கு விசுவாசம் வேண்டியிருந்தாலும், அது ஆயத்தவகையால் வேண்டிய தொழிய நம்மைக் கரை ஏற்றும் எத்தனகாரணம் அல்லவென்று சொல்லக்கடவோம்.

நாலாவது: மீளவும் அப்போஸ்தலர் நடபடியாகமம் 22-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் மிகுந்த விசுவாசம், பக்தி பச்சாத்தாபத்தோடு அழுது கொண்டிருந்த சவுலென் னும் அர்ச். சின்னப்பருக்கு அன்னியஸென்பவர் சொன்ன தாவது: எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்று சுவாமி நாமத்தைச் சொல்லி உன் பாவங்களைக் கழுவித் துடைப் பாயாக என்ரூர். இதோ பரலோகத்தினின்று எழுந்தரு ளின் சேசுநாதர் தந்த காட்சியால், அர்ச். சின்னப்பரிடத் தில் உத்தம மேரையோடிருந்த விசுவாசத்தினால் பாவப் பொறுத்தலாகாமல் அதற்கு ஞானஸ்நானம் பெறவேண்டி யிருந்தது.

சேசுநாதர் தாமே வந்து, அர்ச். சின்னப்பருக்கு வருத்துவித்த விசுவாசத்தின் மேலும், ஞானஸ்நானங் கொடுக்கும் விசுவாசம் அதிகமென்றுஞ் சொல்லக்கூடுமோ? இல்லையே. ஆகையால் அந்தக் காட்சிக்குப் பிறகு பாவம் போக, ஞானஸ்நானம் வேண்டின தாகில் விசுவாசம் வருத் துவிப்பதற்கு வேண்டியதல்லவென்றும், ஞானஸ்நானத் தில் பாவங்களைப் போக்கி, இஷ்டப்பிரசாதத்தைக் கொடுக் குங் காரணமே விசுவாசம் அல்லவென்றுஞ் சொல்லக்கட வோம். குறித்த அளவு விரிந்ததென்று வேறே பல உதார ணங்களை விட்டுச் சொன்னதைச் சலஞ் சாதியாமல் ஆராய்ந்து பார்க்கில், ஞானஸ்நானத்தினாலே நமக்கு வரும் இஷ்டப்பிரசாதத்துக்கு ஆயத்தமாக விசுவாசம் அறிவுள்ள வர்களிடத்தில் வேண்டினும், அதற்கு விசுவாசங் காரண மாகாமல் சேசுநாதர் ஸ்தாபித்துக் கட்டளையிட்ட முறையால் அந்த சடங்குதானே இஷ்டப்பிரசாதத்திற்கு எத் தன காரணமென்று சொல்வது நியாயமாமே. அப்படியே மற்ற தேவதிரவிய அநுமானங்களிலேயும் யோசிக்கக் கடவோம்.

மீளவுந் தேவதிரவிய அநுமானங்களிலே விசுவாசம் காரணமாகாமல் வேறே காரணத்தாலே நமக்கு மோக்ஷ பலனும், இஷ்டப்பிரசாதமும் உண்டாகுமென்று வேத உதாரணங்களால் நிச்சயமாகையில் விசுவாசமொழிய மோக்ஷத்தை அடையும் பேறு கொடுக்க வல்லது ஒன்று மில்லையென்று பதிதர் ஸ்தாபித்த அபத்தமான அஸ்திவா ரம் உள்ளுடைந்திடிந்து, மேல் ஏற்றிவைத்த கோபுரமுந் தகர்ந்து, நிந்தைப்பட விழுந்தது தானே. ஆகையால் சாவான பாவம் இல்லாத கிறீஸ்துவன் செய்யுஞ் செப், தப, தானம் மற்றப் புண்ணியங்கள் மோக்ஷத்தை அடையப் பலன் அதிகமாவதற்குக் காரணமென்று வேண்டின காலத் தில் இந்த நியாயங்களைக் கொண்டு பதிதருக்கு ஒப்பிப்பது எளிதாமே.

88.- பதிதர் சொல்லும் அபத்தத்தை ஒப்பிக்கக் கொண்டுவிடும் வேத உதாரணங்கள் ஏதெனில், அர்ச். சின் னப்பர் உரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தின் 3-ம் அதிகாரம் 28-ம் வசனத்தில் சொன்னதாவது : வேதத்தில் கட்டளையிட்டதைச் செய்யாமல் விசுவாசத்தைக்கொண்டு மனிதருக்கு இஷ்டப்பிரசாதமாகுமென்று நினைக்கிறோ மென்றார். ஆகிலும் முந்தி அதில் பழைய வேதத்திற்கும், புதிதாய் சேசுநாதர் ஸ்தாபித்த வேதத்திற்கும் வேற் றுமை காட்டி பழைய வேதத்தில் கட்டளை இட்டதைச் செய்ததினாலாக்கும் நமக்கு இஷ்டப்பிரசாதம் வர அறியா தென்றார். மீளவும் பழைய வேத கற்பனை எல்லாவற்றையுங் குறித்து அதிலேயுங் கற்பித்திருந்த பத்துக் கற்பனைகளின் படியே முதலாய் நடந்ததினால் பலனில்லை என்றாரோ? இல் லையே. பழைய வேதத்தில் கற்பித்திருந்த விருத்தசேத னம் முதலிய சடங்குகளால் இப்போது பலன் ஒன்றில்லை யென்றார்.

அப்படியே கொரிந்தியாருக்கு எழுதின முதல் நிருபம் 7-ம் அதிகாரம் 19 ம் வசனத்தில் விருத்தசேதனம் வீண் தானே, தேவ கற்பனையின்படி நடப்பதே கருமமென்றார். இதில் தேவ கற்பனையென்னும் பெயரால் பத்துக் கற்பனை களைக் குறித்தார். அப்படியே கலாசியாருக்கு எழுதின 2-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில் விருத்தசேதன முதலிய பழைய சடங்குகளைக் குறித்துப் பழைய வேத முறைமை சளால் இஷ்டப்பிரசாதமாகுமென்றால் வீணாய்க் கிறீஸ்து மரணத்தை அடைந்தாரென்று சொல்லக்கடவோமென்று அவர் தாமே சொன்னார். இதில் தேவதிரவிய அறுமா னங்களும், உத்தம வகையோடு செய்த தருமங்களும் இஷ் டப்பிரசாதத்துக்குக்குக் காரணம் அல்லவென்று அர்ச். சின்னப்பர் சொன்னதாகச் சொல்லக்கூடுமோ என்ன?

மீளவும் அர்ச். மாற்கு சுவிசேஷத்தின் 16-ம் அதிகா ரம் 16-ம் வசனத்தில் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்ற வன் கரை ஏறுவானென்று சேசுநாதர் சொன்ன உடனே, விசுவசியாதவன் நாகத்தில் தள்ளப்படுவானென்றார் . ஞான ஸ்நானம் பெறாதவன் என்னாமல் , விசுவசியாதவன் கரை ஏறானென்ற போதே கரை ஏறுகிறதற்கு விசுவாசமொழிய ஞானஸ்நானங் காரணம் அல்லவென்று சொல்லக்கடவோ மென்று பதிதர் சொல்லுகிறார்கள். ஆகிலும் ஒளி இல்லா மல் ஒன்றுங் காணப்படாதென்றதினால் பார்வைக்கு ஒளி தானே காரணமென்று சொல்வார் உண்டோ ? அப்படியே , விசுவசியா தவன் கரை ஏறான் என்றதினால், கரை ஏறுகிற தற்கு விசுவாசங் காரணமென்று சொல்லக்கூடாது.

இதில் சேசுநாதர் சொன்ன வசனத்திற்கு நியாயம் ஏதெனில், அறிவுள்ளவர்களுக்குள்ளே விசுவாசத்தினால் ஆயத்தப்படாதவனும், ஞானஸ்நானம் பெற்ற மாத்திரத் தில் கரை ஏறுவானென்று நினையாதபடிக்கு ஞானஸ்நானம் பெறாதவனென்னாமல், விசுவாசியாதவன் ஞானஸ்நானம் பெற்றாலும், பெறாமற்போனாலுங் கரை ஏறானென்று தோன்றும்படிக்கு அந்த வசனத்தைச் சொன்னார் . ஆத லால் அறிவுள்ளவர்களுக்கு ஞானஸ்நானந் தன் பலனைக் கொடுக்கும்படிக்கு ஆயத்த வகையால் மாத்திரம் விசுவாசம் வேண்டியதென்று நாம் முன் சொன்னபடி, இந்த உதார ணத்தால் ஒப்பிக்கப்பட்டது நிச்சயந்தானே. அப்படியே வேறே பல வேத உதாரணங்களால் கரை ஏற விசுவாசம் வேண்டியதென்றாலும் அது ஆயத்த வகையால் வேண்டிய தென்று சொல்ல வேண்டுமொழியக் காரண வகையால் வேண்டியதாகச் சொல்லப்படாதென்று நாம் முன் சொல் லித் தந்த வேத உதாரணங்களால் ஒப்பிக்கப்பட்டதல்லோ.