மனிதர்களில் அதிக மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள்!

அர்ச்சியசிஷ்டவர்கள் மட்டுமல்ல, பக்தியுள்ள குருக்களும் கூட பூசை நிறைவேற்றும்போது மிக ஆழ்ந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். பின்வருவனவற்றை அறிந்திருப்பது அவர்களுக்குப் போது மானதாக இருக்கிறது:

1. அவர்கள் கடவுளுடனேயே ஒரு நேரடியான, நெருங்கிய , தனிப்பட்ட தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; அவரைக் கரங்களில் ஏந்துகிறார்கள், அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவருடன் உரையாடுகிறார்கள்; அவரும் வாக்குக் கெட்டாத நேசத்தோடு அவர்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

2. சகல சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சத்தில் அவருக்குத் தருவதை விட மேலான மகிமையை, அவரே ஆசிக்கக்கூடிய அனைத்திலும் மேலான மகிழ்ச்சியையும் மகிமையையும், குருக்கள் அவருக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

3. குருக்கள் தங்கள் மீதும், உலகத்தின் மீதும், தங்கள் சொந்த நாட்டின் மீதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறார்கள்.

4. குருக்கள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிற பரிசுத்த சம்மனசுக்களின் படையணிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள்.

5. இறுதியாக, அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள பரிசுத்த ஆன்மாக்களுக்கு உதவி செய்கிறார்கள், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறார்கள்.

பக்தியும், நல்லறிவும் கொண்ட ஒரு குரு இதையெல்லாம் அறிந்திருந்தும், அவற்றின் காரணமாக மகிழ்ச்சியால் நிரப்பப்படாமல் இருப்பது எப்படி?