கொள்ளைநோய் அல்லது விஷபேதி காலத்தில் செபிக்கும் ஜெபம்

மகிமைப்பிரதாபம் பொருந்திய அர்ச். ஆரோக்கியநாதரே! கொள்ளை நோய், விஷபேதி முதலிய கொடிய ஆக்கினைகள் எங்கள்மேல் வராதபடிக்கு, இரக்கமிகுந்த தேவசிம்மாசனத்துக்கு முன்பாக உமது செல்வாக்குள்ள மன்றாட்டுகளால் மனுப்பேசக் கிருபை புரிந்தருளும்.

எங்களுக்கு நேரிடும் சரீரத்துக்கடுத்த சகல தொத்து நோய்களையும், விசே­மாய் எங்கள் ஆத்துமத்துக்கு வரக்கூடிய எவ்வித மோசமான வியாதிகளையும் விலக்கி, எங்களை ஆதரித்து நடத்த வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.