திரிகால ஜெபங்கள்

திரிகால ஜெபம்.

(திரிகால ஜெபத்தை காலை, பகல், மாலை வேளைகளில் பக்தியாய்ச் சொல்கிற விசுவாசிகள் 10 வருஷ பலன் அடையலாம், அல்லது அவ்வேளைகளில் 5 அருள்நிறை மந்திரம் சொல்லி செபிக்கிறவர்களும் அதே பலனை அடையலாம். மாதம் முழுவதும் சொல்கிறவர்கள் வழக்கமான நிபந்தனையுடன் (பாவசங்கீர்த்தனம், நன்மை , பாப்புவின் சுகிர்த கருத்துகளுக்காக ஜெபித்தல்) ஒரு பரிபூரண பலனடையலாம் - Raccolta, Veesio Angelica 1943)

(வாரநாட்களில் முழந்தாளில் நின்றபடியும், சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிறு முடிய நின்றுகொண்டும் சொல்லவும்).

ஆண்டவருடைய சம்மனசு மரியாயுடனே விஷேசஞ் சொல்லிற்று... அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்பிணியானார்.
(அருள்நிறைந்த...)

இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உம்முடைய வார்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.
(அருள்நிறைந்த...)

வார்த்தையானது மாம்சமாகி, எங்களுடனே கூட வாசமாயிருந்தது.
(அருள்நிறைந்த...)

முதல்வர்: சேசுநாதருடைய திருவாக்குத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக,

துணைவர்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.

சர்வேசுரா சுவாமி, சம்மனசு சொன்னதினாலே, உமக்குக் குமாரனாகிய சேசுகிறீஸ்து மனிதனானதை அறிந்திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகிமையை அடையத்தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணியருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.


பெரிய புதன் சாயங்காலம் துவக்கி பெரிய சனி வரை சொல்ல வேண்டிய திரிகால ஜெபம்.

கிறீஸ்துவானவர் நமக்காக மரண மட்டும் கீழ்ப்படியலானார். மேலும் சிலுவையிலே மரித்தார்.

ஆதலால் சர்வேசுரன் அவரை உயர்த்தி எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பர.

பிரார்த்திக்கக் கடவோம்

சர்வேசுராசுவாமி, எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதர் பாவிகளாகிய யூதர்களுடைய கையில் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையின் நிர்ப்பந்தத்தை அனுபவித்து இரட்சித்தருளின இந்தக் குடும்பத்தைக் கிருபைக் கண் கொண்டு பாரும். இந்த மன்றாட்டைத் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் ஏக தேவனுமாய் சதாகாலம் சீவியருமாய், இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சேசுநாத ரைக் குறித்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.


பாஸ்கு காலத்தின் திரிகால ஜெபம்.

(உயிர்ப்பு ஞாயிறு தொடங்கி, அர்ச்.தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது).

பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூறும்! அல்லேலூயா.

அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர்! அல்லேலூயா.

திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்தெழுந்தருளினார்! அல்லேலூயா.

எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்! அல்லேலூயா.

எப்பொழுதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர்! அல்லேலூயா.

அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தானமானார்! அல்லேலூயா.

பிரார்த்திக்கக்கடவோம்.

சர்வேசுரா சுவாமி, உம்முடைய திருக்குமாரனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுக்கிறீஸ்துவின் உத்தானத்திலே உலகம் களிக்க சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.