அர்ச். ரீத்தம்மாள் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த மாதாவுக்கு மிகவும் பிரியமுள்ள புத்திரியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல புண்ணியங்களின் வாடாத ரோஜாவாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிமளம் நிறைந்த வெள்ளைப்போள மலர்க் கொத்தாகிய அர்ச்சியசிஷ்ட ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளை மிகவும் ஆசித்தவளான அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவிசுவாசிகளின் அவிழ்தமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயாளிகளின் சஞ்சீவியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனிடத்தில் நீர் கேட்பதையயல்லாம் பெற்று உதவுவதற்கு உரிமையுள்ள அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்தவத் தாய்மார்களுக்கு மேல்வரிச் சட்டமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனஸ்தாப சாகரமான அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரித்தியாக வீரத்துவம் கொண்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்தும இரட்சணியத்தின்மீது அவாவுற்ற அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் அவதியைக் குறைத்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துஷ்டர்களை மனந்திருப்பிய அர்ச். ரீத்தம் மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய நற்கருணைப் பக்தி நிறைந்த பாத்திரமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுக்களின் போசனத்தை மட்டும் புசித்து உயிருடன் ஜீவித்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இடைவிடாமல் செபிப்பதைக் கடைப்பிடித்து ஒழுகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்காக மன்றாடுவதில் ஜெயவல்லபம் கொண்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரும குணசீலியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுசாரிகளின் சீவிய வழிகாட்டியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர்களின் உன்னத மாதிரிகையாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இவ்வுலக துன்பங்களைப் பொறுமையோடு அனுபவிப்பதில் இன்பங்கொண்ட அர்ச். ரீத்தம் மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருப்பாடுகளின் சிறந்த தியானியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறர் சிநேகத்தில் ஒப்பற்று விளங்கிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ தூதனால் முன்னறிவிக்கப்பட்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவசிநேகத்தால் சுட்டெரிக்கப்பட்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல புண்ணியங்களின் சிகரங்களை அடைந் தவளாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் ஆதரவாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்பின் மகிமையைக் கண்ணின் கருமணிக்கு மேல் நேசித்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தண்ணீரில் தாமரையைப் போல இவ்வுலகப் பற்றற்ற அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது பகைவர்களின் ஈடேற்றத்தை விரும்பின அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இடது முன்நெற்றியில் சேசுவின் திரு முண்முடி முள்ளால் ஊடுருவப்பெற்ற அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுடைய அனுகூலம் பொருந்தியவாதியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருச்சபையின் மகத்துவத்திற்கு அத்தாட்சியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துநாதரை முற்றிலும் பின்பற்றின அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஷ்ட தரித்திரர்களின் ஆதரவாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நித்தியத்திற்குக் கூட்டிச் செல்லும் நட்சத்திரமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல வரப்பிரசாதங்களின் அலங்காரியாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுUகத்தின் மங்காத மாணிக்கமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சரீரத்துடன் ஒன்றித்த சம்மனசுபோல் தோன்றிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோக பொக்கி­த்தின் மீது பேராசை கொண்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கீழ்ப்படிதலின் கீர்த்தி நிறைந்த வடிவமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுவின் அன்பை ஆபரணமாக அணிந்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏகாந்தத்தில் அளவிறந்த ஆனந்தமடைந்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அற்புதமாய் மடத்திற்குள் பிரவேசித்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காய்ந்த விறகுக் கழியைத் தளிர்த்து மிளிரும்படி செய்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கால இயற்கைக்கு மாறாக ரோஜா மலர்களும் அத்திப்பழங்களும் கிடைக்கும்படி செய்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இளமைப் பருவத்திலே சேசுவோடு சம்பாஷித்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல அந்தஸ்தின் கடமைகளையும் சரிவர நிறைவேற்றிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது பக்தர்களின் பலமாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாலியர்களின் பரிசுத்த அக்களிப்பாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா அமரிக்கையோடு மரணமடைந்த அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரணத்தை முன்னறிந்து தெரிவித்தவளாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாகுமுன் தேவ சுதனையும் தேவமாதாவையும் காட்சியாகக் கண்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத்தில் மகா மகிமையோடு வரவேற்கப்பட்ட அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மறுமையில் மகிமையோடு வீற்றிருக்கும் அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கர்த்தரின் கல்வாரி மலைக் காட்சியை கனவிலும் மறக்காத அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலக ஆடம்பரங்களை அவமதித்தவளாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனித சக்தியால் அவலமென்று கைவிடப்பட்ட வாதநோயைக் குணப்படுத்திய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த பிரகாசத்தைப் பிரதிபலிப்பிக்கிறவளாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நித்திய சமாதானத்தின் வழியை அறிவிக்கிறவளாகிய அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய   திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக, அர்ச். ரீத்தம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி, உமது முடிவில்லாத பராமரிக்கையினால் உமது ஊழியக்காரியாகிய அர்ச். ரீத்தம்மாளுடைய மன்றாட்டுகளுக்குத் தேவரீர் செவிசாய்த்து மனுUகத்திற்கு அசாத்திய மான காரியங்களைச் செய்ய அவளுக்கு வரமளித் தீரே. உமது வாக்குத்தத்தங்களின் மீது அந்தப் புண்ணியவதியின் வேரூன்றிய நம்பிக்கையையும் சிநேக பான்மையையும் பார்த்து எங்களுடைய துன்ப வேளையில் எங்கள் மீது உமது கிருபைக் கண்களைத் திருப்பியருளும்.  

ஆமென்.