அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! வேத சாட்சியான கன்னிகையே! சர்வேசுரன் அனந்த புதுமைகளால் உம்மை மகிமைப்படுத்துகிறாரே! கிறீஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசர் உம்மை வாழும் ஜெபமாலைக்கும் மரியாயின் பிள்ளைகளுக்கும் பாதுகாவலியாக நியமித்துள்ளாரே! உம்முடையதைப் போன்ற பரிசுத்தமான குரல் மறுக்கப்பட முடியாதென்றும், உம்முடைய உதவியில் நம்பிக்கை கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளதென்றும் மோட்சத்திலிருந்து தெளிவாக எங்களுக்குக் காண்பியும். சேசு கிறீஸ்துவுக்கு மரணத்திலும் பிரமாணிக்கமாயிருக்கும் வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தாரும். நாங்கள் கேட்கிற இவ்விசேஷ மன்றாட்டையும் .... எங்களுக்கு அருள்வீராக.
ஆமென்.