தேவசம்பந்தமான மூன்று புண்ணிய முயற்சிகள்

விசுவாச முயற்சி

என் சர்வேசுரா சுவாமி திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.  ஆமென்.


நம்பிக்கை முயற்சி

என் சர்வேசுரா சுவாமி, தேவரீர் வாக்குக் கொடுத்தபடியினால், சேசுநாதர்சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழு மனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென்.


தேவசிநேக முயற்சி

என் சர்வேசுரா சுவாமி, தேவரீர் மட்டில்லாத நேசத்திற்குப் பாத்திரமாயிருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன்.  மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறதுபோல மற்ற எல்லோரையும் நேசிக்கிறேன். ஆமென்.