அர்ச். காவலான சம்மனசின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுடைய இராக்கினியாகிய அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். இரபேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்கு காவலாயிருக்கிற அர்ச். சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களைக் காக்கிறதிலே மிகவும் பிரமாணிக்கராயிருக்கிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களை ஆதரிக்க எந்நேரமும் கவனிக்கிறவராயிருக்கிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த மகிமைப்பிரதாப வல்லமையுள்ள காவலாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தவறாத சத்திய சாட்சியாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்குப் பிரியாத துணையாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இப்பரதேசத்தில் ஆத்துமத்துக்கு ஆறுதலாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த ஞான விவேகத்தோடே நடப்பிக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த கற்புள்ள நேசராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தயை நிறைந்த ஆயராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்ததனத்தைக் காக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம ஆலோசனையை ஏவுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தம் தயவோடே புத்திமதி சொல்லுகிற வராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இருதயத்தைப் பிரகாசிப்பிக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏகாந்தத்தில் ஞானக்கதிர் வீசுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காணப்படாதவராயிருந்தாலும் வழிகாட்டியாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எந்தக் காரியங்களையும் ஒழுங்கோடே நடத்துகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பலவீனத்தில் எங்கள் தஞ்சமாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்காக சர்வேசுரனிடத்தில் மிகவும் ஏற்கத்தக்க மனுப்பேசுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவகிருபைச் சிம்மாசனத்தில் எங்கள் செபங்களைச் செலுத்துகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பலத்த உதவியாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் சத்துருக்களோடே யுத்தம் செய்கிறதிலே ஒருபோதும் தோல்வியடையாதவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குற்றஞ் செய்கிறவர்களைக் கண்டிக்கிறவராகிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திடனற்ற சமயத்தில் ஸ்திரப்படுத்துகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதியில் உதவியாயிருக்கிற சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துயரத்தில் ஆறுதலாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரண அவஸ்தையில் தேற்றரவாகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான யுத்தத்தில் தைரியம் வருவிக்கிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குத் தேவ கிருபையால் முடிசூட்டுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த ஆத்துமாக்களை கைக்கொள்ளுகிறவராகிய சம்மனசானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யுத்தசபையின் வச்சிரத் தூண்களாகிய காவலான சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நவவிலாச சபையாயிருக்கிற சகல பரிசுத்த சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

நடுநடுக்கமான தீர்வை நாளில் நாங்கள்  நித்திய சாபத்துக்குள்ளாகாதபடிக்கு, எங்கள் காவலாகிய பரிசுத்த சம்மனசானவரே, ஞான யுத்தத்தில் எங்களைக் காத்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! மனோவாக்குக்கெட்டாத உமது கிருபையுள்ள பராமரிக்கையால் எங்களைக் காக்கத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசுக்களை நியமித்தனுப்பச் சித்தமானீரே.  உம்மை மன்றாடு கிற நாங்கள் அவர்கள் ஆதரவில் எப்பொழுதும் காப்பாற்றப்படவும் நித்தியமாய் அவர்களுடைய பேரின்ப ஐக்கியத்தில் வாழ்ந்திருக்கவும் எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. 

ஆமென்.