சகாயமாதா ஜெபம்

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே!  மாசணுகாத் தாயே! உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம்.  கொள்ளை நோய், மின்னல், இடி, நெருப்பு, புயல்காற்றிலிருந்தும், விமானத் தாக்குதல், விரோதிகளின் பகை, குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும்.  மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்திலிருந்து அவர்களை இரட்சியும்.  எங்களைச் சகல பாவங்களில் நின்றும் ஆபத்துக்களில் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாக ஊழியம் செய்து உம்மோடுகூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனையை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே.

ஆமென்.