சுருக்கமான சிலுவைப் பாதை

பீடத்துக்கு முன்பாகச் சொல்லத்தகும் ஜெபம்.

உத்தம மனஸ்தாப மந்திரம்...

திவ்விய சேசுவே! எங்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும் சிலுவைப் பாதையை ஜெபிக்கிறவர்களுக்கு அளிக்கப்பட்ட பலன்களை அடைய விரும்பித் தேவரீருடைய இரக்கத்தைக் கேட்டு மன்றாடு கிறோம்.

அர்ச்சியசிஷ்ட மரியாயே! வியாகுல மாதாவே!  உம்மோடு கூடச் சிலுவைப் பாதை செய்ய விரும்புகிற நாங்கள் அதனுடைய சுகிர்த பலன்களை அடையும்படிக்கு எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட முதலாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதரை சாவுக்குத் தீர்வை இடுகிறார்கள்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவையிலே அறையுண்டு மரணத்தை அடையத் தீர்வையிடப் பட்டதைத் தியானித்து, நாங்கள்  தேவரீரை வணங்கி நமஸ்கரிக்கிறோம்.  அகோர தீர்வையிலே நின்று எங்களை இரட்சித்தருளும் சுவாமி. 
- 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட இரண்டாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

திவ்விய சேசுவே!  தேவரீர் பாரமான சிலுவையைச் சுமந்து போனதைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  எங்களுக்கு இவ் வுலகில் வருகிற கஸ்தி பொல்லாப்புகளைப் பொறுமையோடே அனுபவிக்கக் கிருபை செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட மூன்றாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் சிலுவையின் பாரத்தால் முதல் விசை கீழே விழுகிறார்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவையின் கீழே முதல்விசை குப்புற விழுந்ததைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் செய்கிற பாவங்களிலே மூர்க்கராய் நிலைகொள்ளாமல் உடனே அவைகளை விட்டு எழுந்திருக்க அநுக் கிரகம் செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட நான்காம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் தமது பரிசுத்த தாயாரைச் சந்திக்கிறார்.

திவ்விய சேசுவே!  தேவரீருடைய பரிசுத்த மாதா உம்மை எதிர்கொண்டு வருகிறதைக் கண்டு நீர் சொல்லிலடங்காத கஸ்தியை அனுபவித்ததைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் சாகும் வேளையில் வியாகுல மாதாவின் அடைக் கலத்தை அடைய அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஐந்தாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் தமது சிலுவையைச் சுமந்து போகிறதற்கு சீரேனான சீமோன் உதவி செய்கிறார்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவை சுமந்து போகிறதற்கு சீரேனென்கிற சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கிருபை செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இரத்தக் கறை பிடித்த சேசுநாதருடைய திருமுகத்தை ஒரு பெண்பிள்ளை துடைக்கிறாள்.

திவ்விய சேசுவே!  தேவரீர் வெரோணிக்கம்மாள் தேவரீருடைய  திருமுகத்தைத் துடைத்ததைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் முகத்தாட்சணியத்தைப் பாராமல் புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஏழாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் இரண்டாம்விசை முகங்குப்புற விழுகிறார்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவையின் கீழே இரண்டாம் விசை குப்புற விழுந்ததைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் எந்தப் பாவத்திலும் திரும்ப விழாதபடிக்குக் கிருபை செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட எட்டாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் தமது பின்னால் அழுது கொண்டு வந்த யூத ஸ்திரீகளுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

திவ்விய சேசுவே! தேவரீர் உம்மை நோக்கி அழுத ஜெருசலேம் பட்டணத்து ஸ்திரீகளுக்கு ஆறுதல் சொன்னதைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் பண்ணின பாவ துரோகங்களுக்குத் துயரப்பட்டு அவைகளுக்காக எப்போதும் அழுது கொண்டிருக்க அநுக்கிரகம்  செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஒன்பதாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் மூன்றாம் விசை கீழே விழுகிறார்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவையின் கீழே மூனறாம்விசை தரையில் விழுந்ததைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் சாவான பாவத்தோடே செத்து நித்திய நரகத்திலே விழாதபடிக்குக் கிருபை  செய்தருளும் சுவாமி. -  1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதருடைய வஸ்திரங்களை உரிகிறார்கள்.

திவ்விய சேசுவே!  தேவரீர்  வஸ்திரங்கள் உரியப்பட்டதையும், தேவரீருக்குக் கசப்பான காடியைக் குடிக்கக் கொடுத்ததையும் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் சகலத்திலும் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, பொறுமை யோடே நடக்கக் கிருபை  செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பதினோராம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவையில் அறையப்பட்டதைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் இவ்வுலக செல்வங்களை வெறுத்து பரலோகத்தை மாத்திரமே  நாடக் கிருபை  செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள்.     திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர்சுவாமி பாடுபட்ட பன்னிரண்டாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் சிலுவையில் மரிக்கிறார்.

திவ்விய சேசுவே!  தேவரீர் சிலுவை மரத்தில் உயிர்விட்டதைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் உம்மை மாத்திரமே நேசித்து, இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து, பரகதியில் உம்மோடே வீற்றிருக்கக் கிருபை  செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பதின்மூன்றாம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

மரித்த சுவாமியை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.

திவ்விய சேசுவே!  தேவரீருடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி, வியாகுல மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டதைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  எங்களுடைய இருதயத்திலே தேவரீருடைய திருக் காயங்களும், உம்முடைய பரிசுத்த மாதாவின் வியாகுலங்களும் பதிந்திருக்கக் கிருபை செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பதினான்காம் ஸ்தலம்

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதரை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

திவ்விய சேசுவே!  தேவரீருடைய திருச் சரீரம் அடக்கம் பண்ணப்பட்டதைத் தியானித்து உம்மை ஆராதிக்கிறோம்.  நாங்கள் மரண பரியந்தம் தேவரீரை சிநேகிக்கவும், தேவரீ ருடைய பேரின்ப இராச்சியத்தில் சேரவும் கிருபை  செய்தருளும் சுவாமி. - 1 பர.  அருள். திரி.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

தேவ கன்னிமாமரியாயே, உம்முடைய திருக்குமாரன் பட்ட பாடுகளையயல்லாம் பாவிகள் எங்கள் இருதயத்திலே பதியச் செய்தருளும் தாயே. ஆமென்.

(சேசுகிறீஸ்துநாதருடைய ஐந்து திருக் காயங்களைக் குறித்து ஐந்து பர. அருள். திரித்துவ தோத்திரமும், அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்கள் நிறைவேற ஒரு பர. அருள். திரி. செபமும் சொல்லுகிறது.)