அர்ச். குழந்தை சேசு தெரசம்மாள் ஜெபம்

ஓ! குழந்தை சேசுவின் சிறிய புஷ்பமாகிய அர்ச். தெரசம்மாளே, நீர் இப்பூவுலகில் சீவித்த சொற்ப காலத்தில் சம்மனசுக்களுக்குரிய பரிசுத்ததனத்தின் கண்ணாடியாகவும், சிநேகத்தின் தர்ப்பணமாகவும், தேவ பராமரிப்புக்கு அமைந்த தகனப்பலியாகவும் விளங்கினீரே!  உமது புண்ணியங்களின் பலனைச் சுகிக்கும் இவ்வேளையில் ஏழை என் மீது உமது கருணைக்கண்ணைத் திருப்பியருளும். நான் சகலத்தையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்.  என்னுடைய சஞ்சலங்களை உம்முடையவைகளாக ஏற்றுக் கொண்டு ஜென்ம மாசணுகாத திருத்தாயாரிடம் எனக்காகப் பரிந்து பேசியருளும்.  அந்தத் தாய்க்கு உமது மட்டில் உள்ள அன்பினால் மோட்ச இராக் கினியாகிய அவர்கள் முகமலர்ந்து உம்மை நோக்க வும், அவர்களது தரிசனத்தை நீர் காண்கவும் பாக்கியம் பெற்றீரே!  சேசுவின் திரு இருதய இராக்கினியாகிய அந்தத் தாய் தமது வல்லபம் மிகுந்த மன்றாட்டினால் நான் இந்த வேளையில் ஆவலுடன் ஆசிக்கிற  வரத்தை எனக்கு அடைந்து தரும்படியாகவும், என்னுடைய சீவிய காலத்தில் என்னைத் திடப்படுத்தி மரண வேளையில் என் னைத் தற்காத்து, என்னை நித்திய பாக்கியத்துக்கு நேராய் இட்டுக் கொண்டு போவதற்கான ஆசீர்வாதத்தை அளிக்கும்படியாகவும் அவரைப் பார்த்து மன்றாட உம்மைப் பிரார்த்திக்கிறேன். 

ஆமென்.

கிருபைதயாபத்து மந்திரம் சொல்லவும்.