புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச். லூசியாவின் ஜெபம்

(திருநாள் : டிசம்பர் 13)

சேசுநாதருக்காக உயிரைப் பரித்தியாகம் செய்தவளாகிய மோட்ச சம்பன்ன கன்னியாஸ்திரீயாகிய அர்ச். லூசியம்மாளே!  நீர் சர்வேசுரனால் அடைந்த வரப்பிரசாதத்தின் பலத்தால் சிறு வயதிலேயே புண்ணிய வழியில் நடந்து, குறையற்ற சுகிர்த செளந்தரியம் அடைந்து, உமது பிரிய பத்தாவாகிய சேசுநாதருக்குக் கன்னிமையைக் கையளித்து, அவருக்காக மிகுந்த கஸ்திப் பாடுகளைப் பட்டு, அசையாத தூணாய்க் கன்னி சுத்தத்தைக் காத்து ஆத்துமத்தைக் கொடுத்தீரே. 

நீர் சீராக்கூஸ் நகருக்கு வெகுமானமும், கன்னி சுத்தத்துக்கு அடைக்கலமுமாகி, உம்முடைய பக்தி அதிகரித்த யாவருக்கும் நிதமும் உபகார நன்மைகளைச் செய்கிறீரே.  ஆனதினால் வணக்கத்துக்குரிய கன்னியாஸ்திரீயே, நீர்  எங்களுக்காக சர்வேசுரனைப் பிரார்த்தித்து, இந்த உலகத்தின் இருள் நீங்க நாங்கள் ஞான வெளிச்சமடையச் செய்தருளும்.  அதனால் நாங்கள் சர்வேசுரன் பேரிலேயும், உமது பேரிலேயும் அதிக பயபக்தியாய்ப் பாவத்துக்குக் கண்மூடி நடந்து உம்முடைய சலுகையால் மோட்சம் அடைவோமாக.  

ஆமென்.