உலக இரட்சகர் ஜெபம்

அகில புவனங்களையயல்லாம் அமைத் தவரே, எவராலும் கண்டுபிடிக்கக் கூடாதவரே, சகல சராசரங்களையயல்லாம் தொடுத்தவரே, சர்வ நற்குணங்களையும் கொண்ட புத்திக்கெட்டாத சமுத்திரமாய் நிற்கின்ற பூலோக இரட்சகரே, பாவத்தினால் அழகிழந்த பாவியாகிய நான் உமது திரு இருதயத்தை நோக்குகிறேன். ஆ! என்ன காண்கிறேன்! காருண்யக் கடலோ? கருணாம்பரக் கோட்டையோ? கண்களைப் பறிக்கும் ஆனந்த வெள்ளமோ?  கரை கடந்த சிநேக அக்கினியோ?  என்னென்று சொல்வேன்?  மலைகளையும் குன்றுகளையும் கடந்து வந்தீரோ?  மனுமக்களைத் தேடி வந்தீரோ?  ஆ, அன்புள்ள சேசுவே! இதென்ன, நீர் தேவனல்லோ? ஆண்டவரல்லோ? மூன்று லோகங் களையும் ஆள்பவரல்லோ?  உமக்கு நீச மனிதர் பேரில் இம்மாத்திரம் ஆசை என்னத்திற்கு?  அவர்களை மரண பரியந்தம் நேசிக்க என்ன முகாந்தரம்? அவர்கள் தங்கள் தோ­ங்களால் கெட்டாலும் தேவாதி தேவனும் சகல பாக்கிய அனுபோகியுமான உமக்கென்ன நஷ்டம்? தேவரீர் இருதயம் உருகிச் சோகமடைந்து பூங்காவனத்தில் இரத்த வேர்வை வேர்த்துத் தளர்ந்ததென்ன?  கசைகளால் கிழிபட்டும் அன்பால் நிறைந்த உமது இருதயம் மனிதரை இரட்சிக்க மாத்திரம் தேடினதேது?  சிலுவையின் பாரத்தால் தத்தளித்து விழுந்தாலும் உமது நேச இருதயம் இன்னமும் எங்களை நோக் கித் தாவுவதேது?  தாவீதென்பவர் என் மகனே அப்சலோம் அப்சலோம் என்றாற்போல, என் மக்களே, மனுமக்களே, தேவநீதிக்குள்ளாகி நரகத் தில் விழுவீரோ என்று பதறுவதேது?  ஆ சுவாமி!  எப்படிப்பட்ட ஆச்சரியத்தை உமது இருதயத்தில் காண்கிறேன்!  நீர் மனுமக்களாகிய எங்கள் புத்திக் கேட்டைக் குறித்து இப்படி துயரப்படுவதென்ன?  சிலுவையில் உயிர் பிரியுமட்டும் மனுமக்களின் கெடுதிக்கு இரங்கி உருகிக் கதறி அழுவதைக் கண்டு என்னென்று சொல்வேன்?  ஓ ஆச்சரியமே!  ஓ பிரமிப்பே! சேசுவே, சேசுவே!  உமது திரு இருத யத்தின் கருணையும் தயையும் வாக்குக்கெட்டாத இரக்கமும் அளவிடுவது யார்? அதன் முகாந் திரத்தை யோசித்து நடுங்கிக் குன்றி திகிலடையாத வர்களார்?  ஆ தேவனே!  தேவசிநேகமே!  உலகத் தில் கேட்டிராத சிநேகமே, தேவலோக சிநேக மயமே! ஆண்டவரே, சேசுவே!  சேசுவே, நான் உம்மை என் முழு இருதயத்தோடு சிநேகிக்கிறேன். உம்மை மாத்திரம் விரும்பி எல்லாவற்றையும் வெறுக்கிறேன். உலக இரட்சகரே!  நான் உம்மிடத் தில் ஒன்றையும் கேட்காமல் உமது சிநேகத்தை மாத்திரம் கேட்கிறேன். ஓ செல்வத்தின் நதியே! நாவுக்கெட்டாத அன்பின் பெருக்கே!  நான் உம் மையே நாடுகிறேன்.  உம்மிலேயே என் அன்பெல் லாம் பாராட்டுகிறேன். என் இருதயத் திருவே!  நித்திய சீவியக் கனியின் விருட்சமே!  என் புத்தி கொண்ட மட்டும் புலன்கள் கொண்ட மட்டும் உம்மைத் தேடுகிறேன், சிநேகிக்கிறேன்.  உம்மைச் சரியாய் சிநேகிக்கப் படிப்பித்தருளும் சுவாமி.  எனக்கொரு சிநேக மயமான இருதயத்தைப் படைத் தாகிலும் அல்லது இருப்பதை சீர்கொள்ளத் திருத்தி யாகிலும் தாரும். தேவ மாதாவே!  அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! ஆண்டவருடைய திரு இருதயத் தின் ஆச்சரியமான சிநேகிதத்தைக் கண்டுபிடிக்க உங்களுடைய இருதயத்தைப் போன்ற இருதயம் எனக்கு இருந்தாலல்லோ தாவிளை!  ஓ சம்மனசுக் களே! என் புத்திக் குருட்டாட்டமும், அந்தகார மும் நீங்கி ஆண்டவருடைய திரு இருதயத்தின் சிநேகப் பெருக்கத்தை நான் கண்டுபிடிக்க எனக்கு வரமுண்டாக அவரை மன்றாடுங்கள்.

ஓ, என் இருதயமே! மாடப்புறாவானது சேற்றிலே நிலைகொள்ளாமல் நோவேயின் பெட் டகத்தை நாடி ஓடினதுபோல, நீயும் பூமியின் சகதியில் நிலைகொள்ளாமல் உன் ஆண்டவரின் திரு இருதயத்தை நோக்கி ஓடி, அதில் ஒளிந்து கொள்.  எங்கே பார்த்தாலும் உனக்குத் துக்கம்!  ஆண்டவருடைய இருதயத்தில் உனக்கு ஆனந்தம்.  ஆ என் ஆண்டவரே! உம்முடைய இருதயத்தில் மறைந்து பூமியை விட்டு நான் ஒளிந்து கொள்ள இடங்கொடும்.  உம் தேவ அக்கினியால் நான் எரிக்கப்பட்டு உம்மில் இளைப்பாற எனக்குக் கடைசித் தீர்ப்பாயிற்று. உமது இருதயத்தில் நான் சிறைப்பட்டுத் தங்க வரமளியும்.  என் மாடப் புறாவே, என் மயிலே என்று உமது திருவாயினால் கூப்பிட நான் வரம் பெறுவதெப்போ?  நான் பேச்சு மூச்சில்லாமல் உம் அன்பில் மூழ்கிப் போவ தெப்போ? பட்சிக்கு கூடு பிரியம், எனக்கு உம் இருதயம் பிரியம். பூலோகத்தால் இருதயம் உலக ஆஸ்தியில் உட்படும்.  எனக்கு உமது நேச பாக்கி யமே போதும். என் ஆண்டவர் என்னிடமும், அடிமை நான் அவரிடமும் இருப்பதே ஆனந்த பாக்கியமல்லோ?  நாலு காற்றுகளும் நில்லுங்கள். ஆண்டவர் குரற்சத்தம் என் காதில் விழுகிறாப் போல் காணுதே!   ஆண்டவரே! எங்கேயிருக் கிறீர்? என் இருதயத்தில் சிநேகப் பெருக்கத்தால் இறங்குமே. அன்பால் உமது தெய்வீகத்தை என் இருதயம் உணரப் பண்ணும் சுவாமி. என்னை எங்கே வரச் சொன்னாலும் வருகிறேன். எல்லாம் மறந்து தேவ நற்கருணைக்கு வரச் சொல்கிறீரோ?  இதோ ஆயத்தமாயிருக்கிறேன். என் ஆசையும் அதுதானே!  வாரும் ஆண்டவரே. என் உள்ளத்தில் வந்து இறங்கும். உமது சிநேகத்தின் இன்பத்தை எனக்குக் காட்டும்.  நாமிருவரும் ஏகோபித்திருக்க வரம் புரியும் சுவாமி.

நான் நிர்ப்பாக்கியன்.  என்னுடைய நேர்மை யற்றதனம் உம்முடைய நேர்மைக்கு எப்போ ஒத்துவரும்?  ஆண்டவரே! நீர் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ளுகிறீர்.  நானோ கும்பலைத் தேடு கிறேன். நீர் மவுனத்தை விரும்புகிறீர்.  நானோ கூக்குரலை விரும்புகிறேன்.  நீர் உண்மையைத் தேடுகிறீர்.  நான் சிலாக்கியத்தை விரும்புகிறேன். நீர் பரிசுத்தத்தைப் பின்செல்கிறீர், நான் அசுத்தத் தைப் பின்செல்கிறேன். ஆண்டவரே! இன்னமு மென்ன?  நீர் மெய்யாகவே நல்லவர், நான் கெட்டவன்.  நீர் இரக்கமுள்ளவர், நான் இரக்க மற்றவன்.  நீர் பரிசுத்தர், நான் நிர்ப்பாக்கியன்.  நீர் நீதியுள்ளவர், நான் அநீதியுள்ளவன். நீரே வெளிச்சம், நான் குருடன்.  நீர் சீவியம், நான் செத்தவனாக இருக்கிறேன்.  நீர் அவிழ்தம், நான் வியாதிக்காரன்.  நீர் சந்தோ­ம், நான் கஸ்தி நிறைந்தவன்.  நீர் பரிபூரண சத்தியம், நான் மெத்தவும் வீணன்.  ஐயோ என்னை உண்டுபண்ணினவரே!  இன்னமும் என்ன சொல்வேன்?  என் சிருஷ்டிகரே!  என் மன்றாட்டைக் கேளும்.  நான் உமது சிருஷ்டியா யிருந்தும் கெட்டுப் போனேன்.  நான் உமது படைப்பாயிருந்தும் சாகிறேன். நான் உமது கைவேலை.  ஒன்றுமில்லாமல் போகிறேன்.  நான் உம்மாலே உருவாக்கப்பட்டேன்.  உமது கைகள் என்னை செய்து முடித்தன.  சிலுவையில் அறையப் பட்ட கைகளே என்னை உண்டுபண்ணினவை. ஆண்டவரே, உமது கைகளின் வேலையை இகழா தேயும்.  ஆண்டவரே, உம்முடைய கரங்களில் என்னை எழுதிக் கொண்டீர். அந்த எழுத்துக்களின் வாசிப்பைக் கொண்டு என்னைக் காப்பாற்றும்.  

இதோ உம் சிருஷ்டிப்பாகிய நான் உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறேன்.  நீர் என்னை உண்டாக்கினவர். ஆகையால் மறுபடியும் என் னைப் புதுப்பியும். இதோ உம்முடைய படைப்பான வஸ்து உம்மை நோக்கி அபயமிடுகிறேன். நீர் என் சீவியமானதால் என்னை உயிர்ப்பியும்.  உமது கைவேலையாகிய நான் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்.  நீர் என் சிருஷ்டிகர் ஆகையால் என்னை சீர்படுத்தும்.  ஆண்டவரே!  என்னுடைய நாட்கள் ஒன்றுமில்லாமைபோல் இருக்கின்றமை யால் எனக்கு பொறுத்தல் கொடும்.  

ஆமென் சேசு.