அர்ச். செசீலியம்மாளை நோக்கி ஜெபம்

(திருநாள் : நவம்பர் 22)

கற்பின் அலங்காரமும் கன்னிகா ரெத்தினமுமாகிய அர்ச். செசீலியம்மாளே, சேசுவின் நேசப் பத்தினியே, பரிசுத்த புண்ணியவதியே, உமது பரிசுத்த புண்ணியத்தைக் காக்க உம்மிடம் ஒரு காவல் சம்மனசு உண்டென்று நீர் சொன்னதைக் கேட்டு அஞ்ஞானிகளாயிருந்த வலேரியானும் அவரது சகோதரனும் ஞானஸ்நானம் பெற்று வேதசாட்சிகளாக மரிக்கக் காரணமாயிருந்தீரே, நீர் வேதத்துக்காக சிரசாக்கினை அனுபவித்துச் சாகும் தறுவாயில் சர்வேசுரனைச் சந்தோ­மாய்ப் புகழ்ந்து பாடிக் கொண்டு மரித்தீரே!  நாங்களும் உம்மைப்போல் இவ்வுலகில் பரிசுத்த சீவியம் சீவித்துக் கடைசியாய் நன்மரணமடைந்து உம்மோடு என்றென்றும் சர்வேசுரனைச் சுகித்தனுபவிக்க எங்களுக்காக மன்றாடும். 

ஆமென்.