இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சீவியத்தின் நிலைமையைத் தெரிந்து கொள்ள ஜெபம்

ஓ! பிதாவே!  நீர் அடியேன் பேரில் வைத்திருக்கிற உமது சித்தத்தின் நோக்கத்தையும், என் ஆத்தும இரட்சணியத்துக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிற உமது உத்தம விருப்பத்தையும் தெரிவியும்.  அடியேன் சுவிசே­த்தில் சொல்லியிருக்கிற வாலிபனோடு இரட்சிக்கப்பட என்ன செய்ய வேணுமென்று கேட்க உமது திவ்விய ஒளியை எனக்குக் கட்டளையிட்டருள உம்மைப் பார்த்து மன்றாடுகிறேன்.  சீவியத்தின் அநேக நிலைமைகள் என்முன் இருக்கிறபடியால் எதைப் பின்பற்றுகிற தென்று கண்டுணராமல் இருமனமுற்று உமது திவ்விய கட்டளை வருகிற வரையிலும் எதிர்பார்த் திருக்கிறேன்.  ஓ!  ஆண்டவரே!  உமக்கு மிகுந்த தாழ்மையோடு தடையின்றி என்னை முழுதும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன்.

ஓ! பிதாவே!  அடியேன் உமது திரு ஞானக் கற்பனைகளை மீறாமலும், உமது தயாள தெரித லுக்கு உண்மையற்றவனாய் இராமலும், சிருஷ்டி களுடைய சித்தத்துக்கு விரோதமாய் உலக வீண் ஆசையில் உழலாமலும் நடப்பித்து அநுக்கிரகம் செய்தருளும்.  ஊழியக்காரன் நடக்க வேண்டிய வழியைத் தெரிவிப்பது எஜமானரின் கடமை யாகையால் உமக்குப் பிரியமான பாதையில் அடியேன் நடந்து உமக்குப் பணிவிடை புரிய எனக்குக் கற்பித்தருளும்.  என் பாகம் உமது திருக் கரங்களில் இருக்கின்றதே.  ஆகையால் நீர் என்னை நடப்பிக்காவிடில் நானே என் நடக்கைகளுக்கு மத்தியஸ்தனாகி எனக்கு நேரிடும் சோதனைகளை கண்டுபிடிக்கப் பார்வை போதாமல் குருட னாயிருப்பேனல்லோ? நான் உமது கட்டளைக்கு அமையத் தடை செய்ய மாட்டேன்.  பிதாவே!  நீர் சாமுவேலென்னும் வாலிபனோடு சம்பா´த் தது போல, என் ஆத்துமத்தோடும் சம்பா´த் தருளும்.  பிதாவே, அடியேன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறபடியினாலே அடியே னுடன் பேசியருளும்.  பிதாவே, என் மீதி நாட் களுக்கு என்னை உமக்குப் பலியாக்கிக் கொள்ள உமது மாட்சிமைக்கு சித்தமாயிருந்தால் நாம் உமக்காகவே பலியாக உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆயத்தமாயிருக்கிறேன்.

ஓ! என்னாண்டவரே!  என் தாய் தந்தை களுடைய அன்பை ஆண்டு அவர்களை உமது நித்திய ஞானத்தின் கருத்துக்கிசைந்த விதமாய் நடத்தத் தயை செய்தருளும்.  பிதாவே, சத்தியத் தின் உப்பரிகையே, உம்மோடு நான் கலந்து பேச மிக ஆசிக்கிறேன்.  நானும் அவர்களும் உமது நிபந்தனைகளுக்கு உகந்த மேரையாய்க் கீழ்ப் படிந்து நடந்து கொள்ளக் கட்டளையிட்டருளும் சுவாமி. 

ஆமென்.