சேசுவின் திரு இருதயத்தை நோக்கி மன வல்லப ஜெபம்

சேசுவின் திரு இருதயமே, உமது சிநேகம் என் இருதயத்தில் பற்றியெரியச் செய்தருளும்.

சேசுவின் திரு இருதயத் திடனே, என்னைத் திடப்படுத்தியருளும்.

சேசுவின் திரு இருதய இரக்கமே, என் இருதயத்துக்கு மன்னிப்புத் தந்தருளும்.

சேசுவின் திரு இருதயப் பொறுமையே, என் இருதயக் குறைகளைப் பொறுத்தருளும்.

சேசுவின் திரு இருதய அரசாட்சியே, என் இருதயத்தை உமது கைவசப்படுத்தியருளும்.

சேசுவின் திரு இருதயச் சித்தமே, என் இருதயத்தை ஒழுங்குபடுத்தியருளும்.

சேசுவின் திரு இருதயப்பற்றுதலே, என் இருதயத்தை தகனப்பலியாக்கியருளும்.

ஜென்ம மாசணுகாத கன்னிமரியாயே, சேசுவின் திரு இருதயத்தை நோக்கி எங்களுக்காக மன்றாடும்.

ஆமென்.