நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் கட்டிக் கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும் சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் குற்றங்குறை களோடு செய்த நன்மைகளை சுத்திகரிப்பதற்காக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத் தோடும் சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் செய்யத் தவறிய நன்மைகளுக்கு ஈடாக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.
(குறிப்பு: இந்த செபத்தைத் தினமும் பக்தி யுடன் சொல்லிவந்த ஒரு சகோதரி, அதனிமித்தம் தான் உத்தரிக்கிற ஸ்தலம் போகாமல் மோட்சம் சென்றதாக தன் உடன் சகோதரிக்கு காட்சியில் தோன்றி சொல்லியுள்ளதாக ஒரு வரலாறு உள்ளது.)