சேசுநாதருடைய திரு இருதயத்தின் ஜெபமாலை

கிறீஸ்துவினுடைய ஆத்துமமானதே, என்னை அர்ச்சியசிஷ்டவனாகச் செய்தருளும். கிறீஸ்துவின் திருச்சரீரமே, என்னை இரட்சித்துக் கொள்ளும்.  கிறீஸ்துவின் திரு இரத்தமே,  எனக்குத் திருப்தி உண்டாகப் பண்ணியருளும். கிறிஸ்துவின் விலாவில் நின்று ஓடிவிழுந்த திருத்தண்ணீரே, என்னைக் கழுவியருளும். கிறீஸ்துவினுடைய திருப்பாடுகளே, எனக்குத் தேற்றரவு உண்டாகப் பண்ணியருளுங்கள். ஓ நல்ல சேசுவே!  நான் கேட்கிறதைத் தந்தருளும். உம்முடைய திருக் காயங்களுக்குள்ளே என்னை வைத்து மறைத்துக் கொள்ளும்.  என்னை உம்மை விட்டுப் பிரிய விடாதேயும். துஷ்ட சத்துருக்களிடத்திலே நின்று என்னை இரட்சித்துக் கொள்ளும்.  என் மரணத் தறுவாயில் நீர் என்னை அழைத்து உம்முடைய சந்நிதியிலுட்பட்ட சகல அர்ச்சியசிஷ்டவர்களோடு கூட நான் உம்மை ஊழியுள்ள காலம் தோத்திரம் பண்ணும்படி அடியேன் உம்முடைய சந்நிதியில் வரக் கற்பித்தருளும்.  ஆமென்.

பெரிய மணியில்: இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! என் இருதயத்தை தேவரீருடைய திரு இருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.

சிறு மணியில்: சேசுவின் மதுரமான திரு இருதயமே!  என் சிநேகமாயிரும்.

பத்து மணி முடிந்த பின்:  அர்ச்சியசிஷ்ட மரியாயின் மாசற்ற இருதயமே! என் இரட்சணியமாயிரும்.

(இம்மூன்று மனவல்லயச் செபங்களில் ஒவ்வொன்றுக்கும் 300 நாள் பலனுண்டு.)

அதன் ஒவ்வொரு பத்துமணிச் செபத்திலும் சொல்லப்பட வேண்டிய கருத்து:

1-ம் பத்துமணி - அஞ்ஞானிகள், பதிதர் முதலிய வேதவிரோதிகளால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

2-ம் பத்துமணி - பொல்லாத கிறீஸ்தவர் களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங் களுக்குப் பரிகாரமாக.

3-ம் பத்துமணி - நாம்தாமே அவருக்கு உண் டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

4-ம் பத்துமணி - சகல மனிதராலும் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகார மாக பரிசுத்த தேவமாதா சகல அர்ச்சியசிஷ்ட   வர்களுடைய சிநேகப்பற்றுதலோடு நாமும் நம்முடைய இருதயத்தை ஒப்புக்கொடுப்போம்.

5-ம் பத்து மணி - சேசுவின் திரு இருதயமே!  நாங்களும் மற்றவர்களும், உம்மை அறிந்து அதிகமதிகமாய்ச் சிநேகிக்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும்.

ஐம்பது மணி முடிந்த பின்

சேசுவின் திரு இருதயமே!  எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயின் மாசற்ற இருதயமே!  எங்கள் இரட்சணியமாயிரும்.

திரு இருதயத்தின் ஆண்டவளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருடைய திரு இருதயமானது, எங்கும் சிநேகிக்கப்படுவதாக.

என் சேசுவே! இரக்கமாயிரும்.

திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.