புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சம்மனசுக்களின் இராக்கினியான தேவமாதா படிப்பித்த ஜெபம்

ஓ!  பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே!  சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே!  ஆதிகாலமுதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் சர்வேசுரன் உமக்குத் தந்தருளினாரே!  தேவரீர் தயவுசெய்து உமது இராணுவ சேனைகளை இப் பூமியில் அனுப்பி அவர்கள் உமது வல்லமையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும், பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி, பின்தொடர்ந்து துரத்தி, அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி, நரக பாதாளத்துக்குத் திரும்பவும் அவர்களை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக.

பரிசுத்த சம்மனசுக்களே! அதிதூதர்களே! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீர்களாக.

ஆமென்.