இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிதாவிடமிருந்தும் சுதனிடமிருந்தும் புறப்படுகிறவரான இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் சரிசமமானவராயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பிதாவின் வாக்குறுதியாக இருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

மோட்ச பிரகாசத்தின் கதிரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

சகல நன்மைகளுக்கும் காரணராயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பரலோக நீரின் சுனையே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

எரித்துப் பட்சிக்கிற நெருப்பாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பற்றியெரியும் சிநேகமாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

ஞான அபிஷேகமாயிருக்கிறவரே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பரம அன்பினுடையவும், சத்தியத்தினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

ஞானத்தினுடையவும், அறிவினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

ஆலோசனையினுடையவும் திடத்தினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

புத்தியினுடையவும் பக்தியினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

தெய்வ பயத்தினுடைய இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

வரப்பிரசாதத்தினுடையவும் ஜெபத்தினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

சமாதானத்தினுடையவும் சாந்தத்தினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

அடக்கவொடுக்கத்தினுடையவும் மாசற்ற தனத்தினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

உத்தம ஆறுதலான இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

எங்களை அர்ச்சிக்கிறவரான இஸ்பிரீத்து சாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

திருச்சபையை ஆளுகிறவரான இஸ்பிரீத்து சாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

உன்னத கடவுளின் கொடையாகிய இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பிரபஞ்சத்தை நிரப்புகிறவரான இஸ்பிரீத்து சாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

சர்வேசுரனுடைய பிள்ளைகளின் சுவீகாரமாகிய இஸ்பிரீத்துசாந்துவே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

பாவத்தின் மட்டில் பயங்கரத்தை இஸ்பிரீத்துசாந்துவே எங்களிடம் மூட்டியருளும்.

இப்பூவுலகத்தின் முகத்தை இஸ்பிரீத்துசாந்துவே வந்து புதுப்பித்தருளும்.

எங்களுடைய ஆத்துமங்களிலே, இஸ்பிரீத்துசாந்துவே உம்முடைய ஒளியைப் பொழிந்தருளும்.

எங்களுடைய இருதயங்களிலே, இஸ்பிரீத்துசாந்துவே உம்முடைய நெறியைப் பதிப்பித்தருளும்.

உம்முடைய சிநேகத்தின் சுவாலையினால், இஸ்பிரீத்துசாந்துவே எங்களைப் பற்றி யயரியச் செய்தருளும்.

உம்முடைய வரப்பிரசாதப் பொக்கிஷங்களை, இஸ்பிரீத்துசாந்துவே எங்களுக்குத் திறந் தருளும்.

நன்றாக ஜெபிப்பதற்கு, இஸ்பிரீத்துசாந்துவே எங்களுக்குப் படிப்பித் தருளும்.

உம்முடைய பரலோக ஏவுதல்களினால், இஸ்பிரீத்துசாந்துவே, எங்களை ஒளிர்வித் தருளும்.

இரட்சணியத்தின் பாதையிலே, இஸ்பிரீத்துசாந்துவே எங்களை நடத்தி யருளும்.

அவசியமாயிருக்கிற ஒரே ஞானத்தை, இஸ்பிரீத்துசாந்துவே எங்களுக்குத் தந்தருளும்.

நன்மை செய்யும் பயிற்சியிலே, இஸ்பிரீத்துசாந்துவே எங்களைத் தூண்டி யருளும்.

எல்லாப் புண்ணியங்களின் பேறுபலன்களையும், இஸ்பிரீத்துசாந்துவே எங்களுக்குத் தந்தருளும்.

நீதியிலே நிலைத்து நீடித்திருக்கும்படி, இஸ்பிரீத்துசாந்துவே எங்களுக்கு உதவி யருளும்.

எங்களுடைய நித்திய வெகுமானமாக, இஸ்பிரீத்துசாந்துவே நீரே இருப்பீராக.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவை எங்களிடம் அனுப்பியருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களை எங்கள் ஆத்துமத்தில் பொழிந்தருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, ஞானத்தினுடையவும் பக்தியினுடையவும் இஸ்பிரீத்துசாந்துவை எங்களுக்குத் தந்தருளும்.

இஸ்பிரீத்துசாந்துவே, தேவரீர் எழுந்தருளி வாரும்.  உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும்.  

பிரார்த்திக்கக்கடவோம்

இரக்கமுள்ள பிதாவே! உம்முடைய தெய்வீக இஸ்பிரீத்துவானவர் எங்களைப் பிரகாசப்படுத்தி பற்றி எரியச் செய்து பரிசுத்தப்படுத்தும்படி எங்களுக்கு அருள்வீராக. இதனால் அவருடைய மோட்ச பனிப்பொழிதலினால் எங்களை ஊடுருவி, நாங்கள் நற்கிரியைகளில் வளமுடையவர்களாகச் செய்தருளும். உம்மோடும் அதே இஸ்பிரீத்துசாந்துவோடும் இராச்சியபாரம் செய்கிற எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென்.