(ஒரு நாளுக்கு ஒருமுறை பரிபூரண பலன்.)
ஆமென்.
ஓ சேசு கிறீஸ்து நாதரே, அடியேன் தேவரீரை இந்தப் பிரபஞ்சத்தின் அரசராக ஏற்றுக் கொள்கிறேன். சிருஷ்டிக்கப்பட்ட சகலமும் உமக்காகவே உண்டாக்கப் பட்டுள்ளன. உமது சகல உரிமைகளையும் அடியேன் மீது பிரயோகித்தருளும். என் ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை இப்போது புதுப்பிக்கிறேன். பசாசையும், அதன் கிரியைகளையும், ஆரவாரங்களையும் நான் விட்டு விடுகிறேன். ஒரு நல்ல கத்தோலிக்க வாழ்வு வாழ்வதாகவும், சர்வேசுரனும் உமது திருச்சபையும் சிருஷ்டிகளின் மீது கொண்டுள்ள உரிமைகளின் வெற்றியை ஸ்தாபிக்க என் சக்திக்குபட்ட எல்லாவற்றையும் செய்வேனென்றும் நான் வாக்களிக்கிறேன். சேசுவின் தெய்வீக இருதயமே, உமது அரசத்துவத்தை எல்லா இருதயங்களும் ஏற்றுக் கொள்ளும் படியாகவும், இவ்வாறு உமது சமாதானத்தின் ஆட்சி இந்த உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்படும்படியாகவும் என் எளிய செயல்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
ஆமென்.