சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிதாவின் திருச்சுதனாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிதாவின் பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய ஒளியின் தூய்மையாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மட்டில்லாத மகிமை உடைத்தான இராஜாவாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நீதி ஆதித்தனாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த கன்னிமரியாயின் குமாரனாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மகா அன்புக்குரிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஆச்சரியத்துக்குரிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மிகுந்த வல்லபக் கடவுளாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வரப்போகிற பாக்கியங்களுக்குக் காரணமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரம ஆலோசனைகளின் திவ்விய தூதரான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மகா சக்தியுடைத்தான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மகா பொறுமையுள்ள சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மகா சிரவணம் பொருந்திய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனத்தாழ்ச்சியையும் மதுர குணத்தையும் கொண்டிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கற்பை சிநேகிக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் அன்பரான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சமாதான தேவனாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சீவியத்துக்குக் காரணராயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஆத்துமங்களை இரட்சிக்கிறதிலே மகா ஆசையுள்ள சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் தேவனாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தரித்திரருடைய பிதாவாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விசுவாசிகளுடைய பொக்கிஷமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நல்ல ஆயராயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உண்மையான பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய ஞானமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மட்டில்லாத நன்மைத்தனத்தைக் கொண்டிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் சீவியமும், உண்மையும், வழியுமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுடைய சந்தோஷமாயிருக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிதாப்பிதாக்களுக்கு இராஜாவாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தீர்க்கதரிசிகளுக்கு ஞானம் கொடுக்கிற சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அப்போஸ்தலர்களுக்கு குருவாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சுவிசேஷகருக்குப் போதகரான சேசுவே. எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளுக்குத் திடனான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

துதியருடைய பிரகாசமான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விரத்தருடைய துப்புரவான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல அர்ச்சிஷ்டவர்களுக்கு முடியான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பாவங்களிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கோபத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசின் தந்திரத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மோக ஆசையிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நித்திய மரணத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் தருகிற தரும் விசாரங்களை அசட்டை பண்ணுகிற துர்க்குணத்திலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மனிதாவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பிறப்பைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய விருத்தசேதனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பிரயாசத்தையும் பிரயாணங் களையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கஸ்தியையும் இரத்த வேர்வை யையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சிலுவையையும் பாடுகளையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங் களையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மரணத்தையும் அடக்கத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஆச்சரியமான ஆரோகணத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சந்தோஷத்தையும் மகிமையையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற நாளிலே, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் திவ்விய இரட்சகருமாய் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறீஸ்துவே! எங்கள் ஆத்துமத்தையும் சரீரத்தையும் புத்தி மனது நினைவையும் எங்களுக்கு உண்டான சகலத்தையும் உமக்கு காணிக்கையாக வைக்கிறோம். நாங்கள் எங்கள் சிந்தனை வாக்குக் கிரிகைகளினாலே முழுதும் உம்மைச் சிநேகிக்கவும், துதிக்கவும், உமது திவ்விய சிநேகத்தின் அக்கினியால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்களுக்கு இதுவே போதும். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் சீவியருமாய் இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற ஆண்டவரே.

ஆமென்.