மாமரியின் மாசற்ற இதயத்திற்குஅர்ப்பணிக்கும் ஜெபம்:

கன்னி மரியே! இறைவனின் தாயே! எங்களின் அன்னையே! ஆண்டவருக்குக் காணிக்கையாக்கும் படி, எங்களையே உம் திரு மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கின்றோம். நீர் எம்மை யேசுவிடம் வழி நடத்திச் செல்லும். அவர் எங்களை தந்தையிடம் கூட்டி சேர்ப்பார். நாங்கள் எவ்வகையிலும் விசுவாச ஒளியில் நடப்போம், இதனால் யேசுவே இறைவனால் அனுப்பப்பட்டவர் என உலகம் அறிந்து கோள்ளும். அவரில் நிலைத்திருந்து, அவரது அன்பையும், மீட்பையும் உலகின் கடை எல்லை வரை கொண்டு செல்ல ஆசிக்கின்றோம். உமது மாசற்ற திரு இதயத்தின் வழித்துணையால் ஒரே மக்களாக யேசுவோடு இணைந்திருப்போம். அவரது உயிர்ப்புக்கு சான்று பகர்வோம். தூய திருத்துவத்தின் மகிமைக்காக யேசுவே எம்மை இறைத் தந்தையிடம் வழி நடத்துவார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக!

ஆமென்.