நீண்ட உத்தம மனஸ்தாப செபம்.

என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால்  எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன்.

ஆமென்.