இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருக்குடும்பத்தை நோக்கிச் செபம்:

இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே!

உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இரந்து மன்றாடிக் கேட்ட எவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.

இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள்.

ஆமென்.