அர்ச்சியசிஷ்ட லூசியாள் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளுக்கு இராக்கினியாய் இருக்கிற அர்சிஷ்ட மரியாயே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிசிலி என்ற தீவில் சீர்கூசா நகரத்தின் ஞான நட்சத்திரமாகிய  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உயர்ந்த கோத்திரத்தில் யுற்றிக்கியாளிடம் பிறந்த  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமக்கு ஐந்து வயதாகும்போது உமது தாயாரால் சிறந்த நேசத்தோடு அரவணைக்கப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறிய வயதில் தன்னைப் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தவரான  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எப்பொழுதும் கண்ணிமையாய் இருப்பேனென்று வாக்குக் கொடுத்தவரான  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகவும் அழகுள்ள அலங்காரமிக்க  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது அன்னைக்கு இருந்த பெரும்பாடான வியாதியை உமது வேண்டுதலினால் குணப்படுத்தியவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமக்கு தகுந்த வயது வந்தவுடன் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்ற உமது தாயின் எண்ணத்தை முழுவதும் வெறுத்துத் தள்ளின  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது திருமணத்திற்காக வைத்திருந்த செல்வத்தையெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்த
தருமக்கண்ணாடியான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தான் இறைவனுடைய வேதத்தைக் கடைப்பிடிக்கிறவள் என்று புற மதத்தவரான கொடூர அரசனுக்கு அறிவிக்கப்பட்ட  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதத்தை விட்டு விடும்படி அந்தக் கொடூர அரசனால் வெகு துன்பப்படுத்தப்பட் புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அரசன் சொன்ன துர்புத்திகளை  எல்லாம் உத்தம நியாயத்தோடு மறுத்த  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது கற்புக்கு விரோதமாக துன்புறுத்தப்பட்ட  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனுடைய புதுமையால் நீர் நின்ற நிலை தவறாமல் அற்புதமாகக் காப்பாற்றப்பட்ட  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்பின் ஆபரணப் பொக்கிஷம் எனப்பட்ட  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கோபம் கொண்ட அரசனால் எரிகின்ற தீச் சுவாலையில் தள்ளப்பட்ட புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தத் தீச் சுவாலையில் நீர் சாகவேண்டி இருந்தாலும் உமது ஆடைகள் முதலாய் கருகாமல் காப்பாற்றப்பட்ட
 புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எண்ணிறைந்த அற்புதங்களில் விளங்கியவரான  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது திருக்கண்கள் பிடுங்கப்பட்ட  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருடருக்குப் பார்வை கொடுப்பதில் அற்புத வரம் பெற்றவரான  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கண் நோயால் கண்ணீர் சிந்தி கையேந்தி நின்று பரிதவிக்கும் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும்  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசத்தில் ஒரு போதும் தத்தளியாத உத்தம வேத சாட்சியான  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதத்திற்க்காக உயிரைக்கொடுத்து பரலோக அரசில் மகிமைக்குரிய இடம் பெற்றவரான  புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு தவறாமல் வரம் கொடுக்கிறவரான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைப்பார்த்து வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு மிகவும் அன்புள்ள தாயான புனித லூசியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக,
எல்லாம் வல்ல இறைவா! புனித லூசியம்மாளின் கன்னிமையாலும், வேத சாட்சி மகிமையாலும் விண்ணகத்திற்கு எழுந்தருளி பேரின்ப பாக்கியத்தை அடையப் பெற்றாரே, அந்த அம்மாளுடைய இரக்கமான மன்றாட்டினால் எங்களுக்கு இவ்வுலகில் வருகிற எல்லா துன்பங்களையும் பொறுமையுடனே சகித்து நாங்களும் அவர்களைப் போல் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து விண்ணகமடைய வரமருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.