சுப மங்கள மாதாவிடம் ஜெபம்.

சுப மங்கள மாதாவே! இரு நல் மனங்களை ஒன்றிணைத்து அவர்களின் மகிழ்ச்சியில் களிகூரும் அன்னையே! உம்மை நோக்கி மன்றாடும் உம் பிள்ளையின் கூக்குரலைக் கேட்டருளும்.

உம்மைப் பொறுப்போடும், அன்போடும், அக்கறையோடும் பராமரிக்க, அன்பு காட்ட, புனித சூசையப்பரைப் பெற பேறு பெற்ற தாயே! இன்பத்திலும் துன்பத்திலும் என்னை ஏற்றுக் கொண்டு மதித்து அன்பு செய்யும் நல்லதொரு துணையைத் தேடித் தாரும்.

அன்னையே! உம்மால் எல்லாம் கூடும். என் வாழ்வில் இல்வாழ்க்கை என்னும் ஆசீர்வாதத்தால் நல்வாழ்க்கை துணை என்னும் பேரருளை ஏற்றி ஒளிர்வித்தருளும்.

நீர் உருவாக்கிய திருக்குடும்பத்தைப் போல நானும் எனது எளிய இல்லற வாழ்வால் நல்லதொரு குடும்பத்தை உருவாக்கி தாய் திருச்சபை செழுமையுற எனக்காக மன்றாடும் தாயே!

ஆமென்.