காணிக்கை மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனுக்குலத்தின் உத்தமமாகிய புனித காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பழைய ஏற்பாட்டின் நிபந்தனைகள் உம்மைத் தொடாதிருக்க அவைகளை நுணுக்கமாய் அனுசரித்து மனுக்குலத்துக்கு நன்மாதிரிகையாக சுத்திகரத்தின் சடங்குகளை நிறைவேற்ற ஆசைப்பட்ட காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தபடியினாலே உம்மை மாசு அணுகாதிருக்க மாசுள்ளவர்கள் செய்ய வேண்டிய கைங்கரியங்களைத் தாழ்ச்சியினாலே செய்யத் துணிந்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய திருக்குமாரனைத் தேவாலயத்தில் பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறதர்க்கு முன்பே அவர் பிறந்த இடத்துக்குப் போய் சாஷ்டாங்கமாக பிதாவை வணங்கின காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வரிவேத விதிப்படி இக்கருமத்தை நிறைவேற்ற நாற்பது நாள் மட்டும் காத்துக் கொண்டிருந்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவாலயத்துக்கு வெறுங்காலாய்ப் போக புனித சூசையப்பரை உத்தாரம் கேட்ட காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அருளை ஆபரணமாகப் பூண்டு இருதயம் பரிசுத்த ஆவியினாலே விம்ம பரம தியானத்தில் மூழ்கி வழிநடந்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாலனாகிய தேவனைக் கையில் ஏந்திக் கொண்டு தேவாலயமட்டும் போக ஆசித்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா மிருதுவான உமது திருத்தேகம் மெலிந்து களைக்காமல் சூசையப்பர் திருப்பாலனை ஏந்திக் கொண்டு போனாலும் உம்முடைய ஆசையின் பொருளாகிய குழந்தையான சுவாமியின் பேரிலே கண்களை தாழ்த்தி பேரின்ப சந்தோசத்தில் அமிழ்ந்தின காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோக நரர்களாலே சூழப்படாவிடினும் பதினாயிரம் சம்மனசுக்களாலே சூழப்பட்டு ஆனந்த அக்களிப்போடு நடந்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனுடைய கதிர்கள் பட்டு தேவபாலன் நொடிப்பதைக் கண்டு சிருஷ்டிப்பின் பேரிலே உமக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு சூரியனுடைய உஷ்ணத்தை மாற்றின காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் ஜெருசலேம் பட்டணத்துக்குப் போகும் முன்பே செபத்தவக் குருவாகிய சிமியோன் என்பவருக்கும் , பரமானந்த தியானியாகிய அன்னம்மாளுக்கும் உமது வருகையைப் பிதாவானவர் வெளிப்படுத்த வரம் பெற்ற காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மூன்று ராசாக்கள் கொடுத்த வெகுமானங்களை இரகசியமாக இராத்திரி காலத்திலே தேவாலயத்துக்கு அனுப்பின காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவாலயத்துக்குச் சென்ற உடனே மகா தாழ்ச்சி வினயத்துடனே தீர்க்கத்தண்டனாக விழுந்து பரம பிதாவை வணங்கி புனித சூசையப்பர் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்ட காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தேவாலயத்துக்கு சிமியோன் என்பவர் வந்து மகா சங்கையோடே திவ்விய பாலனைக் கேட்க அவர் கையிலே அந்த பாலனைச் சந்தோசத்தோடே கொடுத்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிமியோன் என்னும் அப்பரம ரிஷி இரட்சணிய பாலனைக் கையிலே ஏந்தி நித்திய பிதாவுக்காக ஒப்புக்கொடுத்த பிறகு மனுக்குலத்துக்காக அவர் படப்போகிற பாடுகளினாலே உமது இருதயம் வியாகுல அம்பினால் ஊடுருவப் படுமென்று வசனித்தபோது மகா மதுரம் பொருந்திய கீழ்ப்படிதலோடு தேவ சித்தத்துக்கு அமைந்திருந்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நெடுநாள் செபத்தியானியாகிய புனித அன்னம்மாள் அநேகர் இவருடைய பாட்டின் பங்கடையாமல் போவார்கள் என்று சொல்லக் கேட்டு துக்கத்தால் விம்மி நின்ற காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேத ஆசாரப்பிரகாரம் மகா எளிமைத்தனத்தோடும் தாழ்ச்சியோடும் , காணிக்கையினுடையவும் உம்முடைய சுத்திகரத்தினுடையவும் சடங்குகளை எல்லாம் நிறைவேற்றின பிற்பாடு அந்நாள் எல்லாம் ஆனந்த செபத்தியானத்தில் மூழ்கி இருந்த காணிக்கை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.