அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!

கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!

பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!

புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அச்சிறுபாக்கத்தின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆரோக்கிய மழை மலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நல்லாயன் குன்றின் நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயாளிகளுக்கு நற்சுகமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அன்டிவந்தோரின் அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அற்புதங்களை மழையாய்ப் பொழியும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெண்களுக்குள் பேறு பெற்ற தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவை உதரத்தில் தாங்கிய தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனிடம் பரிந்து பேசும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வார்த்தைக்குச் செவிமடுத்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வார்த்தைக்கு அடிமை என்று தாழ்த்திய தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆகட்டும் என்று அடிபணிந்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அருள் நிறைந்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எலிசபெத்துக்கு உதவி செய்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறரது துன்பத்தைப் பகிர்ந்து கொண்ட தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கானாவூர் குறை தீர்த்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவின் சொல்படி செய்யப் பணித்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாய்மையின் உதாரணமே தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உள்ளத்தில் இருத்தி தியானித்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுவுடன் தோள் கொடுத்துச் சென்ற தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சீடர்களுடன் சேர்ந்து செபித்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சீடர்களை உறுதிப்படுத்திய தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருக்குடும்பத் திருவிளக்கே தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருச்சபையின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புரட்சியால் புனிதம் கண்ட தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புதுமைகள் புரியும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவத்தை வெறுக்கும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவியை அரவணைக்கும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆவியால் வழிநடத்தப்பட்ட தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆண்டவரை ஏற்றிப் போற்றிய தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடுதலை கீதம் இசைத்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடியலுக்காய் மகனைக் கையளித்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ந்தோரை உயர்த்த ஆசித்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசித்தோருக்கு நலன் தர துடித்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செல்வரை வெறுமையாகக வேகம் கொண்ட தாயே

செருக்குற்றோர் சிதறிட சிந்தை கொண்ட தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வலியோரை வீழ்த்த ஆவல் கொண்ட தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்த்தப்பட்டவர்களின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரலே தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நசுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையே தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மதங்களைக் கடந்த தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனிதம் மலர அருள் புரியும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமத்துவம் மலர ஜெபிக்கும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமாதானத்தை விரும்பும் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே, எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே, எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே,  எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

எங்கள் அன்பு அன்னையே உம்மீது நம்பிக்கையோடு நாடி வந்திருக்கின்ற
எங்களது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து நாங்களும் உம்மைப் போல் மாற அருள் தாரும்

முதல் : இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக. சர்வேசுரனுடைய புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.