கட்டுகள் அவிழ செபம்.

சங்கீதம் 91 படித்து தியானிக்கவும்:

விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆதலால் நீங்கள் சென்று எல்லா இனத்தாரையும் என் சீடராக்குங்கள். விசுவசிப்பவர்களிடம் இவ்வடையாளங்கள் இருக்கும். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புது மொழிகளை பேசுவர், நோயாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்கள் நலம் அடையவும் செய்வர். நானோ இதோ உலகம் முடியும் கொணர உங்களுடன் இருப்பேன் என்று அருள் செய்த உயிருள்ள இறைவனின் மகனாகிய இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் திருச்சரீரம், திரு இரத்தம் இவைகளின் பாதுகாவலிலும் அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயின் பாதுகாவலிலும், போ அப்பாலே சாத்தானே!

என்னிடமிருந்து, என் குடும்பத்தினரிடமிருந்து, நிலபுலன்களிடமிருந்து, பணியிடங்களிடமிருந்து, என்னுடன் பணியாற்றுகிறவர்களிடமிருந்து, இயேசுவின் பெயரால் புனித சிலுவை, அர்ச்சியசிஷ்ட கன்னிமரி, அர்ச்சியசிஷ்ட மிக்கேல் அதிதூதர், அனைத்து துாதர்கள், அனைத்துப் புனிதர்கள் ஆகியோரின் பாதுகாவலிலும், பரிந்துரையாலும் உன்னை நான் இயேசுவின் சிலுவையின் அடிப்பக்கத்திற்கு விரட்டி விடுகிறோம்.

இயேசுவே, நீர் எங்களுக்காக கல்வாரியில் சிந்தின விலை மதிக்கப்பெறாத திரு இரத்தத்தால் எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் எங்களுக்குள்ள அனைத்தையும் அபிஷேகம் செய்யவும், பாதுகாக்கவும் செய்தருளும்.

இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் பகைமை, வெறுப்பு, சோம்பல், பொறாமை, கோபம், அகங்காரம், குடிவெறி, காமவெறி, பொருளாசை, ஆகியவற்றின் ஆவிகள் எங்களிடமிருந்து அகன்று போகட்டும். தெய்வமே ஸ்தோத்திரம், தெய்வமே நன்றி.

ஆமென்.